Blog Archive

Friday, September 09, 2011

காலங்கள், பயணங்கள்,அனுபவங்கள்

துபாயின் அழகு விமான நிலையம்
துபாய் மெட்ரோ
புதிய  கடிகாரம், காலம் மாறுகிறது:)
 பயணங்களும் முடிந்து  சென்னையும் வந்தாகிவிட்டது.
அரைமணி நேரத்தில் வழக்கமான பரிசோதனைகளை முடித்து வேலை வரும்போது நம்ம சென்னை எர்போர்டா  இப்படி மாறி இருக்கிறது ஒரே ஆச்சரியம்.

கும்பலிலும் அமைதி.
கசகசப்பு இல்லை. அப்போதுதான் மழை பெய்து ஓய்ந்திருந்தது.

சங்கீதாவில் வண்டியை நிறுத்தி ஆளுக்கொரு பொட்டலம் இட்டிலியும் சட்டினியும் வாங்கும் போது  விலை அதிகரிப்பு கொஞ்ச்சம் உரைத்தது:)

தினமணியும் ஹிந்து பேப்பரும் ஆன்லைனில் படித்துக் கொண்டு வந்ததால் அவ்வளவு அதிர்ச்சி இல்லை.

விமானத்தில் சில இந்தியர்களின் நடவடிக்கைகள் தான் வருத்தம்
கொடுத்தது.

ஏறியதிலிருந்தே அவர்கள்   மற்ற நபர்களைப பற்றி  கமென்ட்  செய்வதும். கொஞ்சம் உற்சாக பானம் உள்ளே  போனதும்

கொஞ்சம் பருமனாக இருந்த
 ஒரு அம்மாவை '' ஒரு டிக்கட்டுக்கு ரெண்டு பேரு வந்து இருக்காங்கன்னு சொன்னதும்
உரத்த குரலில் சிரிப்பதும்
கொஞ்சம் அமைதியைக்    கலைப்பதாகத் தான் இருந்தது. விடுமுறையைக் கழிக்கச் செல்லும் உற்சாகம் இருக்க வேண்டியதுதான்.
ஒரு பத்து நபர்கள்   இப்படி நடந்ததால்
ஒட்டுமொத்த இந்தியர்களையும்
  யாரும்   தப்பாக நினைக்கப் போவதில்லை.

எனக்குத் தான் அவர்கள் சொன்னது போல  "பெரிசு"க்கான புத்தி வந்துவிட்டது   என்று  நினைக்கிறேன்.;))


சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டார்கள்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

8 comments:

துளசி கோபால் said...

வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருந்துட்டாலும்.........

சங்கீதாவில் விலை ஏற்றம் ஹிண்டுவில்
போடலையா:-)))))))

வல்லிசிம்ஹன் said...

பார்க்கலையேப்பா:(
புறப்படும்போது ஐந்து சின்ன இட்லி 25 ஆக இருந்தது.
இப்பொ ஒரு இட்லி 10 ரூபாய்.!
வாய்ப் பேசத்தானே இருக்கு.:))

ஸ்ரீராம். said...

சுற்றுப் பயணம் முடிந்து சென்னை திரும்பியாச்சா...

"ஒரு டிக்கெட்டில் இரண்டு பேர்"....தன்னிலை மறக்க வைக்கும் போதைதான் அந்த மாதிரி நாகரீகமற்ற பேச்சுகளுக்குக் காரணம். போது இடங்களிலும் பயனங்களிளுமாவது மக்கள் போதையைத் தவிர்க்க மாட்டார்களோ...

சங்கீதாவில் இரண்டு இட்லி சாம்பார் பதினெட்டு ரூபாய், மினி இட்லி சாம்பார் முப்பத்தைந்து ரூபாய்!!

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம் அன்று இரவு இட்லியை வண்டி அபிராமபுரம் சங்கீதாவில் தான் நிறுத்தினோம்.
பத்துரூபாய்னு காதில் விழுந்ததும் எனக்குத் தயிர் சாதம் போதும் என்று விட்டேன்:)

போதைதான் வாயைத் திறந்துவிடுகிறது. நல்ல செழிப்பான இளைஞர்களாகத்தான் இருந்தார்கள்.
யாரும் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை என்பது இன்னோரு அதிசயம்:)

கதம்ப உணர்வுகள் said...

சுற்றுப்பயணம் நல்லபடி அமைந்ததா உங்களுக்கு?

மனம் புண்படும்படியான வார்த்தைகளை கிண்டலுக்கு பேசும்போது அவர்கள் நாகரீகம் இழந்தவர்களாகிறார்கள்...

அதே நிலையில் அவர்களை வைத்து வேறு யாராவது இப்படி பேசி இருந்தால் ஒருவேளை அதன் வலி உணர்ந்திருக்க வாய்ப்புண்டு...

அருமையான பகிர்வுப்பா....

வல்லிசிம்ஹன் said...

அன்பு மஞ்சுபாஷிணி, முதல் வருகைக்கு
மிகவும் நன்றி.
உடல் உறுப்புகளைப் பற்றியெல்லாம் கேலி செய்யும்போது குறுகித்தான் போகிறொம்.
பரவாயில்லை. அவர்கள் வயது அப்படி.
மிக மிக நன்றிமா.

Geetha Sambasivam said...

சென்னை வரும் விமானங்களில் நீங்கள் கூறுவதே பெரும்பாலும் நடக்கின்றது. அது எங்கிருந்து வந்தாலும்! :((( நம் நாட்டு மக்கள் எங்கு சென்றாலும், எவ்வளவு படித்தாலும் மாறமாட்டார்கள். :(((( மனம் வருந்த வைக்கும் செயல்கள் தான் அதிகம் காணலாம்.

மாதேவி said...

உங்கள் இனிய பயணங்களினால் பல இடங்கள் நாங்களும் சுற்றிப் பார்த்தோம். மிக்கநன்றி.