Blog Archive

Monday, April 30, 2018

அழகர் வந்தார்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 புதிய தலைமுறை லைவ் தொலைக்காட்சி வழியாக மனம் நிறைய அழகர்
ஆற்றில் இறங்குவதைப் பார்த்தாச்சு.

அந்தக் குதிரையின் கம்பீரம் எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை.
மேல் கோலாகலமாகப் பச்சைப் பட்டாடை உடுத்தி

குதிரையை ஓட்டும் அழகுக் கம்பை நீட்டியபடி, அளவில்லா ஆபரணங்களும்,
சுந்தர பாஹு என்ற பெயருக்கேற்ற தோள்களில்
பாரமாய் மாலைகளும்.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் அனுப்பிய மாலையின் பெருமை முகத்தில் பிரதி பலிக்க
அவர் வரும் அழகை என்ன சொல்வது.
எதிர் சேவை வழங்கிய அழகா கோடி நமஸ்காரங்கள்.

Sunday, April 29, 2018

ஸ்ரீ நரசிம்ஹ பிரபாவம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
   திருச்சியில் நாங்கள் இருந்த போது, மாமனாரும் மாமியாரும் ஒரு மாதம் அங்கு தங்க வந்தார்கள்.
அப்போது எனக்கு திடீர் என உடல் நலம் சரியில்லாமல்
போனது.

வந்த இடத்தில் அம்மாவுக்கு வேலை.
அவர் முடிந்ததைச் செய்து பார்த்தார். நீ நிம்மதியாக இரும் நாளைக்குச் சரியாகிவிடும் என்று சஹஸ்ரனாமமும்  ஸ்ரீ நரசிம்ஹ அஷடகமும் சொல்லிக் கொண்டே இருந்தார்.
எப்படியோ நான் தூங்கி விட்டேன்.
நடுராத்திரியில்  குழந்தைகள் சாப்பிட்டார்களா தூங்கினார்களா என்று கவலை வந்தது.

சட்டென்று  நரசிம்ஹா,நரசிம்ஹா என்ற சப்தம் சுற்றி வருவது போலத் தோன்றியது.
அபரிமிதமான அமைதி என்னைச் சூழ்ந்தது.
மாமியாரைப் பார்த்தேன். அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்தக் கவச மந்திரம் எங்கே இருந்து வந்தது
என்று எனக்குப் புரிந்தது. நாள் முழுவதும் அம்மா சொன்ன நாம ஜபமே
என்னைக் காப்பாற்றி இருக்கிறது. லக்ஷ்மி ந்ருசிம்ஹா என்னை நல்ல இடத்தில் சேர்த்தாய். எப்பொழுதும் எங்களைக் காப்பாய் என்று துதித்துக் கண்களை மூடி உறங்கினேன்.
இந்த ஆழ்ந்த பக்தியை என்னுள் விதைத்த அப்பாவுக்கு, என் மாமியாருக்கும் என்றும் கடன் பட்டிருக்கிறேன்.

Thursday, April 26, 2018

மதுரை 1955 சித்திரை

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஈசன் அடி  போற்றி.
இளங்காலை பசும் தென்றல் வயல் வெளியிலிருந்து கிளம்பி வரும்போதே குரல் கொடுப்பார் பாட்டி. இடம் பழங்காநத்தம்.

 திருமங்கலத்தில்   இருந்து அங்கே வருவதற்குசித்தப்பாவின்JEEPவந்துவிடும். பனிரெண்டு மைல்.

இரண்டே செட் துணிமணிகள்.
ரங்கன்  இந்தப் பயணங்களுக்கு கிடையாது. முதலில் ஜீ ப்பில் ஏறுவது அவன் தான்.
அப்பா அவனை வேறு இடம் அழைத்துப் போவதாகச் சொல்லி இறக்கி விடுவார்.


மூன்று  வயதுக்கு குழந்தைக்கு என்ன தெரியும்.
அவனே மானஸீகமாக வண்டி ஒட்டிக் கொண்டு வீட்டிற்குள் போய் விடுவான்,.
எங்களுடன் உத்ஸாகப் பேசியபடியே சித்தப்பா வண்டி ஓட்டும் அழகை நான் பார்ப்பேன்.
வண்டி குதித்து ஏறி இறங்கும் போதெல்லாம் குதுகலம் .

பழங்காநத்தம் வந்ததும்  பாட்டி தாத்தா ராஜ்ஜியம்.

அங்கே பின்புறத்தில் சித்தப்பா  குடும்பம். அதாவது பாட்டியின் தங்கை குடும்பம்.

அதைத்தவிர இன்னும் ஆறு வீடுகள் இருந்தன.
 தாத்தாவின் முதல் வரவேற்பு முரளிக்குத்தான்.

என்னடா  பளிச் பளிச்ன்னு பதில் சொல்றயா என்பார்.
என்னை  பார்த்ததும் ,கைகால் அலம்பிண்டு
பாட்டிக்கு   உதவி பண்ணு .
 அப்பத்தான்கீரைக்குழம்பு கிடைக்கும் என்றதும் நான் உள்ளே ஓடிவிடு வேன் .

சித்தப்பா அறையில் ஒரு நல்ல பெரிய  ஜன்னல் இருக்கும். அதன் வழிபார்த்தால்    பக்கத்து வயல் வெளியில் நடக்கும் வேலைகள் தெரியும். அறுவடை முடிந்ததும்
அங்கே சினிமாக் கொட்டகை வந்துவிடும்.
சாயந்திரமானால் ராஜா ராணி வசனங்கள் கேட்கும். கலர் கலராக டிக்கெட்டுகள் வாங்கி  மக்கள் உள்ளே செல்லும் காட்சி தெரியும். அங்கு திரையிடப்பட்ட அத்தனை படங்களின் வசனமும்
எனக்கு அத்துப்படி.

அங்கே படம் பார்க்காதது எனக்கு வருத்தம் தான்.😊😊😊
சிவாஜி கணேசனின் அசோகா நாடகம், பிள்ளைக்கனியமுது படப்பாடல்கள் எல்லாம் காதில் விழும்.


கொசு தொந்தரவு நிறைய ஆனதும் சித்தப்பா கறுப்புத் தார் அடித்த தட்டிகள் போட்டு மறைத்து விட்டார்.

அந்த நாட்களில் காலை எழுந்திருப்பது, உமிக்கரியில் பல் தேய்க்கவே.
 தாத்தா ஒரு பக்கம் சந்தியா வந்தனம் செய்வார்.
பாட்டி வந்து வேப்ப மரத்தில் இருந்து கொழுந்துகளாகப் பறித்து
எங்கள் இருவருக்கும் முதல் உணவாகக் கொடுப்பார்,.

பால் வந்ததும் பாட்டி காய்ச்சி முடிப்பதற்குள், தாத்தா இருவருக்கும் இரண்டு பேரி ச்சம்பழங்கள் கொடுத்து, ஒரு நல்ல மலை வாழைப்பழமும் கொடுப்பார்.


பிறகுதான் காப்பி.  காப்பியில்
 நுரையே இல்லியே என்று கேட்பேன்.
இந்தப் பாட்டி நக்கலாகப் பேசுவார்.
மாடு விளக்கெண்ணெய்  சாப்பிட்டதாம். அதனால் தான் பால் நுரைக்கலைன்னு சிரிக்காமல் சொல்வார்.

அதற்குள் தாத்தா வாசலில் கொட்டகையின் கீழ் ஈஸி சேரில்
படுத்துக் கொண்டு எங்களை அன்று வந்த தினசரிகள், மஞ்சரி, லிப்கோ புத்தகங்களை வரிசையாகப் படிக்கச் சொ ல்வார். தம்பிக்கு வயது குறைவுதான் என்றாலும்  எழுத்துக்கு கூட்டிப் படித்து விடுவான்.
அடுத்தாற்போல் மாகாணி,வீசம் என்று வாய்ப்பாடு.

பாதி முடித்ததும் பாட்டி ,பழையது பிசைந்து வைத்துக் கொண்டு கையில்   இலையை ஏந்தி சாப்பிடக் கூப்பிடுவார்.

உனக்கு குழந்தைகள் படிப்பைக் கெடுப்பதே வேலை.
இன்னும் கொஞ்சம் நேரம் போனால் என்ன.
கவனம்  கெட்டது பார் என்று அதட்டுவார்.

பாட்டி அதை எல்லாம் லட்சியமே செய்ய மாட்டார்.
//எட்டுமணிக்குச் சாப்பிட்டு அதுகளுக்கு வழக்கம்.
பாவம் குழந்தைகள் //
😢என்று தயிர் , முந்தைய நாள் ரஸ மண்டி கலந்த தயிர் சாதத்தை, கைகளை உருட்டிப் போடுவார்.

  சட்டியில் உணவு தீர்ந்ததும் அதில் சாத்தேர்த்தம் என்று இன்னும் தண்ணீர்
விட்டுத் தானும் குடித்துவிடுவார்.
தாத்தாவுக்கு த்ரெப்டின் பிஸ்கட் தான் காலை உணவு  .
தாத்தா எங்களைக் குளிப்பாட்ட பொதுக் கிணற்றடிக்கு அழைத்துச் செல்வார்.

அவர் வந்தால் அங்கிருக்கும் பெண்மணிகள் நகர்ந்து விடுவார்கள்.

இந்த பாக்கியம், தாத்தா தண்ணீர் இறைத்து எங்கள்  மேல்விட லைப் பாய் சோப் வைத்துத் தேய்த்துக் கொண்டு குளிக்கும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்.
  இன்று என்னருமைத் தாத்தாவின் படம் ஒன்று கூட என்னிடம் இல்லை.

இந்தா , குட்டி ,,,சொம்பில் பாட்டிக்குத் தண்ணீர் எடுத்துக் கொண்டு போ என்று கொடுப்பார்.
நானும் தம்பியும் அம்மா கொடுத்திருந்த சிவப்புத துண்டை இடையில் கட்டிக் கொண்டு வீட்டுக்கு  வந்து விடுவோம்.

பாட்டி மண் அடுப்பில் சமைக்கும் குழம்பு வாசனை வீட்டைத் தூக்கும். ஆண்டா, இன்னிக்குச் சந்தைக்குப் போய் எல்லாம் வாங்கிண்டு வரலாம்.
இப்போதைக்கு குழம்பும் கீரையும் வடாமும் தான்
என்பார் பாட்டி.

மத்தியானம் சித்திரைத் திருவிழாவுக்கு டவுனுக்குப் போகலாம்.

தாத்தாவும் முரளியும் இங்க இருக்கட்டும் என்பார் ரகசியமாக.
பிறகென்ன சுவாரஸ்யம் தான். தொடரும்.


இந்தப்  பதிவில் ஏகப்பட்ட   எழுத்துப் பிழைகள் . அதைப் படித்து
எனக்கு சொன்ன  எங்கள்  ப்ளாக்  ஸ்ரீராமுக்கு   மனம் நிறைந்த நன்றி,

Sunday, April 22, 2018

காஞ்சி பயணம் இனிதே பூர்த்தியானது. அப்பா 70 6 ஆவது பாகம்.

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தொடர்ந்து பொறுமையாகப் படித்தவர்களுக்கு
மிக மிக நன்றி.
அடுத்த நாள்  காலை காப்பி மண த்தோடு விடிந்தது.
 அம்மாவும்  அகிலா மாமியும் 4  மணிக்கே எழுந்து , பால் வாங்கி வந்து  காப்பி டிகாக்ஷன் இரண்டு பெரிய பில்டரில் போட்டு வைத்திருந்தனர்.

 சமயலறை நல்ல விசாலம். பற்பசை வாங்க மறந்த நான் மாமியிடம் உமிக்கரி இருக்கா என்று கேட்டேன். மாமி சிரித்துவிட்டாள்.
கட்டாயம் தரேன் என்று கிணற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார். சுற்றிவர நந்தியா வட்டையும், செம்பருத்தியும்,
நித்தியா மல்லியும்.
பல் தேச்சுட்டு  இரண்டு குளியலறையில் எது சவுகர்யமோ உபயோகப் படுத்துக்கோ. மஞ்சப் பொடி தீத்திண்டு குளி

. உன் புது சாரி பக்கத்து அறையில் இருக்கு என்று சொன்ன படி உள்ளே விரைந்தார்.
அடே யப்பா இந்த வயசில் மாமி சுறு சுருப்பைப் பாரேன்
என்று எனக்கு ஆச்சர்யம்.

தோய்க்கிற கல்லில்  உட்கார்ந்து பல் தேய்த்தேன். சுகானுபவம்.
மாமியின் மருமகள் வருவது தெரிந்தது  28 வயதுதான் இருக்கும். கருவுற்ற அழகு பார்க்க அருமை. அக்கா
உங்களுக்கு இங்க சவுகர்யமா இருக்கா என்று ஆசையுடன் கேட்கும்  அபிராமியை ஆசையுடன் பார்த்தேன். நீ கேட்கறதே அழகா இருக்கே. கண்ணா. இந்த ஊரில் இத்தனை சவுகர்யம் நான் எதிர்பார்க்கவில்லை என்றேன்.


எல்லாம் அப்பா பார்த்து பார்த்து செய்தார் அக்கா. அம்மா அப்பாவுக்கு இந்தியன் டாய்லெட், எங்களுக்கு வெஸ்டர்ன்
என்று தனியாகக் காட்டினார்.
மழை நாளில் நனையக் கூடாது என்று மேலே  கான்க்ரீட்
போட்டு தளம் போட்டார்.
கிச்சனில் எல்லாம் மாடர்ன்.
 பாத்திரங்கள் தேய்க்க, துணி தோய்த்து உலர்த்த ,மடிக்க என்று ஆள் இருக்கு.
அம்மா அப்பா துணிகள் அவர்களே  மடியாக உலர்த்திக் கொள்வார்கள்.
அப்பாவுக்கு பூஜை செய்ய அதுதான் தோது .
அம்மாவுக்கு  ஊஞ்சல் ஆசை. அதையும் செய்து விட்டார்.
நான் ரொம்பக் கொடுத்து வைத்திருக்கிறேன் என்று சொல்லும் அந்தக் குழந்தையைப் பார்த்து   நெகிழ்ந்தது.

உங்க பொண்ணுக்கு எப்ப அக்கா கல்யாணம் என்று கேட்டதும் சொன்னேன். சி ஏ  பாஸ் பண்ணி வேலை யில் இருக்கிறாள். உயரம் ,அதுக்கேத்த ஆறடி நல்லவனைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என்றேன் சிரித்தபடி.

காமாக்ஷியையும், காஞ்சிப்பெரியவாளையும் தரிசனம் பண்ணுங்கோக்கா. நல்லது நடக்கும் என்று அந்தப் பெரிய மனுஷி சொன்னாள் .
அக்கா உங்களுக்கு மருதாணி ரொம்பப் பிடிக்கும்னு அம்மா சொன்னார். பறித்து அரைத்துக் கொடுக்கிறேன் என்று எழுந்தாள். இரு நானும் வரேன்  என்றபடி நான் எழுத்திருக்க என் தம்பிகளின் மனைவியரும் கலந்து கொண்டனர்.

சமையலறையிலிருந்து, அகிலா மாமியின் குரல் அழைத்தது.  சீக்கிரம் கிளம்பனும் வாங்கோ    பெண் களா ...
அப்படி இப்படி 10 மணி ஆகிவிட்டது.
முதலில் பெரியவா, அப்புறம் காமாட்சியும் ,வரதனும்  .இதுதான் திட்டம்.

எல்லோரும் புதுசு புதுசாகக் கட்டிக்க கொண்டு
காஞ்சி மடத்துக்கு விரைந்தோம்.
நல்ல கூட்டம்.

பொறுமையாகக் காத்து. மஹா பெரியவரின் முன் நின்றபோது அம்மாவின் கண்ணில் நீர்.
எல்லாம் நன்னா நடக்கும். நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும். அஞ்ஞானத்தைவிட்டு விடு. என்று பொதுவாகச் சொன்னார்.
இந்த அம்மா எப்பவும் இப்படித்தான்.

வைகுண்டம் மாமாவையும் அப்பாவையும் பார்த்து, நீ திருக்குறுங்குடி,அவன் வைகுண்டம் சரியான ஜோடிதான் என்றார்.
பழங்கள் பெற்று  அதீதமான நிம்மதியுடன் வந்தோம்.

எடுத்துக் காமாட்சியின் கடைக்கண்  தரிசனம் பெற்றுக் கொண்டு அப்பா வெளியே வந்ததும் வண்டியில் ஏசி   போடச்சொல்லி  உட்கார்ந்துவிட்டார். மாமா,நான்,அம்மா கூடேவே  இருந்தோம். அப்பாவுக்கு சீக்கிரம்  தள்ளாமை வந்துவிடும்.

மற்றவர்கள் வரதராஜப் பெருமாளை சேவிக்க விரைந்தனர். நல்ல தரிசனம் செய்துவிட்டு, அவர்கள் வந்த பொது ஒரு மணி ஆகி இருந்தது.
அம்மாவும் மாமியும்   புது  அரக்கு  சுங்கிடியில் வெகு அழகாக இருந்தார்கள்.

மாமியே ஆரம்பித்தார். உங்க எல்லோருக்கும் வத்தக் குழம்பு சாதம் கலந்து விட்டேன். தயிர் சாதம் , மோர் எல்லாம் உங்கள் பாத்திரங்களிலேயே வைத்தாச்சு. தனியாக கருவடாம் பொரி த்து வைத்திருக்கிறேன்.
எல்லாம் சுந்தாவும் அபிராமியும்  செய்தார்கள். அ கத்துக்கு வந்து ஒரு வாய் தூத்தம்  சாப்பிட்டு வீட்டுக் கிளம்புங்கள்
.
அபிராமிக்கு சீமந்தப் புடவை எடுக்க தி.நகர் தான் வருவோம்
என்று   ஆவலுடன் சொன்னார்.
அம்மா அகிலாமாமியின் கைகளோடு அனைத்துக் கொண்டார்.
மீண்டும்  வீட்டுக்கு வந்து மறக்காமல் மருதாணியை எடுத்துக் கொண்டு,

அபிராமியை அழைத்து, தான் காமாட்சி கோவில் கடையில் வாங்கின வளை களையும், காமாக்ஷி ,பெரியவா  சேர்ந்திருக்கும் படத்தையும் கொடுத்தார்.

சென்னைக்கு வா உங்களை அங்கேயே வைத்துக் கொண்டு விடுவேன் என்று  சொன்னார்.

அச்சோ
Add caption
நான் அம்மாவை  விட்டு வரமாட்டேன்   என்று  சிரித்தது.
அந்தப் பெண்.

சுபம்.



Saturday, April 21, 2018

1350 ,படங்கள் வழியே காஞ்சி உலா.

பிடித்த தம்பதிகள்.
Add caption
ஸ்ரீ பெருந்தேவி தாயார்.
உபநிஷத  திருமஞ்சனம்.
 ஸ்ரீ வரதராஜனின் திருக்குளம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
காஞ்சிப் பேரருளாளன்
   அடுத்த வருடம்  2019, அத்தி வரதர் . வெளியில்  வருவார்.
யாருக்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கிறதோ.

அப்பாவுடன் பயணம் 1991 பாகம் 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 நான் மெதுவே அம்மாவுடன் ஏற,அப்பா விரைந்தார்  வரதராஜப் பெருமாளைத் தரிசிக்க.
கைகளில் கற்கண்டும் திராட்சையும். தேங்காய் வாங்கும் வழக்கம்
கிடையாது. தாத்தாவின் அறிவுரை அதுதான்.
தேங்காய் உடைத்து அது அழுகலாக இருந்து , மனம் வருந்தி இருக்க வேண்டும்

அப்பா எந்தக் கோவிலுக்குப் போனாலும், மலர்களும்,கற்கண்டு,காய்ந்த திராட்சைகளுமே
கொண்டு போவார்.
உண்டியலில் சேர்க்கவும், கோவிலில் வருடாந்திர அர்ச்சனை ஏற்பாடு செய்யவும் கொண்டு வந்த பணத்தையும் தான் அன்று செலவுக்குக் கொஞ்சம் பிரித்துக் கொடுத்தார்.

வீட்டு உறுப்பினர்கள் எல்லோர் பெயரிலயும் அர்ச்சனைகள் செய்வதை
வழக்கமாகக் கொண்டிருந்தார்..
பெருமாளின் அழகைத்தான் வர்ணிக்க முடியுமா. என் மாமியாரைத்தான் நினைத்துக் கொண்டேன், கனகாம்பரம் மாலை, கதம்ப மாலை இரண்டையும் வீட்டுப் பூஜையில் இருக்கும் வரதராஜர் படத்திற்குத் தவறாமல் சார்த்தி மகிழ்வார்.
அவரை மாதிரி அழகு கிடையாது என்று சொல்லிச் சொல்லி மகிழ்வார்.

அப்பாவும் சன்னிதியில் நின்று ஸ்ரீ தேசிகரின் ஸ்லோகங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
அப்பாவுக்குக் கிடைத்த மாலை மரியாதைகளைக் கண்டு அம்மாவுக்கு
அளவிட முடியாத சந்தோஷம்.
இப்படித்தான் பிறந்த நாள் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
வெளியே வந்து பெருந்தேவி தாயார் சன்னிதிகளுக்கு வந்தோம்.
அங்கேயும் அர்ச்சனைகள் செய்து தாயாருக்கான ஸ்ரீஸ்துதியை அம்மா சொல்ல, கை நிறைய புஷ்பங்களையும், மஞ்சள்,சந்தனம் எல்லாம் பெற்றுக் கொண்டு வாசலுக்கு வந்தோம்.
  நேரம் ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது.
மற்றவர்களொடு  வண்டியும் வந்தது.
 மருமகள்கள் இருவரும் பெண்ணிற்கும் ,எனக்கும்,தங்களுக்கும்
ஒரே மாதிரி போச்சம்பள்ளி ஆரஞ்சும் பச்சையும் கலந்த வண்ணத்தில் எடுத்து வந்திருந்தனர்.
 அகிலா மாமிக்கும் ,அம்மாவுக்கும் ஒன்பது கஜத்தில் நல்ல சுங்கடிப் புடவைகள்.
மாமா அப்பா இருவருக்கும் மயில்கண் வேஷ்டிகள்.
குட்டிப் பேத்திக்கு ஃப்ராக், மற்ற எல்லோருக்கும் நல்ல டி ஷர்ட்கள்.
வண்டியில் ஏறிக் கொண்டு வைகுந்தம் மாமா வீட்டுக்கு வந்தோம்.
அவர் மகனும் ,மருமகளும் வேலை முடிந்து வந்திருந்தார்கள்.

அதற்குப் பிறகு உற்சாகத்துக்குக் குறைவே இல்லை.
அம்மா,அகிலா மாமி,மருமகள்கள் எல்லாரும்  சமையலறையில்
புகுந்து  ஒருமணி நேரத்தில் கேசரி, சப்பாத்தி,பூரி , தொட்டுக்கொள்ள கூட்டு என்று ஜமாய்த்தார்கள்.
நாங்கள் கொண்டு போயிருந்த உணவுகளும் சேர்ந்து ,மாமாவின் வீட்டு முற்றம் நிறைந்தது.

மாமி அழகாகப் புது எவர்சில்வர் டின்னர் தட்டுகளை.
முறையாக  வைக்க,அவரவருக்கு வேண்டிய உணவை எடுத்து மகிழ்வாக உண்டோம்.

அப்பாவுக்கும் வைகுண்ட மாமாவுக்கும் வெற்றிலை போட்டுக் கொள்ளும் வழக்கம் உண்டு.
 ரசிக்லால் பாக்கு, சீவல், தளி வெத்திலை என்று கூடத்தில் ஜமக்காளம் விரிக்கப் பட்டு
வைக்கப் பட்டது. அனைவருக்கும் அப்பா,புடவை, சட்டைகளைக் கயில் கொடுத்து வெற்றிலைபாக்குத் தட்டில்
ஆளுக்கு நூறு ரூபாயாகக் கொடுத்தார்.
 அம்மாவும் அப்பாவும் ,மாமாவையும் மாமியையும் வணங்கி
புடவை வேஷ்டியைக் கொடுக்கவும்., என்ன நாராயணா இதெல்லாம் எதற்கு என்றபடி,
அவர்கள் சார்பாக  அம்மா அப்பாவுக்கு புடவை வேஷ்டி வைத்துக் கொடுத்தார்களே
பார்க்கணும்.
ஒரே கைதட்டல் தான்.
கூடம்,வாசல் அறை என்று பெண்கள் படுக்கை விரிக்க,
மொட்டை மாடியில் ஆடவர்கள் படுக்க என்று ஏற்பாடனது.

அடுத்து சென்னைப் பயணம்தான்...தொடரும்.

அப்பாவுடன் பயணம் 1991 4ஆம் பாகம்.

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 அகிலா மாமிக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. நீங்க எல்லாம் சாப்பிட வேண்டாமோ என்றார்.
கையோடு கொண்டு வந்திருக்கிறோம் அகிலா
கிருஷ்ணனைப் பார்த்துவிட்டு வரதனைப் பார்க்கணும்.
குளக்கரையில் சாப்பிடலாம் என்று குழந்தைகள் ஆசைப் படுகிறார்கள். நீங்களும் வாங்கோ என்றதும்..
சாப்பாடெல்லாம் முடித்தாச்சே. நீ செய்யும் திருக்கண்ணமுது இன்னும் என் நாக்கு மறக்கவில்லை. அதைக் கொஞ்சம் வைத்து விட்டுப் போ.
இதோ மணி மூணாகிட்டது பார். கண்ணனிப் பார்த்துட்டு பெரிய கோவில்
போங்கோ என்றார்.
முன் பசிக்கு, இட்லி எல்லோருக்கும் போது மாந்தாக இருந்தது.

இப்பாவே சொல்லிட்டேன் இன்று இரவு நம்மாத்திலதான் சாப்பாடு.
வந்துவிடுங்கள் என்று என்னை அன்புடன் அணைத்துக் கொண்டார்.

அப்புறம் எப்போது சென்னைக்குச் செல்வது என்றார் அப்பா. அதெல்லாம் கார்த்தால
பார்த்துக்கலாம் டா நாராயணா வராத  விருந்து நீங்கள். நல்ல நாள். நான் கொடுத்து வைத்திருக்கிறேன் என்று மாமாவும் சொல்ல நாங்கள் விழித்தோம்.

கோவிலுக்குப் போய் வருகிறோம் என்று கிளம்பினோம்.
மாமி மாமாவுக்கு  ஆர்டர் போட ஆரம்பித்துவிட்டார்.

பாண்டவதூதன் கோவில் அப்போதெல்லாம் வீதியிலிருந்தே ஆரம்பித்த நினைவு.
பிழையாகவும் இருக்கலாம்.

துவஜஸ்தம்பம் தொட்டு வணங்கி, பட்டர் மமாவுடன் உள்ளே நுழைந்ததுதான் தெரியும்.
விஸ்வரூபம் எடுத்து, துரியோதனன் சபையில் எழுந்தருளினானே அந்தக் கண்ணன் விரித்த விழிகளும், கறுத்த உருவம், மடித்த காலும், அந்த அழகிய நகங்களும் தெரியும் படி வீற்றீருந்த கோலம் இப்பொழுதும் என் கண்களில் நிற்கிறது.
அந்த க்ஷணமே கண்ணன் முடிவெடுத்தானோ ,குருகுலத்தை அழிக்க.
 ஒன்றும் ஓடவில்லை எநகள் மனதில்.
யார் இந்த சிலையை வடித்திருப்பார்கள். இத்தனை வடிவாகா,
வேஷ்டி மடிப்புகள் அளவாக இருக்க, அபய ஹஸ்தம் அருள் வழிய
இதென்ன மாயம் .
எங்கள் வாழ்க்கையில் இது போல ஒரு மாயக்கண்ணனைப் பார்த்ததில்லை.
மனமில்லாமல் வேலீயே  வந்தோம்.
வண்டியிலேறி மீண்டும் வரதராஜன் மதில்சுவரை அடைந்தோம்.
மீண்டும் பட்டர் உதவியோடு சுற்றுப்புற மண்டபத்தில் குளுகுளு காற்றூ வீச,
 குளத்தில் மீன்கள் பாய்ந்து வர, கொஞ்சமே சாப்பிட முடிந்தது. அம்மா கதம்ப சாதத்தைத் தன் தோழியோடு சாப்பிட எடுத்து வைத்துவிட்டார்.
நாமெல்லாம் அங்கே சாப்பிட வேண்டும் என்றால், சீக்கிரம் பகவான் தரிசனம் முடித்துக் கொண்டு வைகுண்டம் சார் அகத்துக்குப் போய் விடலாம் என்றார் அம்மா.

அப்பா, முரளியையும்,ரங்கன்,சிம்முவை அழைத்தார்.
கைப்பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தார்.
///////எதுக்குத் தாத்தா ..இந்தக் கேள்வி என் பசங்களிடமிருந்து.
நான் அவர்களை இந்தச் செலவில் கலந்து கொள்ளச் சொன்னேன்,. தெரியாதாம்மா என்று
திருப்பிக் கேட்டனர்////

நாளை மீண்டும் வரதனைத் தரிசிக்கப் போகிறோம்.
நீங்கள் மூவரும் அவரவர் மனைவியை அழைத்துப் போய்
புடவைகள் வேஷ்டிகள் வாங்குங்கள்.
இன்னோரு ஜோடி வைகுந்தத்துக்கும், அவர் மனைவிக்கும் வாங்கி விடுங்கள். அவர்கள் இருவரும் இன்று நமக்கு பெருமாளும் பெருந்தேவித்தாயாரும் என்றார்.
யாரும் மறுக்கவில்லை.
நான் அம்மா அப்பாவோடு இருந்து கொண்டேன் . அவர்கள் வண்டியில் கிளம்பினார்கள்.
நாங்களும் வரதா வரதா என்று முன்புறப் படிகளில் ஏறினோம். தொடரும்.
திருமண வரம் தரும் ஆதிசேஷன். திரு ஊரகம் கோவில்

Wednesday, April 18, 2018

1347, அப்பாவுடன் பயணம் 1991. 3

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 காஞ்சி வரதனைப் பார்க்க வேளை வரவில்லையே என்று
அப்பா கிளம்பினார். போகும் வழி எல்லாம் கோவில்கள்.

  திருஊரகம்  உலகளந்த பெருமாளைத் தரிசித்தால் ,திருமணம் கூடி வரும் என்று திறந்திருந்த அந்தக் கோவிலுக்குள்ளும்  நுழைந்தோம். .,பிரம்மாண்டமான திவ்ய தரிசனம் . அப்பா நகர மறுத்தார்.
கோவிந்த கோவிந்தா என்று கூப்பிய கைகளொடு நின்றிருந்தார்
Add caption


எங்களை அழைத்து வந்த பட்டர்,
ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார வைத்தார்.
உள்ளே ஸ்திரிகளுக்குக் கைகால் அலம்பிக்க வேண்டும் என்றால்
போகலாம் என்று உள்ளே நுழைந்தார், . எங்களுக்குத் தயக்கமாக இருந்தாலும்
அவசரத்துக்கு என்ன செய்வது. பளிச்சென்றிருந்த அந்தக் காலத்து வீடு,முற்றம், சுற்றிக் கூடம் என்று பெரிதாக இருந்தது.
உள்ளே பாட்டிம்மா ஒருவர் இருந்தார். தாகத்துக்கு ஏதாவது மோர் தரட்டுமா
என்று அன்பாக விசாரித்தார்.
அப்பாவை ஆச்க்சரியத்தோடு பார்த்தார். நாராயணன் சார் இல்லையோ நீங்கள்
திருமங்கலத்தில் பார்த்தது என்றார்...
அப்பாவுக்கும் அதிசயம். தன் சினேகிதன் வைகுண்டத்தின் வீட்டிற்கு வந்திருக்கிறோம்
என்று புரிந்தது. அப்பாவை விட ஐந்து வயது மூத்தவர் வைகுண்டம் என்கிற பழைய நண்பர்.

நீங்கள் காஞ்சிபுரத்துக்கு எப்போது வந்தீர்கள்
என்று அந்த மாமியை விசாரித்தார். .எங்கள் பிள்ளையும் தபால் துறையில் இருக்கிறான்.
அவனுக்கு இங்கே தான் வேலை,என்று எங்கள் மூவரையும்
அன்போடு பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

ஜயம்......... வாங்கோ வாங்கோ. இதெல்லாம் யார். இதென்ன ஆச்சரியம். எப்படியோ பகவான் நம்மை சந்திக்க வைத்தாரே. 30 வருஷம் இருக்குமா.

இது ரங்கனா, டேய் நீ பண்ண விஷமத்துக்கு உங்க அப்பா
ஜன்னலில் கட்டிப் போடுவாரேடா. துளிக்கூட பயம் இல்லாமல் ஊஞ்சல் ஆடுவியேன்னதும்,
ரங்கன் முகம் சிவந்து போனது. என்னடா என்று வாசலுக்குப் போனான்.
அங்கே வைகுண்டம் மாமா வந்து கொண்டிருந்தார்.
எங்கள் எல்லோரையும் ஒரு நிமிடம் பார்த்துத் திகைத்து விட்டு,உள்ளே நுழைந்தார்.
அப்பாவைப் பார்த்ததும் அப்படியே கட்டிக் கொண்டுவிட்டார்.
நாராயணா,
இதென்ன அதிசயம். மே 30 உனக்குப் பிறந்த நாளாச்சேன்னு நினைத்தேன்,

என்றதும் எங்களுக்கு ஆச்சரியம்.
அவர் தன் பிள்ளையின் ஆபீஸ் ரிகார்டுகளில் அப்பாவின் பெயரைப் பார்த்திருக்கிறார்.
மஹாபலிபுரம் தபால் அலுவலகத்தில்  அப்பா ரிடயரானது பதிவாகி இருந்ததும்
அதற்கப்புறம் வேறு செய்தி இல்லாததும்  அவர் தெரிந்து வைத்துக் கொண்டு
விசாரித்திருக்கிறார்.
அப்பா அவரை டிடெக்டிவ் வைகுந்தம் என்றூ கூப்பிடுவது எனக்கு நினைவுக்கு
வந்தது.சிரித்துவிட்டோம்.

அதற்குள் பிங்கட்டிலிருந்து அந்த பட்டர் மாமா வந்தார். இங்கிருந்த சூழ்னிலையைப் பார்த்து
ஏற்கனவே தெரிந்தவர்களா நீங்கள் நல்லதாப் போச்சு,
நான் இவர்களைப் பாண்டவத்தூதப் பெருமாளைப் பார்க்க அழைத்து வந்தது இவ்வளவு நன்மையாச்சே  என்று சந்தோஷப்பட்டார். கிருஷ்ண அர்ஜுன சந்திப்பு மாதிரி இருந்தது.
அம்மா இவ்வளவு சந்தோஷப்பட்டுப் பார்த்து நிறைய நாளாகிறதே என்று நினைத்துக் கொண்டேன்.
அவரவர் வயதுக்காரர்களைப் பார்க்கும் போது வரும் ஆனந்தம் இது என்று தோன்றியது.
பாண்டவதூதனைக் காக்க வைக்கிறோம்....தொடரும்

Monday, April 16, 2018

விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோட

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 மைலாப்பூரில் பழைய வீட்டுக்கு விளா மர வீடு என்றே பெயர். இரண்டு விளாமரங்கள்,கிட்டத்தட்ட 80 வயதானவை இருந்தன.

பாட்டி இந்த இடத்துக்குக் குடி வந்த பொதே


வைத்ததாகச் சொல்லுவார்கள்.
சப்போட்டா மரமும் இருக்கும்.
இரண்டு மரங்களிலும் கிடைக்கும் பழங்கள் ருசி சொல்லி முடியாது.
பெரிய பெரிய அளவில் மரத்திலிருந்து விழுந்து கொண்டே இருக்கும்.
சப்போட்டாவைப் பறிக்க ஆட்கள் ஏற்பாடு செய்யப் படுவார்கள்.

எல்லா வீட்டுக்கும் கொடுத்தனுப்பினது போக , கூடத்துக்குப் பக்கத்தில்
 இருக்கும் பெரிய அறையில் ஜன்னல் திட்டுகளில் வரிசையாக அடுக்கிவைக்கப் படும்.
நான் அங்கே இருந்த நாட்களில் , பாட்டி அந்த அறைக் கதவை சாவிபோட்டுத் திறந்ததும்  நாசியை வாசம் தூக்கும்.
ஒவ்வொரு விளம்பழமாக மேலிருந்து போட்டு
அதன் சத்தத்தை வைத்தே பழுத்ததா இல்லையா என்று சொல்வார்.
சில பழங்கள் குடுகுடு சத்தம் போடும். நன்றாகப் பழுத்ததின் அடையாளம்.
எனக்கு விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோட பாடல் நினைவுக்கு வரும்.

பழுத்த விளாம்பழங்களைக் குழந்தைகளுக்குப் பிரித்துக் கொடுத்து உங்க அப்பா கிட்ட
கேளு. அவன் எக்ஸ்பர்ட் என்று சொல்லிவிடுவார்.
அவரும் அதை நல்ல இடம் பார்த்து உடைத்து,
வெல்லம் கலந்து கிண்ணத்தில் போட்டுக் கொடுப்பார்.

சின்னவனுக்கு மிகவும் பிடிக்கும் விளாம்பழம். மத்த ரெண்டும் பக்கத்திலியே போகாது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இப்போது இந்த விளாம்பழப் பச்சடி செய்யும் விதம் பார்க்கலாமா.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எங்கள் ஆஜிக்கு உதவி ஆள் நான் தான்.
மதிய வேளையில் , அம்மியில் இந்த விளாம்பழத்தை வைத்து
உடைத்து,
உள்ளிருக்கும் பழத்தை எடுத்து கொஞ்சம் வெல்லம், கொஞ்சம் புளி கலந்து பிசிறச் சொல்வார்.
அது நெகிழ்ந்து கொள்ளும்.
பிறகு அதன் தலையில் கடுகு ,பச்சை மிளகாய் தாளித்தால் ஆச்சு.

இந்தக் கலவையை அவர் தன் வெள்ளிக்கிண்ணத்தில் வைத்துக் கொண்டு சாப்பிடும் அழகே தனி.

அப்பா 70 பயணம் நடந்த கதை. 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அப்பா 70  பயணம் நடந்த கதை.

 அதென்ன மா. நாம 13 பேரு இதுல சீட்டும் 13 நு
கணக்குப் போட்டு இந்த வண்டி எடுத்தியா என்று கேலி செய்தான் மகன்.
உங்கம்மா மாதிரி யார் பண்ணுவாடா என்று அப்பாக்குப் பெருமை.

தம்பி ரங்கன் பசங்கள் கொறிக்க  க்ராக் ஜாக், நேந்திரங்காய் சிப்ஸ், சுஸ்வாதிலிருந்து
முறுக்கு,தட்டை என்று பெரிய பையோடு ஏறி இருந்தான்.

முரளிக்கு இந்த நொறுக்கு சாப்பிடுவதற்கு அவ்வளவாகப் பிடிக்காது.
அவன் பெண்டாட்டி ,கணவர் ,மகனுக்கு ஏற்ற  இட்லி, தோசை மிளகாய்ப் பொடி தடவினது, சர்க்கரை தூவினது என்று அழகாகப் பார்சல் கொண்டு வந்திருந்தாள்.

ரங்கன் ,பெண்டாட்டி கதம்ப சாதம் எல்லோருக்கும் பெரிய டப்பாவில்
கொண்டு வந்தாள். அம்மாவின் திருக்கண்ணமுது
நெய் வாசனையோடு மணத்தது.
அப்பா எல்லாவற்றையும் பார்த்து மூக்கில் வழக்கம் போல் கைவைத்தார்.
ஒரு நாள் தானே போகீறோம்.
என்று  கேலி சொல்ல, அம்மா புன்னகைக்க வண்டி கிளம்பியது.
பாண்டி பஜார் வினாயகருக்குத் தேங்காய் உடைத்து விட்டு,
சிங்கம்  சொன்ன வழியில் கூரம் ஊருக்கு வந்தோம்.
அப்பா கூரத்தாழ்வார் சரித்திரத்தைக் குழந்தைகளுக்கு
சொல்ல ,சுற்றி உட்கார்ந்து கேட்டார்கள்.
ஸ்ரீ ராமானுஜ சரித்திரம் பின் தொடர, திரு வேளுக்கை நரசிம்ம ஸ்வாமியைத் தரிசித்தோம்.

சில ஸ்லோகங்களைச் சொல்லி,
குழந்தைகளை சொல்ல வைத்தார்.  Appa was in his elements.happy.

அங்கிருந்து கிளம்பி காஞ்சிபுரம் அடையவும், வரதராஜர் கோவில்
நடை சாத்தவும் சரியாக இருந்தது. பட்டர்கள் வெளியே வரவும், அப்பா அவ்ர்களிடம்
தரிசன் நேரம் கேட்டார், இன்று 4 மணிக்குத் திறந்துவிடுவோம்.
 வெள்ளிக்கிழமை தாயாருக்கு  அலங்காரம் எல்லாம் செய்து
சாயந்திரம் புறப்பாடு உண்டு. நீங்கள் இங்கயே தங்கி குளங்களெல்லாம் சுற்றிப் பாருங்கள்.

பாண்டவதூதன் கோவிலுக்குக் கூடப் போகலாம், கோவில் சாவி என்னிடம் இருக்கிறது
 நீங்கள் என்னோடு வருவதனால் போகலாம் என்றதும்,
எல்லோரும் கிளம்பி வண்டியில் ஏறினோம்.
Add caption

Add caption
Add caption

Saturday, April 14, 2018

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 1962

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
புது வருடப் பிறப்பு  1962
++++++++++++++++++++++++++++++++

 முதல் நாளிலிருந்தே பாட்டி, துரத்திக் கொண்டே இருந்தார்.  வேப்பம்பூ
கொண்டு வரச் சொல்லி.
பாட்டிக்கு சர்க்கரை வியாதி இருந்ததால்,
உட்கார்ந்து கொண்டே எல்லாரையும்  வேலை வாங்குவார்.
அப்பாவிடம் மிக அன்பு.
மருமகளிடமும் தனிப் பாசம். 
வீட்டின் வாயில் கதவைத் திறந்தால் தபால்  அலுவலகம். சாயந்திர வேளைகளில் 
அங்கே போகலாம்.
அதுவும் தம்பிகளுக்கு உண்டான சுதந்திரம் எனக்குக் கிடையாது.

வேப்பம்பூ பக்கத்து வீட்டில் இருக்கும். நான் கொஞ்சம் உயரம் என்பதால்
என்னை அனுப்புவார்.
தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கத் தம்பி துணைக்கு வந்து நிற்பான்.

ஜெயா, நாளைக்கு வேணும்கற காய்கறிகளை,
ஆபீஸ் பியூனிடம் சொல்லி வாங்கி வரச் சொல்லு.
அவியல், வடை, திருக்கண்ணமுது, , பருப்பு சாம்பார் ,பொரித்த அப்பளம்
போதும் இல்லையா என்று அம்மாவிடம் கேட்பார்.
மறு பேச்சு கிடையாது.

அடுத்த நாள் எல்லோருக்கும் லீவு நாள் என்றாலும் 
சீக்கிரம் எழுந்துவிட வேண்டும். அந்தக் காலத்துப் பெரிய வீடு. கூடம். மேலே
ஜன்னல்கள் .கூடத்தின் இரு பக்கங்களிலும் அறைகள்.
ஒன்று பூஜை அறை. ஒன்று படுக்கைகள் சுற்றி வைக்கப் படும். காத்ரேஜ், மர பீரோ, நிலைக் கண்ணாடி எல்லாம் அங்கே தான்.. எங்கள் புத்தகங்கள், வானொலியும் 
அங்கேதான் இருக்கும்.
மூவரும் அங்கேயே படித்துப் படுத்து எழுந்திருப்போம். பாட்டிக்குக் கூடத்தில் கட்டில்.
 மறு ஓரத்தில்  அம்மா அப்பா படுத்துக் கொள்வார்கள்.
காலை எழுந்ததும் பால் கொண்டு வருபவர் பின் கதவைத்தட்ட, அம்மா பாலை வாங்கிக் காய்ச்சுவார்.
நானும் பல் தேய்த்துவிட்டு, வென்னீர் அடுப்பை ஏற்றும் முயற்சியில்
கண்ணில் புகை,வாயில் இருமல் என்று ஒரு டிராமா போட்டு 
வென்னீர்த்தவலையை ஏற்றி வைத்துக் கிணற்றுத்தண்ணீர்
இறைத்து நிரப்ப வேண்டும். 
லேசாகச் சுட்டதும் அம்மா,அப்பா குளித்து விடுவார்கள்.
அம்மாவுக்குத் துணையாக அப்பா சமையல் அறையில் தேங்காய் உடைத்து,
வெற்றிலை பழங்கள் எல்லாம் அடுக்கிவைத்து இறைவன் 
படங்களுக்குப் பூவைத்து ,என்னை அழைப்பார்.
குளித்துவிட்டுக் கோலம் போடச் சொல்வார்.

 ஏம்மா, புதுசு பாவாடை எல்லாம் வாங்கவில்லை 
என்று கேட்டால் இப்பதானே பிறந்த நாளைக்கு எல்லாம் வாங்கித்து.
அது ரெண்டையும் பார். மறு பேச்சுப் பேசாமல் தீபாவளித் துணியைத்தானே
போட்டுக் கொண்டிருக்கு என்று கண்டிப்பார்.
 பாட்டிக்கு வென்னீர் ரெடியான்னு பாரு. 
பொறுமையா வெய்யில்ல உட்கார்ந்திருக்கார் பாரு
என்றதும் நான் பாட்டியை அணுகுவேன்.
கிணற்றங்கரை அருகே நீளமாக பெஞ்ச் போட்டிருக்கும்.  மேலே கொய்யா மரம்
, முருங்கை மரங்களின் நிழல் கீழே விழ பாட்டித் தன் கைகால்களுக்குத் தேங்காய் எண்ணெய்த் தடவிக் கொண்டிருப்பார்.
 என்னப் பார்த்ததும் நீ குளிச்சுட்டுக் கோலம் போடு.
நானும் குளிக்கப் போய் வந்து கோலம் போட, அம்மா விளக்கு ஏற்றுவார்.
என் அடுத்த வேலை வடைக்கு அரைப்பது. 
தம்பிகள் இருவரும் அப்பாவோடு சஹஸ்ர நாமம் சொல்ல பாட்டி ஹரே ராம சொல்லிக் கொண்டிருப்பார்.

ஒரு கரி அடுப்பு, ஒரு விறகடுப்பு, ஒரு ஸ்டவ் எல்லாவற்றிலும்
 சமையல் மும்முரம் காட்டத் துவங்கும்.
பசி வயிற்றைக் கிள்ள நான் சுற்றி வருவதைப் பார்த்து
அம்மா நேற்று சிறுமலைப் பழம் வந்தது பார் அதைச் சாப்பிடு.
 என்று சொல்லி வடை போட்டு எடுப்பார்.
எல்லாம்  பூர்த்தியாக ஒரு மணி ஆகிவிடும்.
வெங்கலப் பானையோடு சாதம், வடை, திருக்கண்ணமுது,,உறைந்த தயிர்,பசும்பால் எல்லாம்
கடவுள் வைப்பார் அம்மா.
அப்பாவும் முறைப்படி, கற்பூரம் காட்டி,நிவேதனம் செய்ய, முதல் இரண்டு வடைகள் பாட்டிக்குப்
போகும்.
பசி தாங்க வேண்டுமே.
 இலை போடும் வேலை என்னுடையது.
அப்பாவும் அம்மாவும் பரிமாறிவிட்டுச் சாப்பிட உட்காருவார்கள்.

சாயந்திரம் பெருமாள் கோவிலுக்குப் போய் வந்ததும்
 இன்னோரு புத்தாண்டு ஆரம்பிக்கும். வாழ்க வளமுடன்.

Friday, April 13, 2018

1991 APPA IS 70

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
70 வயதில் என் பெற்றோர்கள். 1991 மே 30
++++++++++++++++++++++++++++++++++++++
அப்பாவின் 70 வயது பூர்த்திக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
அவருக்கு கைக் கடியாரம், நல்ல சட்டை, செருப்பு எந்த ஆடம்பரமும் வேண்டாம்.
அங்க வஸ்திரம் மடிப்புக் கலையாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.

மிகத் தீவிரமான ஆன்மிகம்,அது சம்பந்தமான நூல்கள். தம்பிகள் இருவருக்கும்
எப்பொழுதும் சென்னைக்கு   வெளியே செல்லும் வேலை.

அதனால் என்ன ஏற்பாடு செய்வதாக இருந்தாலும்
நாந்தான் பார்க்கவேண்டும்.
எனது தோழி சாந்தி ஹோமம் செய்யலாம் என்றாள்.
அம்மா, அதற்கு மறுப்பு சொல்லிவிட்டார். அப்பாவுக்கு
அதில் ஈடுபாடு கிடையாது.
உன் குழந்தைகளுக்காக ஏதாவது செய்யலாம் என்றால் சம்மதிப்பார் என்றார்,.
அப்பொழுது மக்கள் எல்லாம் வேலைக்குப் போக ஆரம்பித்தாச்சு.
  திருமண முயற்சிகள் ஆரம்பித்த நேரம்.
கோவில் செல்ல எல்லோருக்குமே பிடிக்கும்.
 அப்பாவின் நட்சத்திரம் ஒரு வெள்ளிக் கிழமை.

அன்று முழுவதும் கோவில்கள் சென்று வரலாமே என்று தோன்றியது.
அப்பா வெகு நாட்களாகப் போக நினைத்து ,கனவு கண்டது
காஞ்சி கூரத்தாழ்வர் கோவில்.
அதைச் சுற்றி இருக்கும், திரு வேளுக்கா, பிறகு காஞ்சிபுரம், வரதராஜன், பாண்டவ தூதன்,
உலகளந்த பெருமாள்,, வரும் வழியில் திருவள்ளூஊர், திரு முல்லை வாயில்,,
திருமழிசை என்று என் திட்டம் நீண்டது.

கணேஷ் டிராவல்ஸில் பெரிய டெம்போ வண்டி கிடைத்தது.
எல்லாம் எழுதி வைத்துக் கொண்டு அப்பாவிடம் சென்றேன்.
அவர் என்றாவது எனக்கு மறுப்பு சொல்லி இருந்தால் தானே
இப்போது மறுப்பு சொல்ல.
உடனே ஒப்புக் கொண்டார்.
தம்பிகளிடம் தொலைபேசியில் கலந்து பேசி சம்மதம் வாங்கிக் கொண்டேன்.
வெளியில் சாப்பிடுவது யாருக்கும் ஒத்துக் கொள்ளாது.
அதனால் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இட்லி, புளியோதரை,சப்பாத்தி,ததியன்னம்,
திருக்கண்ணமுது
இது அம்மா கைவண்ணம்.
வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நம் வீட்டுக்கு வண்டி வந்து விட்டது.
ததி அன்னம், சப்பாத்தி, உருளைக்கிழங்கு கூட்டு என்  பங்கு. லிம்கா, தண்ணிர் பாட்டில்கள் எல்லாம் ஏறின.
13 இருக்கைகள் கொண்ட வண்டி. முதல் இரண்டு சீட்டும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும்.
 நானும் தம்பியும் ஒரு பக்கம்.,பெரிய தம்பியும் சிங்கமும் ஒரு பக்கம் தம்பிகளிம் மனைவிகளும்
எங்கள் பெண்ணும் கடைசி இருக்கை. . 13 வயது பேரன், 9 வயது பேத்தி,
எங்கள் பையன்கள் எல்லோரும் வண்டிக்குள் நடந்து கொண்டே இருந்தார்கள்.

இனிதே பயணம் ஆரம்பித்தது.
Add caption

Monday, April 09, 2018

1343, Greetings from my Brother Murali lastyear

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
To my dear sister, Rev,
wishing you Many Many more Happy Returns of the Day. May Lord Sriman Narayana shower you with his Blessings, peace of mind, Happiness and Good Health. Above all may he also bless you Happy union with all your siblings, sons, daughter, daughters-in-law, and Grand children. They are the ones who make you happy and I am sure they will wish you the very best of life too.

Affly
From Vasanthi and me, 9/4/2017

Sunday, April 08, 2018

விழுந்து எழுந்த சம்பவங்கள்.hahha.

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 போன பதிவில் சொன்னது போல  1997இல் பலகை தடுக்கினது.
அப்பா கேட்பது போல அது வந்து உன்னைத் தடுக்கித்தா. அதுக்கு உசிரே இல்ல.
நீ பராக்கு பார்த்தேன்னால் அது என்ன செய்யும். நல்ல வேளை சிங்கம் கை கொடுத்தார்.

ஊனி ஊன்றி நடந்தே அந்தக் கல்யாணத்துக்குப் போய் வந்தோம். சம்பந்தி வீட்டுக் கல்யாணம்.

ஸ்பெஷலா,  சமையல் நடக்கும் அறையிலியே ,நாற்காலி மேஜை போட்டு சாப்பாடு.
அய்யோ பாவம் சம்பந்தி மாமி காலைப் பாரேன். இரண்டு மூணு அப்பம் கட்டின மாதிரி இருக்கு.

ரிசப்ஷனுக்குப் போகவில்லை.
சரி அடுத்தாற்போல நம்ம டயபெடிக் ரெஜிம் ஆரம்பித்தது.
டாக்டர் செரியன், உன் முதுகு எலும்பெல்லாம் உதிருகிற மாதிரி ஆஸ்டியோ போரொசிஸ் ஆரம்பித்திருக்கு.
மெரினாவில 45 நிமிடம் நடந்ததால் தான் நீ சரியா இருப்பேன்னு மிரட்டி இருப்பார்.
சிங்கத்திடம் அலுத்துக் கொண்டேன்,உங்க வீட்டுக்கு உழைத்து என் எலும்பே தேய்ஞ்சு போச்சு என்று.
அவர் புருவங்களை உயர்த்தி நிஜமாவா. என்று சந்தேகப் பார்வை பார்த்தார்.
ம்ஹூம் இந்த மனுஷனுக்குப் புரியாதுன்னு நிறுத்திக் கொண்டேன்.

டாக்டர்,சிங்கத்திடம், நீயும் கூடப் போ. விழுந்தால் தூக்கி விடணும் என்று ஆர்டர் போட்டார்.
ரீபாக் ஷூ என்ன ,காஞ்சி காட்டன் சாரி//முதல் தப்பு// என்னன்னு கிளம்பியாச்சு.
அடுத்த நாள் காலை 5 மணிக்கு.
மெரினாவில் கொஞ்சம் இருள் பாக்கி இருந்தது.
என்ன நீ வரியா. கடலைப் பார்த்துண்டு நிக்கப்  போறியான்னு அவர் நடையைக் கட்டினார். இனி அது  நேப்பியர் ப்ரிட்ஜ் போய்தான் திரும்பி வரும்.

எனக்குக் காலக் காற்று, நடந்து வரும் நம்பியார் சாமி, சிவக்குமார் தம்பதிகள்
இவர்களூக்கு வணக்கம் போட்டுக் கொண்டே  ,அன்ன நடை போடப் பிடித்திருந்தது.
அப்படி ஒரு காலை வேளையில் கொஞ்சம் வயசான குழு,வெள்ளை வேட்டி,ஜிப்பா என்று வந்து கொண்டிருந்ததைப் பார்த்துப் பாதையை விட்டு ஓரமாக நின்று கொண்டேன்.
 நான் ஒதுங்கின இடத்தில் ஒரு பெரிய கல்.
தடால் விழுந்தாச்சு. நெற்றியில் ஒரு கீறல் ரத்தம்.
 அவர்கள் அவசரமாக அருகில் வந்தனர்.
 விழுந்துட்டீர்களே, இதோ இந்தக் கர்சீஃப்னால நெற்றியைத் துடைத்துக் கொள்ளுங்கள் என்று நீட்டிய ஜிப்பா கை, நம்மவர் கமலோட அண்ணா சாருஹாசன்.
எனக்கு மிகக் கஷ்டமாகப் போய்விட்டது. குடிக்கத்தண்ணீர் கொடுத்தார்கள்.
where do you live, shall we drop at your house// என்றதும்,
நான் இவருடன் வந்திருக்கும் விஷயத்தைச் சொல்லவும் ,இவர்
வரவும் சரியாக இருந்தது.
அவர் முகத்தில் ஒரே சிரிப்பு. இங்க்கயும் விழுந்திட்டயான்னதும்.
மற்றவர்கள் நெத்தில அடி சார். ஏடிஎஸ் போட்டுக்கணும்
என்றெல்லாம் சொல்லவும்.
 நான் பார்த்துக்கறேன் சார்.//
எனக்கு சாருஹாசனின்  கர்சீஃப் உறுத்தியது.
I shall wash and send it to you// ந்னதும் பெரிய  ஜோக் சொன்ன மாதிரி
சிரித்தார்கள்.
சரியான கேனம்னு நினைத்திருக்கலாம்.
 இன்னும் இவர் ஏதாவது சொல்லப் போறாரோ என்று பார்த்தால் அவரும் சிரிக்கிறார்.
சரியான  Damsel in Distress மாதிரி இருந்தம்மா நீ. ஹாஹா.
கொஞ்சம் ராங்க் சைட் ஆஃப்  40ஸ்.
வீட்டுக்கு வரும் வரை சிரிப்பு ஓயவில்லை. பிறகு பார்க்கலாம்.
இந்த ஆண் வர்க்கமே இப்படித்தான். இவர் நீளக்காலை வைத்துக் கொண்டு
ஓடி இருக்காவிட்டால் அசட்டுப் பட்டம் தடுத்திருக்கலாம்.
Add caption

Friday, April 06, 2018

தொடரும் வைத்தியங்கள். வாழ்க்கையின் சுவாரஸ்யம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
           பழைய கால முழங்கால் வலிக்கும் ,இப்போது
எடுத்துக்கொள்ளூம்  பயிற்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை.,
அப்போது ஆழ்வார்பேட்டை வைத்தியர் சொன்னதையே இன்று
இந்த கொரிய டாக்டரும் சொன்னார்.

நீங்க ஏன் வலது பக்கமே விழுகிறீர்கள்  என்று யோசித்தீர்களா. என்று கேள்வி
கேட்டார்.
வலது முழங்கால் சரியில்லையோ  என்று கேட்டேன்.
அங்கதான் தப்பு செய்கிறீர்கள்.

உங்கள் இடது முழங்காலே காரணம்.
உங்கள் முதுகுத் தண்டில்  அந்த அழுத்தம் தெரிகிறது.
என்றாரே பார்க்கணும்.
1997 லிருந்து வருடம் தோறும் பூமா தேவியைக் கையினாலும்
முகத்தாலும், முழங்காலாலும், வணங்கி வந்திருக்கிறேன்.

2017இல் விழவே இல்லை.நல்லதைச் சொல்லணும் இல்லையா.
 கீழே கொடுத்திருப்பது
2012 இல் நம்மூர் வைத்தியர் சொன்னது.

////////////////எலும்பு வைத்தியரிடம் போகவேண்டிய கட்டாயம்..
 ஆழ்வார்ப்பேட்டையிலியே இருந்திருக்கிறார்.
இதை இன்னோரு நண்பர் சொல்லித் தெரிந்து கொண்டு  நேரமும்  குறித்துக் கொண்டு
போனோம்.

ஒன்றுமே சேய்யவில்லை. முழங்காலையும், குதிகாலையும் முன்னும் பின்னும் ஒரு அழுத்தம் கொடுத்துப் பார்த்தார்.
அலற இருந்த   வாயைக் கட்டினேன்.
பிறகை முதுகில் எலும்பில் கைவைத்து அழுத்தி இப்ப கால்,''வலிக்கிறதாம்மா''
என்று கேட்டார். அதிசயம்!!  ஆனல் உண்மை. வலிக்கவே இல்லை.

உங்கள் வலிக்கு எல்லாம் காரணம் நீங்கள் 2000இல்  உங்கள்  முதுகு தரையில் பட விழுந்ததுதான்''என்றாரே பார்க்கணும். அதிலிருந்தே உங்கள்   தசைகள் இறுக்கமாகி விட்டன.
வலது பக்கமாக நீங்கள் விழுந்ததால் வலது முழங்காலும் ,பாதமும்
பலவீனமாகிவிட்டன'' நீங்கள் அடிக்கடி விழுவதற்கும்  அதுவே காரணம்.

தசை  நார்கள்   பலப்பட  ஃபிசியோதெரபி   எடுத்துங்கள்.  30 நாட்களீல்  பயமில்லாமல் நடைப் பயிற்சிக்குப் போகலாம் என்று சொன்னதுதான்  ஹைலைட்.
11 வருட முழங்கல் வலிக்குப் பின்னால் இத்தனை பலமான  காரணம்
இருக்கிறதா என்று அதிசயமாக இருந்தது.

கால் வலித்தாலும் நடந்தால்தான் கொழுப்புச் சத்து குறையும்.குறையாவிட்டல் நான் பொறுப்பில்லை என்ற   சர்க்கரைக்கான வைத்தியர் கிளப்பின பயமே என்னைக் காலுக்கான டாக்டரிடம் துரத்தியது.
காரணம் தெரிந்துவிட்டது. இனி பீடு நடை போட்டு ப் பழக வேண்டியதுதான்..
ஏற்கனவே நானானி சொன்னது போல நடைப் பதிவாளர் சங்கம் ஆரம்பிக்க வேண்டியதுதான்.
அப்போது தினமுமே பதிவர்கள் மீட்டிங் நடக்கும். நடப்பதால் பதிவுலகமும் ஆரோக்கியமாக இருக்கும்.:)

ஆமாம், மேலே போட்ட படத்திலிருப்பவருக்கும் ,பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால்  அவர்தானே எங்க வீட்டுக் காரரும், வாகன ஓட்டியுமா அவதாரம் எடுப்பவர்:)
Add caption

Thursday, April 05, 2018

மாசி மாதக் கதைகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 மாசி மாத வற்றல் வடாம் கதையல்ல. சீனு இன்னும் நம் வீட்டுக்கு
இலை வடாம் ,மற்றும்  ஜவ்வரிசி வடகம் ,மாவடு எல்லாம் கொண்டு வந்து
கொடுப்பவர். நன்றாகவே இருக்கிறார்கள்.
அவருக்கு
70 வயதாகிறது. ஜயம்மாவுக்கு 65.இப்பொழுது  உதவி செய்பவர்கள்
இருக்கிறார்கள். இருக்கிற இடத்தை வாங்கிக் கொண்டு விஸ்தரித்தார்கள்.

கீதுவும் மாதவன், செங்கமலம் பக்கத்து அபார்ட்மெண்டை
வாங்கிக் கொண்டார்கள்.
கீதுவின் பேரன்,பேத்திகள் நல்ல பள்ளிகளில்
படிக்கிறார்கள்.
ஆனாலும் எல்லோருக்கும் வாய்க்கு ருசியாகப் பலகாரங்கள், உணவு
கொண்டு வந்து கொடுப்பது எல்லாம் நடக்கிறது.

செய்வது ஒரு குழு. கொண்டு போய்க் கொடுப்பது ஒரு குழு.
வெவ்வேறு இடங்களில் நடக்கும்படியான  அமைப்பு.

எளிமை அவரை விடவில்லை. உழைப்பில் தோய்ந்த முகம்.
வலுவேறிய கைகள். ஜயம்மா, உடல் பருக்காமல்
அதே அழகுடன் ,முதிர்ந்த முகத்துடன் இருக்கிறார்.
இன்னும் எப்பொழுதும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே
என் பிரார்த்தனை.வாழ்க வளமுடன்.