Blog Archive

Friday, October 21, 2011

வைத்தியருடன் ஒரு சந்திப்பு

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சீக்கிரமாக  இன்று பதிவு போட முடியவில்லை.

எலும்பு வைத்தியரிடம் போகவேண்டிய கட்டாயம்.. ஆழ்வார்ப்பேட்டையிலியே இருந்திருக்கிறார்.
இதை இன்னோரு நண்பர் சொல்லித் தெரிந்து கொண்டு  நேரமும்  குறித்துக் கொண்டு
போனோம்.

ஒன்றுமே சேய்யவில்லை. முழங்காலையும், குதிகாலையும் முன்னும் பின்னும் ஒரு அழுத்தம் கொடுத்துப் பார்த்தார்.
அலற இருந்த   வாயைக் கட்டினேன்.
பிறகை முதுகில் எலும்பில் கைவைத்து அழுத்தி,''வலிக்கிறதாம்மா''
என்று கேட்டார். அதிசயம்!!  ஆனல் உண்மை. வலிக்கவே இல்லை.

உங்கள் வலிக்கு எல்லாம் காரணம் நீங்கள் 2000இல்  உங்கள்  முதுகு தரையில் பட விழுந்ததுதான்''என்றாரே பார்க்கணும். அதிலிருந்தே உங்கள்   தசைகள் இறுக்கமாகி விட்டன.
வலது பக்கமாக நீங்கள் விழுந்ததால் வலது முழங்காலும் ,பாதமும்
பலவீனமாகிவிட்டன'' நீங்கள் அடிக்கடி விழுவதற்கும்  அதுவே காரணம்.

தசை  நார்கள்   பலப்பட  ஃபிசியோதெரபி   எடுத்துங்கள்.  30 நாட்களீல்  பயமில்லாமல் நடைப் பயிற்சிக்குப் போகலாம் என்று சொன்னதுதான்  ஹைலைட்.
11 வருட முழங்கல் வலிக்குப் பின்னால் இத்தனை பலமான  காரணம்
இருக்கிறதா என்று அதிசயமாக இருந்தது.

காலவல்த்தாலும் நடந்தால்தான் கொழுப்புச் சத்து குறையும்.குறையாவிட்டல் நான் பொறுப்பில்லை என்ற   சர்க்கரைக்கான வைத்தியர் கிளப்பின பயமே என்னைக் காலுக்கான் டாக்டரிடம் துரத்தியது.
காரணம் தெரிந்துவிட்டது. இனி பீடு நடை போட்டு ப் பழக வேண்டியதுதான்..
ஏற்கனவே நானானி சொன்னது போல நடைப் பதிவாளர் சங்கம் ஆரம்பிக்க வேண்டியதுதான்.
அப்போது தினமுமே பதிவர்கள் மீட்டிங் நடக்கும். நடப்பதால் பதிவுலகமும் ஆரோக்கியமாக இருக்கும்.:)

ஆமாம், மேலே போட்ட படத்திலிருப்பவருக்கும் ,பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால்  அவர்தானே எங்க வீட்டுக் காரரும், வாகன ஓட்டியுமா அவதாரம் எடுப்பவர்:)


7 comments:

கோமதி அரசு said...

இனி பீடு நடை போட்டு ப் பழக வேண்டியதுதான்..//

இனி எல்லாம் நலமே.

உங்கள் கால்வலி பூரணமாய் குணமாகி
பீடு நடைப்போட்டு பதிவர்களை தினம் சந்திக்க வாழ்த்துக்கள் அக்கா.

தி. ரா. ச.(T.R.C.) said...

சிங்கம் இளம் சிங்கமாஇருந்தபோது கம்பீரமாக இருக்கார். அதுசரி சிங்கம் சொல்றீங்களே ரொம்ப கோபம் வருமோ.
வைத்தியர் இப்போ எல்லாம் சரியா கண்டுபிடிப்பதில்லை.

geethasmbsvm6 said...

சிங்கிக்கு ஏற்ற சிங்கம் தான். பீடுநடை போடுங்கள். வாழ்த்துகள்.

geethasmbsvm6 said...

தொடர

மாதேவி said...

நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

"நடைப் பதிவாளர் மீட்டிங் தினமும் நடக்கும் " வாய்பேசட்டும் காலும் ஓய்ந்துவிடாமல் நடக்கட்டும் :)))))))

நானானி said...

உங்கள் வாகனத்துக்கு மட்டுமா....வாழ்கை வாகனத்துக்கும் அவர்தானே ஓட்டி!

பீடு நடை போட வாழ்த்துக்கள்!!

sultangulam@blogspot.com said...

அம்மா! மேலும் நலம் பல சூழ்க!