Blog Archive

Monday, April 18, 2016

இறைவன் இருக்கின்றான்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  நான்கு வருடங்களுக்கு முன்  ஒரு பெரியவருக்கு மூளையில் ரத்தக் கட்டி வந்து அதை
 இஸபெல்லில் அற்புதமாக எடுத்த விதம். அவர் மனைவி துணைக்கு நின்றது.
நானும் சிங்கமும் முடிந்த உதவிகளைச் செய்தது எல்லாம் எழுதி இருந்தேன்.
அதற்குப் பிறகு பிரளயமாக வந்தவை பல.
அதே வருடம் சிங்கம் இறைவனடி சேர்ந்த போது
குடும்பத்தோடு வந்த அந்த முதியவர் குலுங்கி அழுதது என்னையே கலங்க வைத்தது.

நான் அவர்களைச் சமாதானப் படுத்த வேண்டிய நிலைமை.
ஆறு மாதங்கள் கடந்தது. நான் அமெரிக்கா வந்த சில நாட்களில் 
பெரியவரின் மனைவி இதய பாதிப்பில்  காலத்தைக் கடந்துவிட்டார்.

அதுவே ஆறாத சோகமாக இருக்கும் போது, அவரது மகன் சாலையில் விழுந்த
ஒரே காரணத்தில் நிமிடங்களில் இறைவனடி அடைந்து விட்டார்.57 வயதுக்கு 
சர்க்கரை கொடுத்த பரிசு.

அதையும் கேசவன் சரணங்களில்  விட்டுவிட்டார்.

பக்கத்தில்  வசித்து வந்த மகளும்  இதே துக்கத்தில் 
சர்க்கரை அளவு அதிகமாகி இரண்டு நாட்கள் முன் தாயார் பெருமாளைச் சேர்ந்துவிட்டார்.

80க்கும் மேல்  சிலவருடங்களைக் கடந்துவிட்ட பெரியவருக்கு இனி 
சோதனை எதுவும் வேண்டாம்.

யாருக்குத் துன்பம்  வந்தாலும் சுந்தரகாண்டம் படித்து
அவர்களுக்கு  நிம்மதி  கிடைக்கச் செய்வார்.
அதே ராமன் அவரைப் பார்த்துக் கொள்ளட்டும்.

நான் இங்கிருந்து அனுப்பவதெல்லாம் பிரார்த்தனைகளே.

6 comments:

ஸ்ரீராம். said...

சோதனை மேல் சோதனை... இறைவன் அவருக்கு மனத்துணிவை அளிக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் நிச்சயமாகக் கொடுப்பார். எனக்கு இருக்கும் ஒரே ஒரு அன்பான பெரியவர். அதாவது என்னை விடப் பெரியவர். அவர் தேற வேண்டும் நிம்மதி பெற வேண்டும்.

Geetha Sambasivam said...

ரொம்ப வருத்தமா இருக்கு ரேவதி.

ராமலக்ஷ்மி said...

வருத்தமான நிகழ்வுகள். பெரியவருக்காக நானும் பிரார்த்திக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா. அவர் பரம வைராக்யத்துடன் தான் இருக்கிறார். காலம் காப்பாற்றும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, நன்றிடா.
எல்லாம் கடந்த மௌன நிலைக்குப் போய்விடுவதாகச் சொன்னார்கள்.
என்ன செய்யலாம்.