Blog Archive

Wednesday, April 24, 2013

நேயர்விருப்பம்--தொடர்கிறது,நடந்தது என்ன!!!!!!!!

தங்கியிருந்த  விடுதி
Add caption
க்ரிண்டெல்வால்ட்    கிராமம்
க்ரெண்டெல்வால்ட்  ரயில் நிலையம்
கிராமத்தின் ஓரத்தில்  ஒரு நதிக்கரை
ரயில் காணும் காட்சிகள்

 திரும்பிப் பார்த்தால் மகனின்  சிநேகிதன் செந்தில்.

எப்ப வந்தீங்க. .இவ்வளவு பேரும் எங்க கிளம்பிட்டீங்க
என்று சிரித்தபடி கேட்டான்.
க்ரெண்டல்வால்ட் போறோம்பா. 3 நாட்கள் அங்க  ஹாப்பிடேஸ் விடுதியில்
தங்கல்.
யுங்fஃப்ரௌ   சிகரம்  பார்க்கப் போறோம்.
பேசியபடியே திரும்பினால்  எந்த எஸ்கலேட்டரில் இறங்குவது என்று தெரியவில்லை.


(ஆமாம் கீதா....ப்லாட்ஃபார்முக்கு  இறங்கவும்  எஸ்கலேட்டர்தான்:(  )
8 ஆம் நம்பரா , 9 ஆம் நம்பரா.
எல்லாரும் எங்க போனாங்க.

செந்தில் நான் இறங்கவேண்டிய ப்ளாட்ஃபார்ம் எதுன்னு தெரியலையே என்றதும்,
அம்மாஆஆஆஆஆஆ
என்று கன்றின் குரல் கேட்டது.
ஆரம்பமே ரம்பம்னு சின்னவன் நினைத்திருப்பான்.

டேய் செந்தில் அம்மாவைக் கீழே 6ஆம் நம்பரில் இறக்கிவிடுடா, ரயில் கிளம்பப் போகிறது என்று சத்தம் போட்டான்.
சாரி ஆண்ட்டி,வாங்கன்னு என் கையைப் பிடித்துப் பத்திரமாக
இறங்கவும் ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது.


ஐய்யோ. என்னடா இது என்று மகன் முகத்தைப் பார்த்தேன்.
அந்த ட்ரெயின் இல்லம்மா
இந்தப் பக்கம் பாரு. மெள்ள நடந்து  இந்த ரயிலில் ஏறு
என்று மறுபக்கத்தைக் காண்பித்தான். பாட்டி வா என்று பேத்தி
கை காண்பித்தது.

ஒரு பக்கம் இறங்கினால் இரண்டு  பக்கமும்  ரயில்பாதை இருக்கும்.
 ஒன்று தெற்கே போனால் மற்றொன்று வடக்கே போகும்.
அழகா மேலே ரயில் புறப்படும் நேரம்,போகும் இடம்,அடுத்த ஸ்டேஷன் எல்லாம் எலெக்ட்ரானிக் போர்ட்  இருக்கும்.
எந்த அசடும் மிஸ் பண்ண முடியாது.!!!!!
நாந்தான்  மிஸ் பண்ணினேன்

அந்த ஊர்க்குளிரிலும் வியர்த்தது எனக்கு.
''உன்னை விட்டுட்டு நாங்க போகமாட்டொம்மா'என்று என் தலையைத் தட்டினான்  சின்னவன்.

மாமிக்குக் கால் சரியில்லை  இல்லாவிட்டால் முதலிலேயே வந்திருப்பார் என்று சம்பந்தி சமாதானம் சொன்னார்.

பக்கத்துல தூண் ஏதாவது இருந்தால் முட்டிக் கொள்ளலாம் என்று தோன்றியது. :(
முதல்ல  அந்த   sak bag  (என் கைப்பையைத்தான் சிங்கம் வர்ணிக்கிறார்.)
கீழ வை. ஒய் டோண்ட்  யூ ட்ராவல் லைட்?
நான் பணம் வைத்திருக்கிறேன். ஹரி வைத்திருக்கிறான். அதையும் மீறி உனக்கு இவ்வளவு பெரிய ஹாண்ட்பாக் எதுக்கு.
அதுவே உன்னைக் கீழே தள்ளிவிடும்.


அப்பா. அம்மாவோட மெடிசின் பூரா  அதிலதான் வைத்திருக்கிறார். நான்கு
நாட்களுக்கு வேணும் இல்லையா....இது  மகன்.

அம்மா  காலை நீட்டிவைத்துக் கொள்ளுங்கள் கால் வீங்குகிறது
இது மருமகள்!

பாட்டி ஷூவை அவுத்துடு.கால்வலிக்காது இது பேத்தி.

இதெல்லாம் மென்மையாகப் பார்த்தபடி மருமகளின் அம்மா.

என்னம்மா  சொன்னான் செந்தில்?நிலைமையை  சமாதான லெவலுக்குக் கொண்டுவர மகன் முயற்சி.

அவன் குழந்தைகளையும் மகனையும்  எப்போ அழைத்துவரப் போகிறான்னு கேட்டேன். அதற்குள் நீ கூப்பிட்டு விட்டாய்.

மகன் அப்பாவைப் பார்த்தான். ஹாட்ஸ்  ஆஃப்  அப்பா.

பெயரைச் சரியாகச் சொன்ன அம்மாவுக்கு

அவன் பிரம்மச்சாரி.
திருமணமானவன் இங்க இல்லை.இந்த விவரம் நினைவில் இல்லை.

எப்படிப்பா அம்மாவை ஹாண்டில் பண்றே.

என் ஃப்ரண்ட்ஸ்   வரும்போது அம்மா காஃபி மத்திரம் கொடுப்பாள். உள்ளவேலையிருக்குன்னு போய் விடுவாள் என்று பெரிய ஜோக் சொன்னது போல சொல்லவும்
எல்லோரும் சிரிக்க நானும் சிரித்தேன்.

http://naachiyaar.blogspot.in/2009/04/blog-post_25.html
**********************************************

இதைப் படித்தால் நிறைய சிரிக்கலாம்:)










 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

33 comments:

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ :-)))))))

ரொம்ப வருசத்துக்குமுன்னே ஒரு தெரிஞ்சவங்களை என்னோட மால் சுத்தும் நாளில் கூடக்கூட்டிட்டு போயிட்டு
இந்த எஸ்கலேட்டரால் நான் பட்ட பாடு இருக்கே!!!! பயந்து பயந்து கீழே விழுந்துட்டாங்க முதல்படியில் கால் வச்சதுமே:(

நல்லவேளை அடி ஒன்னும் இல்லை!

Geetha Sambasivam said...

//பக்கத்துல தூண் ஏதாவது இருந்தால் முட்டிக் கொள்ளலாம் என்று தோன்றியது. :(//

ஹிஹிஹி, செஞ்சிருக்கலாமோ? :))))))))

//முதல்ல அந்த sak bag (என் கைப்பையைத்தான் சிங்கம் வர்ணிக்கிறார்.)//

ஆஹா, அங்கேயும் அதே கதையா? என்னோட ஹான்ட் பாகிலே வைக்கச் சொல்லி ஒரு குடித்தனத்துக்கு உள்ள சாமானையே கொடுத்துட்டு, அதை ஏன் தான் தூக்கிண்டு வந்து கஷ்டப் படறியோ,வீசி எறிஞ்சுட்டுக் கையை வீசிண்டு வரக்கூடாதோ என்பார்! :)))))

இவர் கடை கண்ட இடத்திலே சாமானை வாங்கித் தள்ளிட்டு போனஸாக பர்ஸையும் அங்கேயே வைச்சுட்டு வந்துடுவார். நான் பக்கத்திலேயே நின்னுண்டு கண்குத்திப் பாம்பாப் பார்க்கணும். இல்லைனா கோவிந்தா தான். அந்தப் பர்சை அவருக்கும் தெரியாமல் எடுத்து ஹான்ட்பாகில் போட்டுட்டுத் தேடட்டும்னு விட்டுடுவேன். அப்புறமாப் பேசாம வருவார்! :)))))

//கீழ வை. ஒய் டோண்ட் யூ ட்ராவல் லைட்?
நான் பணம் வைத்திருக்கிறேன். ஹரி வைத்திருக்கிறான். அதையும் மீறி உனக்கு இவ்வளவு பெரிய ஹாண்ட்பாக் எதுக்கு.
அதுவே உன்னைக் கீழே தள்ளிவிடும்.//

அதானே, பணம் மட்டும் வைக்கவா ஹான்ட்பாக்? ம்ம்ம்ம்ம்ம்! :))))))

Geetha Sambasivam said...

நான் எஸ்கலேட்டரிலே தான் போயாகணும்னு சொன்னா அந்த இடத்துக்குப் போகவே மாட்டேன். :))))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான படங்களுடன் அட்டகாசமான கட்டுரை. பாராட்டுக்கள்.

//என் ஃப்ரண்ட்ஸ் வரும்போது அம்மா காஃபி மத்திரம் கொடுப்பாள். உள்ளவேலையிருக்குன்னு போய் விடுவாள்//

;))))) அம்மாக்கள் பாவம் !

ஸ்ரீராம். said...

ஹா....ஹா...ஓ... எஸ்கலேட்டர் கதையா....!

Anonymous said...

///
எந்த அசடும் மிஸ் பண்ண முடியாது.!!!!!
நாந்தான் மிஸ் பண்ணினேன்
////
இதுதான் எழுத்தாளர் டச்!

படங்கள் அருமை. கதையும் சுவாரசியம்.

நான் அதிகம் பயணித்ததில்லை. ஆனால் பயணித்த வரையில் ஐரோப்பாவின் பயணத்தில் நான் உணர்வன..
1. பாதுகாப்பு
2. தகவல் (சைன் போர்டுகள், இன்ஃபோகிராம்கள், அறிவிப்புகள், கனிவான பணியாளர்கள், தரமான மேப்புகள்)
3. நேரம் தவறாமை - தவறும் நேரத்தையும் உடனே தெரியப்படுத்துதல்
4. சுத்தம் சுத்தம் பரிசுத்தம் (ரயில் டேபிள்களை அசிங்கப்படுத்தும் ஐரோப்பியர்களும் இருக்கவே செய்கிறார்கள்)

நன்றி

வல்லிசிம்ஹன் said...

முதல் படிதானே கஷ்டம் துளசி.ஆத்தில ஒரு கால் சேத்துல ஒருகால் வைத்தால் விழத்தான் வேணும். பாவம். அந்த அம்மா.
எனக்கு அந்தப் படிகள் நகருவதைப் பார்த்தாலே மெஸ்மரைஸிங்காக இருக்கும். ஹா ஹா!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா மஹா மோசம் இவர்கள்.
உங்க வீட்டுக்காரராவது பர்சை வைப்பார். இங்க ஆளே காணாமப் போய்விடுவார்.

கண்டிப்பா ஒரு தூண் கட்டத்தான் போரேன். என்ன அதில ஒரு குஷன் வச்சிட்டு முட்டிக்கலாம்:)

வல்லிசிம்ஹன் said...

செல்லும் இடமெல்லாம் எஸ்கலேட்டர் மயம். போகாமல் எப்படி இருக்கிறது.

பழகிப் போச்சுப்பா. கீதா.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி கோபு சார்.
நினைத்துச் சிரிக்க இன்னும் எத்தனையோ சம்பவங்கள்.:)

அம்மாக்கள் பாவமே இல்லை. இவர் நண்பர்கள் எல்லாம் வெயிட் லிஃப்டிங், ஜிம் வொர்க் அவுட்னு ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்கள். எனக்கென்ன அங்க வேலை. மஹா போர். !நழுவிடுவேன்:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம் எஸ்கலேட்டர் தான். இந்த எஸ்கலேட்டரில் எங்க நாத்தனார் விழுந்திருக்கிறார். நம்ம சென்னைலதான்.
அதிலிருந்து சிங்கப்பூர் போவதானால் வீல்சேர்ல தான் ப்ளேன்ல ஏறுவார்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி பாண்டியன். எதற்கு தெரியுமா. என்னையும் எழுத்தாளர்னு சொன்னதற்கு.

ஐரோப்பாவில் ஸ்விஸ்ஸும் ஜெர்மனியும்,பாரீசும் தான் போயிருக்கிறேன்.அங்கேயும் அழுக்குச் செய்பவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் சொல்வது உண்மை.பொதுவாகக் கட்டணக் கழிப்பிடங்கள் வெகு
சுத்தம். அதே போல அழகாக ஆங்கிலத்திலும் எழுதிவைத்திருப்பதால்,ரயிலிலேயே மேப்களும் இருப்பதால் பிரயாணம் சுலபம்.மரியாதை தெரிந்த டிக்கெட் பரிசோதகர்கள். மற்றும் ரயில்வே ஊழியர்கள்..உங்கள் பின்னூட்டத்தின் மூலம் மீண்டும் அங்கே போய் வந்த உணர்வு வருகிறது.

கோமதி அரசு said...

வல்லி அக்கா,
நேயர் விரும்பத்திற்காக நினைவலைகள் அருமை.
நான் இவர்கள் எல்லாம் கூடவருகிறார்கள் என்று கைபை எடுத்து போகவில்லை என்றால் அப்போது தான் ஏதாவது பணம் , சில்லறை காசுகள் கேட்பார்கள் கொண்டு வரவில்லை என்றால் வெறுங்கையை வீசிக் கொண்டு வருவதா? என்று கேள்வி வரும் அடுத்து, எங்கு போனாலும் கையில் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும் , வீட்டுமுகவரி, போன்நம்பர் வைத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள்.

துளசி கோபால் said...

அட ராமா! நான் கேமெரா மட்டும் கையிலே எடுத்துக்கிட்டுப்போயிருவேன் பலமுறை.

சிலசமயம்தான் கைப்பை கூட வரும்:(

ஹொட்டேலில் அறையிலே லாக்கர் இல்லேன்னா கைப்பையைச் சுமக்கணும்:(

அப்பாதுரை said...

ஹெவன் ஆன் எர்த்னு சுவிட்சர்லேந்தை சும்மாவா சொன்னார்கள்? ஒரு தடவையாவது அங்கே பத்து நாள் கால் நடையாகச் சுத்த வேண்டும். ஹ்ம்ம்.

எஸ்கலேடரில் அந்தக் கும்பலில் ஊர்ந்து ஏறி/இறங்குவதற்குப் பதில் படிகளே மேல் என்று ஒதுங்கிவிடுவேன் (முழங்கால் இயங்கும் வரை செய்வோமே?).
வேக(?) எஸ்கலேடர்கள் இப்போது பல இடங்களில் நிறுவத் வரத்தொடங்கியிருக்கிறார்கள். அடுத்த முறை சிகாகோ வருகையில் try பண்ணிப்பாருங்க. அதுல தாவி ஏறுவது சுவாரசியம். ஒட்டகத்தை உக்காரவச்சு நம்மை ஏத்துவாங்க.. ஒட்டகம் எழும்போது ஒரு பீலிங் வருமே, அதுபோல உய்ய்னு நாலு செகன்ட். (சொன்னப்புறம் சிகாகோ வருவீங்க தானே?)

அப்பாதுரை said...

பெண்களும் கைப்பையும்...பிள்ளையைக் கூட பிரிவார்கள்.

Geetha Sambasivam said...

(சொன்னப்புறம் சிகாகோ வருவீங்க தானே?) //

நிச்சயமா அந்தத் திசையிலே கூட நான் போக மாட்டேன். :))))))

வல்லிசிம்ஹன் said...

அதுதான் கோமதி. அதுவும் வெளி நாடுபோகும்போது சட்டுனு ஐடி தேவைப்படும்.எல்லாம் தனித் தனி பாக்கெட்ல இருக்கும். எனக்கு ஏதாவது வாங்கவேண்டும் என்றால் அந்த ஊர்ப்பணம் தனியாக வைத்துக் கொள்ளவேண்டாமா:) எல்லா ஸ்வாமிபடங்கள் வேற தனியே வைத்துக் கொள்ளவேண்டும்!!!கொஞ்சம் பௌடர்,பொட்டுகள்;)நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அதானே காமிராவை மறந்துட்டேனே:)

அப்போது பெரிய பைதான் வேணும் இல்லையா துளசி:)

வல்லிசிம்ஹன் said...

2000 ஆம் ஆண்டு முதல் தடவை ஸ்விஸ் போகும்போது இத்தனை முழங்கால் வலி கிடையாது.
அதனால் படிகளையும் உபயோகித்தேன். இப்போது எஸ்கலேட்டரே பழகிவிட்டது. வாக்கலேட்டர் துபாயில் மஹா சௌகர்யம்.வேக எஸ்கலேட்டர்களா?
ஓஹோ. ஜாக்கிரதையா இருக்கணுமே:)
நீங்கள் ஸ்விஸ் வந்து போகும் ப்ளான்
வைத்துக் கொள்ளுங்கள்.மனதுக்கும் உடலுக்கும் நன்மை.

வல்லிசிம்ஹன் said...

பெண்களும் கைப்பையும் பிள்ளைகளைக் கூடப் பிரிவார்களா.
:)
துரை! எல்லா நாளும் பிள்ளையையும் தூக்கிக் கொண்டு போக முடியுமா:)

ADHI VENKAT said...

//பிரம்மச்சாரி//! ரசித்து சிரித்தேன்...

எல்லாருமே ஏறக்குறைய ஒருபோலத் தான்...:))

என் எஸ்கலேட்டர் பயத்தை தெரிந்து கொண்டே என் கணவர் இது மட்டுமே இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்வார். கிட்டப் போனாலே தலையை சுத்தும்...:)

என் கணவரோடு வெளியே செல்லும் போது அவரின் நடை வேகத்தை பற்றி தெரிந்ததால், அந்த உயரம்,சட்டை இவற்றை வைத்துக் கொண்டு பின்னாலேயே ஓடுவேன். இல்லையென்றால் கையை பிடித்துக் கொண்டு விடுவேன்...:)))

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி,முதலிலேயே கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்:)
நீளக்கால்களோடு நானும் போட்டிபோட்டுத் தோற்றிருக்கிறேன்.:)ஒரு நிமிடம் கண்ணில் தெரிவார்கள்.அடுத்த நிமிஷம்
ம்ஹூம்!!
இதெல்லாம் இப்ப ஒரு பதினைந்து வருஷமாகத்தான்..
பசங்க இங்க இருந்த போது இத்தனை சிரமம் இல்லை. நல்லவேளை திருச்சியில் எஸ்கலேட்டர் இல்லை:)

வெங்கட் நாகராஜ் said...

திருச்சியிலும் சில இடங்களில் எஸ்கலேட்டர் உண்டு! :))))

ஆதியே சில எஸ்கலேட்டர் விஷயங்களைச் சொல்லி விட்டதால் எனக்கு வேலை மிச்சம்! :)))

பதிவினை ரசித்தேன்...

ADHI VENKAT said...

இப்போது எஸ்கலேட்டர் பழகி விட்டது...:)) படியேறிப் படியேறி கால்கள் ரத்தம் கட்டிப் போய் கற்றுக் கொண்டு விட்டேன்...:)))

தங்களது அனுபவம் போல் சமீபத்தில் எனக்கு ஒரு அனுபவம்...

வெளியே சென்று வந்த நாங்கள் திருவானைக்காவலில் இறங்கியவுடன் ஸ்ரீரங்கத்துக்கு பேருந்து பிடிக்க வேண்டும். அந்த வழித்தடத்தில் வந்த பேருந்தில் ஏறப் போனேன்.

ஒரு நிமிடம் இரு என்றார். ஏன் என்றேன். நீ சமயபுரத்துக்கு இப்போ எதுக்குப் போகப் போற என்றார். புரியவில்லை... நம்பர் சரியாத் தானே இருக்கு என்றேன். என்ன எழுதியிருக்குன்னு படிப்பதில்லையா? படிச்சவ தானே என்று டோஸ் வாங்கிக் கொண்டேன்.

என்ன எழுதியிருந்தாலும் அதல்லாம் படிப்பது இல்லை. துரத்திக் கொண்டு ஓடுவதா?..

இது எப்படியிருக்கும்மா....:)))

வல்லிசிம்ஹன் said...

வெங்கட் நல்ல ஜோடிதான் நீங்களும் ஆதியும்.:)
மெள்ள்நடகப் பழகிக்கணும் மா. பாவம் இல்லையா பொண்ணு!!
நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

ஆதி ! நீங்களுமா.
அடப்பாவமே. அவர்களுக்கு நம் அவசரமும் புரிவதில்லை நிதானமும் புரிவதில்லை.
வீட்டுக்குப் போனால் ஆயிரம் வேலை அந்த அவசத்தில் நீங்கள் ஏற அவர் தடுக்க,அம்மன்தான் காப்பாற்றினாள்:)

டோஸ் வாங்கப் பிறந்த ஜன்மங்கள் என்று சிலபேர் இருக்கிறோம்.;)

சாந்தி மாரியப்பன் said...

ரசிச்சுச் சிரிச்சேன் வல்லிம்மா. மனசே லேசாகிட்டது :-)

வை.கோபாலகிருஷ்ணன் said...


பொக்கிஷம் [பகுதி-11] நிறைவுப்பகுதி தங்களின் பொக்கிஷமான கருத்துக்களுக்காக காத்துள்ளன.

http://gopu1949.blogspot.in/2013/04/11_24.html

இதுவரை முதல் 10 பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள். மிக்க நன்றி.

அன்புடன் VGK

மாதேவி said...

சிரித்துக்கொண்டே படித்தேன்.:)

படிக்கும்போதே உள்ளுக்குள் நெருடல் எமக்கும் இதுபோல் காலம் வருமே :(
இப்பொழுதே சிலசமயம் கவனமாக வாங்கோ என ஆரம்பித்து விட்டாள் மகள் :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல்.ரெண்டு பேரையாவது சிரிக்க வைக்க முடிந்தால் அந்த சம்பவத்துக்கு ஏதோ அர்த்தம் இருக்கு:)

வல்லிசிம்ஹன் said...

வந்து படிக்கிறேன் கோபு சார். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
வயதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை:)
கவனக் குறைவு.எதையோ நினைத்துப் பராக்குப் பார்ப்பது இதெல்லாம் தான் காரணம். உடல் நம் வசத்தில் இருந்தால் கடலையும் தாண்டலாம் மா.