Blog Archive

Sunday, November 26, 2017

கோதுமை மாவு சுலப அல்வா.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 2006 நவம்பர்,
 நன்றி சொல்லும் நாளுக்கு ஏதாவது செய்து
கொடுக்க ஏற்பாடு. சிங்கத்துக்கும்  வாயில் இனிப்பில்லாமல்
சரிப்படவில்லை.
அதற்காகச் செய்தது தான் இந்த ஈஸி ஹல்வா.
. இளமையில் அதாவது திருமணமான புது நாட்களின்
, போது சமைத்துப் பார் புத்தகத்தில் படித்த மிகக் கடினமாயிருந்தது. கோதுமையை ஊறவைத்து அரைத்து, முதல் பால் ,இரண்டாம் பால் எடுத்து, சர்க்கரைப் பாகு வைத்து
கோதுமைப் பாலை விட்டுக் கிளறி, கிளறி, கிளறிக் கை சலித்த பிறகு அல்வா
வரும் என்று தோன்றியது.
ஆளைவிடு சாமி. நமக்குத் தேங்காய் பர்ஃபி போதும் என்று விட்டு விட்டேன்.
புக்ககம் வந்த பிறகு  க்ஷீரா  பார்த்துப் பழகிக் கொண்டேன்.
ரவா கேசரி மாதிரி கோதுமை மாவில் செய்வது.
இந்தத் தடவை வேறு மாதிரி செய்யலாம் என்று
இந்த செய்முறையைத் தேர்ந்தெடுத்தேன்..
புளியம்பூ வர்ணத்தில் வறுத்துக் கொண்ட

 கோதுமை மாவு ஒரு கப்
 கண்டென்ஸ்ட் மில்க் ஒரு டப்பா,
 சர்க்கரை  இரண்டு கப்
 நெய் இரண்டு கப்.
 அலங்கரிக்க முந்திரி,பாதாம் துண்டுகள்,
கொஞ்சம் குங்குமப்பூ.
 கனமான உருளி , இல்லாவிட்டால் இப்போது வந்திருக்கும் செரமிக் கோட்டட்
வாணலி பெரியது.
 கொஞ்சம் நெய் விட்டு முந்திரி,பாதாம் வறுத்து வைத்துக் கொண்டு,
  ஒரு டம்ப்ளர் நீரில் இரண்டு கப் சர்க்கரை கரைந்து கொஞ்சமாகப்
பாகு வந்ததும்
 கோதுமை மாவு ,கண்டென்ஸ்ட் மில்க் இரண்டையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டும்.
இரண்டும் சேர்ந்து வரும்போது
 பாலில் கரைத்த குங்குமப்பூவை விட்டு , உருக்கிய நெய் விட்டுக்
 கிளறிய கொஞ்ச நாழிகையில்  பொங்கிவிடும் கலவை.
அப்படியே  அணைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் கோதுமை மைசூர்பாகு ஆகிடும்.
 இதை அப்படியே இன்னோரு கண்ணாடிப் பாத்திரத்துக்கு
மாற்ற வேண்டியதுதான், மேலே முந்திரி,பாதாம் துண்டுகளைத் தூவினால் ஆச்சு.
 சிரமமில்லாத ஹல்வா ரெடி.

17 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு.

ஸ்ரீராம். said...

அடடே... செய்து பார்க்க வேண்டியதுதான். ஆனால் இந்த இறக்கும் பதம்... .. அதுதான் கஷ்டம். ரெண்டு மூன்று முறை செய்து அனுபவப் பட்டாலே சரியாக வராது! பார்ப்போம். நான் செய்வதுதான் ஸ்வீட். செய்து பார்த்து விடுகிறேன்!

ஆமாம், நீங்களும் இது மாதிரி புதுசு புதுசா திங்கற கிழமைக்கு படங்களுடன் பதிவு அனுப்புங்களேன் அம்மா.

நெல்லைத் தமிழன் said...

வாவ்.. ரொம்ப சுலபமாக இருக்கே. ஆனால் ஜீனியும் நெய்யும் எனக்கு உடம்புக்கு ஒத்துக்குமா என்ற சந்தேகம். அல்வா படம் நல்லாருக்கு.

பெருமாள், தாயார் படம் அருமை. எந்தக் கோவில்?

வெங்கட் நாகராஜ் said...

சுலபமாகத் தான் இருக்கிறது. செய்து பார்க்க முயல்கிறேன்!

நன்றிம்மா...

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப சுலபம்தான்...
ஊருக்குப் போகும்போது குறிப்பைக் காட்டி செய்யச் சொல்லலாம்...

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா சென்ற வருடத் தீபாவளிக்கு திருநெல்வேலி ஹல்வா கோதுமை பாலெடுத்து கலர் எதுவும் சேர்க்காமல் செய்தேன்...ஒரிஜினல் கற்றுக் கொண்டது...

உங்கள் குறிப்புகள் எடுத்துக் கொண்டுவிட்டேன். செய்து பார்த்து விடுகிறேன். இது செய்ததில்லை...ரொம்ப எளிதாக இருக்கும் போல!!!! சர்க்கரையும் போட்டு கண்டென்ஸ்ட் மில்கும் சேர்ப்பது தித்திப்பு அதிகமாக இருக்காதோ அம்மா? (இல்லை...நானே ரொம்ப ஸ்வீட் கேர்லாக்கும் அதான் ஹிஹிஹிஹிஹி!!!)

கீதா



Thulasidharan V Thillaiakathu said...

கோதுமை மாவு எந்தக் கப் அளவு? வல்லிம்மா? ஏனென்றால் கண்டென்ஸ்ட் மில்க் ஃபுல் டப்பா என்று சொல்லிருக்கீங்க அது 400 மில்லி இல்லையா...அப்போ ஒரு கப் என்றால் 200 கிராம் இருக்குமா? ஏனென்றால் நான் செய்வது எல்லாம் மிகவும் குறைவாகவே....சிறிய கப் என்பதால் ....இந்த அளவு கேட்கிறேன்..மிக்க நன்றிம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
நான் இங்கே பெரிய சைஸ் மக் எடுத்துக் கொண்டேன். அதனால்

நீங்கள் செய்யும் போது இரண்டு கப் நம் ஊர் சைஸ் எடுத்துக்கலாம்.
சர்க்கரை குறைத்துக் கொள்ளலாம். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், திங்கக் கிழமை பெரிய மனுஷா எழுதறது மா.
ஆராய்ச்சியோடு, படங்களோடு வரும். அதிசயமா ஏதாவது
செய்தால் உங்களுக்குச் சொல்றேன்.
இந்த அல்வால ரெண்டு கப் மாவு சேர்த்துக்கணும். ஒண்ணுனு
எழுதி இருக்கேன். நன்றி ராஜா.

பூ விழி said...

அட சூப்பர் ம்மா ரொம்ப ஈஸியா தெரியுது செய்து பார்கிறேன் நன்றி

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன், பெருமாள் திருக்குறுங்குடி நம்பியும் தாயாரும். கைசிக ஏகாதசி வரது இல்லையா அதுக்காகப் போட்டேன்.
எனக்கும் நான் செய்யற ஸ்வீட் எடுத்துக்க முடியாது.
ஒரு தரம் அந்த மாதிரி ஆபத்தில் மாட்டிக் கொண்டேன். பார்த்து சாப்பிடுங்கோ.

வல்லிசிம்ஹன் said...

செய்யுங்கோ அன்பு குமார்.
அவரவர் இஷ்டப் பிரகாரம் நெய்,சர்க்கரை இருக்கட்டும்.
வாழ்த்துகள் ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, சர்க்கரை எல்லாம் உங்கள் அளவுக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.
இங்கே பெரிய மெகா மக் சைஸ் மாவு எடுத்துண்டேன். இரண்டு கப் எடுத்து செய்யுங்கோ மா.
ரொம்ப நன்றாக இருக்கும். அழகாக எடுத்துச் சொன்னீர்கள்.
நன்றி கண்ணா. இப்பவே வாசனை வரது. உங்கள் அல்வா பிரமாதம்.

Angel said...

வாவ் !! பார்க்க அருமையா இருக்கு .நானும் கோதுமை பாலெடுத்து செய்றத நினைச்சே பயந்திடுவேன் :)
நியூ இயற் கிறிஸ்துமஸுக்கு கூடுதஹ்லா ஒரு பட்சணம் ஸ்வீட் செய்யலாம் இப்போ எனக்கு :)
நன்றி வல்லிம்மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு பூவிழி, இனிய உணவாக அமைய
வாழ்த்துகள் மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
வாங்க வாங்க,
அரை மணி நேரத்தில் செய்துடலாம்.
நல்ல படியாக அல்வா அமைய வாழ்த்துகள்.
The twelve days of Christmas song shd be sung during making this halwa. hahahaahaha.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசித்தோம், ருசித்தோம்.