Blog Archive

Saturday, March 09, 2013

,மகளிர் முன்னேற்றத்தை விரும்பிய மாமியார்






சக்கர வண்டியில் ஏற  மறுத்த திடம் வேறயாருக்கும் வராது.என் அன்புள்ள அம்புலு அம்மா




அற்புதமான     மங்கை
சாதனை புரிந்தவர்,
எட்டுவயதில் திருமணம் புரிந்து
எட்டாம் வகுப்பு வரை  படித்து
மாமியார் மாமனார் காட்டிய வழியில்

சேலம் சென்று புதுக் குடித்தனம் ஆரம்பித்து
சிறிய அளவில்  ஆரம்பித்த  லிஃப்கோ கரி வியாபாரத்தைப் பெருக்கி,
தன்முனைப்பால் மகளிர் அணியைத் திரட்டி

சாரதா  பள்ளியின் மேலாளராகத் திறம்பட நடத்தி
போர் முனைத் தீவிரத்துடன்
வருந்திய   மகளிர் விஷயங்களில் தலையிட்டு
ஆயிரக் கணக்கான  வழக்குக்களைத் தீர்த்து வைத்தவர்

என் சிறிய மாமியார் திருமதி அலமேலு சம்பத்.

கொண்டாடப் படவேண்டிய மனுஷி.
தன் 92 வயதில் சென்ற சனிக்கிழமை அன்று
இயற்கை எய்தினார்.

சேலத்தில் இவரைத்  தெரியாதவர் இருக்க முடியாது.
அதற்குச் சாட்சி  அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை.

அவருடன் இருந்தால் நம்மையும் தொற்றிக் கொள்ளும்
அந்தக் கம்பீரமும் உற்சாகமும்.
ஒரு நொடி   கூட    உட்காராமல் சுறுசுறுப்பாக இயங்கி
அஷ்டாவதானியாகச் செயல் பட்டவர்.
மற்றவர்களையும் இயங்க வைத்தவர்.

பேரன்,பேத்திகளிடம்  கண்டிப்பு,செல்லம் என்று சரியான விகிதத்தில்

வழங்கியவர்.
திறமை கண்ட இடத்தில் பாராட்டாமல் இருக்கமாட்டார்..
அவர் உண்மையாகவே  ஒரு சகாப்தம் தான்.

எங்கள் உள்ளத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்த அன்பு அம்புலுஅம்மாவுக்கு அஞ்சலிகள்.





 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

26 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அம்புலு அம்மாவுக்கு அஞ்சலிகள்...

துளசி கோபால் said...

எங்கள் அஞ்சலிகளும்.

பெருமாளே வந்து அழைச்சுக்கிட்டுப் போயிருப்பார்,இல்லெ?


அரக்கில் நீலம்(எழுத்து) பளிச்சுன்னு தெரியலைப்பா:(

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். அவர் படம் ஒன்று கிடைக்கவில்லை என்பதே வருத்தம். சேலம் சென்று திரும்பிவரும்போது
கொண்டுவருவேன் என்று நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அட்டாயம். கும்பகோணம் சாரங்கபாணி,ஆராவமுது பெருமாள்களுக்கு வருடம் தோறும் திருமஞ்சனம்,ஊஞ்சல் உத்சம் என்று பல நல்ல காரியங்களும் நடக்கும்.
நிலங்களை மேற்பார்வையிட்டு வளம் பெறும்படிச் செய்வார்.
மகா கண்டிப்பு.நம் ரமாரவிக்கு அவரை நன்றகத் தெரியும்.

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் என்று படிக்கவும் துளசிமா.

சாந்தி மாரியப்பன் said...

எங்களது அஞ்சலிகளும்..

Geetha Sambasivam said...

பெண்கள் தினக் கொண்டாட்ட வாரத்தில் சாதனைப் பெண் ஒருவரின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தமும், மனமார்ந்த அஞ்சலியும். இவரைப் போன்ற பெண்கள் மேன்மேலும் பெருகி வளரவும் இன்றைய பெண்களுக்கு வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

எங்களது அஞ்சலிகளும். /மகளிர் விஷயங்களில் தலையிட்டு
ஆயிரக் கணக்கான வழக்குக்களைத் தீர்த்து வைத்தவர்/ இப்படியானவர்களின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. முனைப்போடு களம் இறங்கி செயல்படுகிறவர் மிகக் குறைவே. திருமதி அலமேலு அம்மாவுக்கு எங்களது அஞ்சலிகளும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தப்பதிவின் மூலம் எங்கள் உள்ளத்திலும் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்த அன்பு அம்புலு அம்மாவுக்கு எங்கள் அஞ்சலிகளும் உரித்தாகுக!

ஹுஸைனம்மா said...

நம்ம ராம்விக்கா ஒரு பதிவில் எழுதிருந்தாங்களே, அவங்கதானே?

நம்ம குடும்பத்திலேயே இபப்டியொருத்தர் இருப்பது நமக்கும் ஒரு ஊக்குவிப்பு; நாம செய்றதை மத்த குடும்பத்தினரும் தடுக்க மாட்டாங்க.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

மாத்திட்டேன்பா துளசி.
சுமார் ஒன்றரை வருடங்கள் நலிந்திருந்தார். உடல்நலம் திடீரெனக் குன்றியது.அவர் விருப்பபடியே சிரமம் இல்லாமல் சென்று விட்டார்.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

நன்றி மா சாரல்.
நன்றி ராமலக்ஷ்மி.

நன்றி ஹுசைனம்மா. ஆமாம் ரமா எழுதின பதிவில் வந்த மேலாளர் அவர்தான்.

நன்றி கோபு சார்.

நன்றி கீதா. அவருக்கு உறுதுணையாக இருந்தவர் எங்கள் மாமனார்.மனைவியைப் பற்றி பெருமைப் படுவார்.

RAMA RAVI (RAMVI) said...

கட்டாயம் கொண்டாடப்பட வேண்டிய அற்புதமான மனிதர் அவர்.

நான் சென்று பார்த்து பேச முடியாமல் போய்விட்டது எனக்கு மிகவும் வருத்தம்.

கோமதி அரசு said...

சாரதா பள்ளியின் மேலாளராகத் திறம்பட நடத்தி
போர் முனைத் தீவிரத்துடன்
வருந்திய மகளிர் விஷயங்களில் தலையிட்டு
ஆயிரக் கணக்கான வழக்குக்களைத் தீர்த்து வைத்தவர்//
அற்புதமான மனுஷி.

சிறந்த பெண்மணி, உங்கள் சிறிய மாமியார் . திருமதி அலமேலு அம்மாவுக்கு எங்களது அஞ்சலிகள் வணக்கங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அவருக்கு எனது அஞ்சலிகள்.....

ஸ்ரீராம். said...

சாதனையாளர். எங்கள் அஞ்சலிகள்.

அப்பாதுரை said...

"எப்படி வாழ்ந்தோம் என்பது முக்கியம்" என்பதன் பொருளை அவ்வப்போது சிலர் விளக்கிவிட்டுப் போகிறார்கள்.
அலமேலு அம்மாள் போல்.
அவர் இருந்த காலத்தில் நாமும் இருக்கிறோம் எனும் அல்ப ஆறுதல், பிரிவின் வருத்தத்தைக் கொஞ்சம் தணிக்கக் கூடும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரமா, எனது மைத்துனர் எனக்கு விளக்கிக் கடிதம் எழுதி இருந்தார்.

உடல் நிலை அப்பவே சீராக இல்லை.
பிறகு பங்களூருவிலிருந்து கிளம்பிச் சேலம் வந்தாச்சு,.
நானும் தொலைபேசியில் பேசினதுதான்.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி.
எல்லாவிதத்திலும் தீர்க்க முடிவு எடுப்பார். அவர் சொல்லும் சொல் நிறைவேறும். விட மாட்டார்.
திருமணமான புதிதில் சேலத்துக்கு எங்களுக்கு மாற்றம் ஆகியது. அப்போது அவர்கள் வீட்டில் பத்துநாட்கள் தங்கி இருந்தோம்.
அந்தவீட்டின் நித்தியமல்லி மணம் போலவே இன்னும் அந்த நாட்கள் மனதில் நிற்கிறது.
ஏ மாட்டுப்பொண்ணே'என்று விளிக்கும் அழகே தனி:)

வல்லிசிம்ஹன் said...

@வெங்கட்,ஸ்ரீராம் நன்றிகள் மா. திடம் கொண்டு போராடிய பெண்மணிக்கு இன்னாளில் அஞ்சலி செலுத்தலாம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துரை, ஒன்பது கஜம் புடவையும்,பளபளக் கண்ணாடியும் ஒன்பது வைரக்கல் தோடுகளும்
பச்சைசிவப்பு வளைகளும்,
வாங்கடி பொண்டுகளா என்று அழைக்கும் அழகும்
அவர்களுக்கு வேலை கற்றுத்தரும் அழகும் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.அருமையான பெண்மணி.

இராஜராஜேஸ்வரி said...

எங்கள் உள்ளத்திலும் பதிவின் மூலம் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்த அன்பு அம்புலுஅம்மாவுக்கு அஞ்சலிகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி. மனம் நிறைந்த மகளிர்தின வாழ்த்துகள்.

ADHI VENKAT said...

அம்புலு அம்மாவுக்கு எங்கள் அஞ்சலிகளும்...

நிச்சயம் போற்றப்பட வேண்டியவர் ...