Blog Archive

Monday, June 21, 2010

மாமியாருக்கு ஒரு சேதி






மகனுடைய திருமண ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்து

எல்லா உறவுகளையும் மீண்டும் பார்த்த சந்தோஷத்தில் ஆல்பத்தை மூடி
வைத்து உறையில் போட்டேன்.


ஒரு அழகான ஆனந்தத்தை மட்டுமே பிரதிபலிக்கும் அந்த இரண்டு நாட்களை நிறைவாகப் பதிவு செய்த புகைப்படக் காரரை மனம் வாழ்த்தியது.




மணமக்களைச் சுற்றியே படங்களை எடுக்காமல் வந்தவர்களையும்
முக்கியப் பட்டவர்களை விட்டுவிடாமல்
எடுத்திருந்தார்.
முதன் முதல் வீட்டுக்கு வந்தபோது அவரிடம் விவரமாக உறவினர்கள் பற்றிச் சொல்லி இருந்தேன்.
திருமணங்கள் நிச்சயிக்கப் படும்போது,
கவனிக்க வேண்டிய பல விஷயங்களில் இந்த வீடியோவுக்கு மிகவும் பிரதான இடம் கொடுக்கப் படுவது நமக்குத் தெரியும்.

பல திருமணங்களில் தாலி முடியப்பட்ட அடுத்த நிமிடம் ஒரு படை திருமண மேடையை நோக்கி விரையும்.
அன்பு உறவினர்கள்தான்.


முன்பு இந்தக் கும்பலில் நானும் இருப்பேன்.:)

கால் தடுக்கி விழும் வாய்ப்புகள் அதிகரிக்கவே நான் கீழே நின்றே திருமணம் செய்துகொண்ட தம்பதிகளை அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்வதை வழக்கப் படுத்திக் கொண்டேன்.
முக்கால்வாசி வீடியோக்காரர்கள் தலையில் விழும்:)

இதைத் தடுக்கவே எங்கள் முதல் மகன் திருமண வீடியோக்ராஃபரிடம் அவரையும் அவரது கொற்றக் குடை தூக்கி(அதான் விளக்குப் பிடிப்பவர்)யையும் கொஞ்சம் இடம் பார்த்து நின்றுகொண்டு வருபவர்களை மறைக்காமல் தம்பதிகளையும் தொந்தரவு செய்யாமல், என்ன செய்யலாம் என்று கலந்தாலோசித்தோம். நல்ல் திர்மானக்களோடு அட்வான்ஸ் தொகையையும் வாங்கிச் சென்றார்.
அந்தப் பையன் மகா ஆர்வம் காட்டி படங்கள் எடுத்தார். என்னை அளவுக்கு அதிகமாகவே பலப்பல முகபாவங்களில் எடுத்திருப்பதைப் பிறகு தான் தெரிந்து கொண்டேன்.
இந்தத் திருமணம் அவரது இரண்டாவது ப்ராஜெக்ட். மிகக் கவனமாக வேலைகளைச் செய்தார்.
திருமணம் முடிந்து மகனும் மருமகளும் தேநிலவு போய் வந்த பிறகு
எல்லோரும் உட்கார்ந்து வீடியோக்களையும் பட ஆல்பங்களையும் பார்த்துக் களித்தோம்;)
அப்பதான் வந்தது சங்கடம்.:(

பெண் வீட்டுக்காரர்களின் படங்கள் குறைவாகவே இருந்தன. முக்கியமாக மாலை மாற்றும் ஒரே மாமாவே பல இடங்களில் இருந்தார். இன்னும் இரண்டு மாமாக்களைக் காணவில்லை. அதே போல மருமகளின் அப்பாவும் அம்மாவும்
திருமணக் களைப்பில் ஓய்வாக இருந்த போதும், பசி அளவு கடந்து போய்க் கடைசி பந்தியில் அவர்கள் உண்ணும் போதும் எடுத்திருந்தார்.

இப்பப் புரிந்திருக்குமே. நான்,என் கணவர் மற்ற மூன்று பிள்ளைகள் எல்லோரும் பளாபளா என்று நிறையப் படங்களில் சந்தோஷப் புன்னகையோடு போஸ் கொடுக்கச் சில படங்களில் மட்டுமே

மணமகளும் வீட்டவரும் காட்சி அளித்தார்கள். முகம் சோர்ந்து, ஒரு துளி சிரிப்பு கூட இல்லாமல்....
இதைப் பார்த்த புது மருமகள் முகத்தில் ஈயாடவில்லை.

ஏதோ திட்டமிட்டு இது நடந்த மாதிரி ஆகிவிட்டது.
உடனே வீடியோக்ராபரை அடுத்தக் கல்யாணத்துக் கிளம்பும் முன்னால்
பிடித்தோம்.
வந்தவரைப் பிடித்து உலுக்கிவிட்டான் புது மாப்பிள்ளை.

இது எப்படி ஆச்சு. அவங்க வீட்டுக்காரங்களை இப்படிக் கவனிக்காம விட்டீங்களே.திருமணம் இரண்டு வீட்டு பிணைப்பு இல்லையா. அதுக்கு அடையாளமாத் தானே ஆயிரக் கணக்கில் உங்களுக்குக் கொடுத்துப்
படங்கள் எடுக்க வைத்தது என்று அடுக்கவும்,
அந்த இளைஞன் நடுங்கிவிட்டார்.

பொதுவா பொண்ணு வீட்டுக்காரங்களோட வீடியோக்ராபர் அவங்களைக் கவனிப்பார். நான் உங்க வீட்டு பக்க ஆளுங்களையே எடுத்தேன் சார்.
அவங்க வீட்டிலயும் இப்படித்தான் அந்தப் போட்டோக்காரரும் செய்தார்''னு அவர் சொன்னதும்தான் ,
நாணயத்தின் அடுத்த பக்கம்(மணிரத்னம் கூட இந்த ஃப்ரேஸை உபயோகப் படுத்தினார்,ராவணன் முன்னோட்டத்தின் போது:) ) தெரிந்தவனாக,தெளிந்தவனாக
தன் புது மனைவியைச் சமாதானப் படுத்த உள்ளே விரைந்தான்.

மாமியாராக முதல் முதலாகச் சந்தித்தப் பிரச்சினையை எளிதில் ஊதித் தள்ளிய எங்க வீட்டுக்காரருக்கு நன்றிகள் சொல்லிவிட்டு, அவர்கள் வீட்டு வீடியோவைக் கொடுத்தனுப்பும்படி சம்பந்தியம்மாவுக்குப் போன் செய்தேன். அடையாரிலிருந்து ஒரு இரண்டு மணி நேரத்தில் அவங்களும் மத்த இரு பெண்களோடவும் , மனம்,முகம் கொள்ளாத சிரிப்போடு சம்பந்திகள் வந்தார்கள். வீடியோவோடுதான்.
ஒன்று இல்லை இரண்டு இல்லை நாலு சிடீக்கள்!!!
பார்க்கப் பார்க்க என்னுள் ஏதோ மிரள ஆரம்பித்தது.:)
நாங்கள் முதலில் பந்தலில் நுழையும் போது இருந்தோம்.
ஆரத்தி எடுத்து படிகளில் ஏறியதற்கப்புறம்,
ஊஞ்சல் காட்சிகளில் எங்கள் தலைகள் மட்டும் தெரிந்தது:)


தாலிகட்டும் நேரம் தவிர மற்ற நேரத்தில் எங்கள் யாரையுமே(மாப்பிள்ளை தவிர) பார்க்க முடியவில்லை.!!!!
அப்பாடா தானிக்கு தீனி என்று மனசு அமைதி அடைந்தது:))))))

இப்போது எல்லாம் உனக்கு நீ எனக்கு நான் என்ற சந்தோஷமான லைன் ஆஃப் கண்ட்ரோலில் சம்பந்திகள் இயங்குகிறோம்.:)










எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

30 comments:

pudugaithendral said...

அம்மாவுக்கு இந்தச் சேதியை சொல்லிடறேன். தம்பிக்கு வரன் பாத்துகிட்டு இருக்கோம்ல :)

சந்தனமுல்லை said...

வெகு சுவாரசியம் வல்லியம்மா!
என்னோட கொசுவத்தியையும் நினைவு படுத்திட்டீங்க..சீக்கிரம் எழுதறேன்..:-))

வல்லிசிம்ஹன் said...

தென்றல் கவனமாச் சொல்லிடுங்க.:)
கல்யாணமான பிறகு சில மாதங்களுக்கு இந்த விடியோக் காட்சிகள் பலபல விவகாரங்களுக்குச் சாட்சி சொல்லும்.

அதுவும் ரிசப்ஷன் போது சிரிச்ச முகத்தோடு(கன்னமெல்லாம் வலிச்சாலும்) இருக்கணும்.

என் கல்யாணத்தின் போது எங்க அம்மாவுக்கு செம தலைவலி.

முகம் வாடி இருந்தாங்க.அப்போ கறுப்பு வெள்ளைப் படங்கள்தானே. இன்னும் சோகமாத் தெரிந்தது.
அப்பா ரொம்ப நாளைக்கு அம்மாவைக் கிண்டல் செய்து கொண்டே இருப்பார்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முல்லை. இந்தக் கலாட்டா கொஞ்ச நாட்களுக்கு நீடிக்கும். அப்புறம் காட்ரேஜ் பீரோவின் மேல்தட்டில் உட்கார்ந்து கொள்ளும்:)

சாந்தி மாரியப்பன் said...

//இப்போது எல்லாம் உனக்கு நீ எனக்கு நான் என்ற சந்தோஷமான லைன் ஆஃப் கண்ட்ரோலில் சம்பந்திகள் இயங்குகிறோம்//

ஆஹா.. எல்லோரும் இப்படி நினைத்தாலே சம்பந்தி சண்டை குறைஞ்சுடுமே :-)))

Jayashree said...

அட எங்களுக்கெல்லாம் தான் அப்படி தோனித்துனு நினைச்சேன்! பெண் வீட்டு ஃஃபோட்டோ பிள்ளை வீட்டு ஃபோட்டோ விஷயம் universal truth ஆமா? !!
நம்ப கல்யாண ஃபோட்டோஸ் எல்லாம் பொதி பொதியா இடம் வேற அடைச்சு! இப்ப டிஜிடல் வந்தப்புறம் வேணான்னா அழிச்சுக்கலாம். compact ஆ cd ! storage problem இல்லாம! கம்ப்யூடர் ல யே ஸ்டோர் பண்ணிக்கலாம்!!நிமிஷ நேரத்துல globala telecast பண்ணலாம்., picasa ல எல்லோருக்கும் அனுப்பிடலாம்.என் nephew கல்யாணம் direct telecast Birmingham லேந்து போன மாசம்!!எல்லாரும் பாத்து பேசிண்டோம்:))zamaana badhal gayaa !!!amazing

Geetha Sambasivam said...

எங்க கல்யாணத்தின்போது கலர் வந்துட்டாலும் என் கல்யாணத்துக்குக் கறுப்பு, வெள்ளை தான். பிரிண்டே போடாமல் இன்னும் நெகட்டிவ் எல்லாம் அப்படியே இருக்கின்றன. எல்லாம் சாம்பிளுக்குக் கொடுத்த போட்டோக்கள் தான் இருக்கின்றன.

Geetha Sambasivam said...

நல்ல மலரும் நினைவுகள், ஆனால் என் பெண் கல்யாணத்திலே நாங்க மட்டும் தான் புகைப்படம், வீடியோ ஏற்பாடு செய்தோம், பையர் கல்யாணத்திலே அவங்க ஏற்பாடு செய்தது தான், ஆகவே எந்தப் பிரச்னையும் இல்லை. அதோடு எனக்கு இந்த வீடியோவுக்கு எல்லாம் நிக்க லைட் போடுவாங்களே, அது அலர்ஜி, கிட்டேயே போகமாட்டேன், எடுத்தாலும் விலகிடுவேன் அல்லது முகத்தை மூடிண்டுடுவேன். எங்க பொண்ணு அதனாலே டிஜிடலில் எடுத்தா தன் தம்பியோட கல்யாணத்தை அதனாலே அதிலே இருப்பேன். :)))))))))))))) ரொம்ப ஒண்ணும் ஆசை இல்லை. போட்டோவில் இல்லாட்டியும் பரவாயில்லைனு நினைக்கும் ரகம் நான். :))))))))))

மதுரையம்பதி said...

அருமையான மலரும் நினைவுகள்...ரசித்'தேன்'.

Unknown said...

என் திருமணத்தின் போது நாங்கள் மட்டும்தான் போட்டோ, வீடியோ எடுத்தோம் அதனால் இரு வீட்டாரையும் சேர்த்து எடுக்குமாறு பார்த்துக்கொண்டோம் அவ்வாறே அவர் வீட்டில் வரவேற்பின்போதும் பார்த்து கொண்டார்கள். இதனால் ஏதும் பிரச்சனை வராமல் பார்த்துக்கொண்டோம்.

துளசி கோபால் said...

ஹைய்யோ:-)))))))))))))

தீனிக்கு தானி சரி போயிந்தி:-)

நாங்க பொண்ணு வீட்டுக்காரரா இருந்த கலியாணத்தில் மாப்பிள்ளைவீட்டுக்காரருக்குத் தனி வீடியோகிராஃபர் இல்லை. சம்பந்தியம்மா அவரை மிரட்டி அவுங்க பக்கமே நிறைய எடுக்க வச்சுட்டாங்கப்பா:((((

Matangi Mawley said...

என் அம்மா அப்பா கல்யாண ஆல்பம் இல்- முழுக்க முழுக்க அம்மா side படங்கள் தான் இருக்கும்.. அதுக்கு reason அம்மா side ல ஜனங்க ஜாஸ்தி நெனசுண்டுருன்தேன். இப்போ தான் விஷயம் புரியறது!

வல்லிசிம்ஹன் said...

ஆஹா, சாரல், சம்பந்தி சண்டை எல்லாம் இப்பக் கிடையாதுப்பா.:)
மிஸ்ஸைல்ஸ் வேற ஒருத்தர் மூலமா வரும். அதே வழில திரும்பிப்போகும்:)
வெளில ரொம்பக் கூலா இருப்போமில்ல:)

வல்லிசிம்ஹன் said...

ஓ ஷ்யூர் ஜயஷ்ரீ. மாறித்தான் போச்சு உலகம். நான் சொன்ன இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முந்தியது.
நான் என்கிற இடத்தில ஒரு கோமளாவைப் போட்டுக்கணும் நீங்க.
அவளுக்கு எதையும் சிறப்பாச் செய்யணுமுனு ஆர்வம்.
அடுத்த கல்யாணத்தில இன்னும் முன்னேறி நல்ல படியா வீடியோக்கள் வந்தன. நான் தற்போதைக்குப் பார்த்தது என் பேரனின் பிறந்த நாள் கொண்டாட்டம் தான் வெப்காம் வழியா:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா ஒருத்தரே எடுத்துட்டால் வம்பே இல்லை.
இப்ப இந்தக் கல்யாணத்தில ஆளுக்கு ரெண்டு விதமான காட்சிகள் கிடைத்தன. உறவினர்கள் ,அவர்கள் பாடின பாடல்கள் எல்லாம் வித வித மாக ரசிக்க முடிந்தது.:)
உங்க பெண் ரொம்ப கவனமா அம்மாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

வல்லிசிம்ஹன் said...

சீக்கிரமே ப்ரிண்டு போடுங்க கீதா.
நாங்க கூட பார்க்கலாமே.
எங்களோடதுல பாதிக்கு மேல காணோம்.

வல்லிசிம்ஹன் said...

இப்படிச் சொல்லிட்டால் எப்படி மௌலி. உங்க கல்யாண கலாட்டா ஒண்ணூம் இல்லையா:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சுமதி. நீங்க சொல்றதுஇ பக்குவமா செய்கிற கல்யாணம்.
நான் சொன்னது அவசரமா நிச்சயம் செய்து ,எல்லாம் தீவிரமா முனைஞ்சு அழகா சொதப்பின வேலைகள்:)

வல்லிசிம்ஹன் said...

துளசி அது தீனிக்கு தானியா. நம்ம தெலுகு மோசம் பண்ணிடுச்சா:)

முன்ன பசங்க வீட்ல அப்படி செய்வாங்க. இப்ப எல்லாம் சரியாப் ப்போச்சுப்பா. என்னிட்ட ஒரு வார்த்தை சொல்லி இரூக்கல்லாமில்ல:)

வல்லிசிம்ஹன் said...

ஹா ஹா.மாதங்கி. இப்பப் புரிஞ்சுதா.
அவர் என்ன செய்வார். யாரு பணம் கொடுக்கிறார்களோ அவர்களிடம் நிறைய கரிசனம் க்காட்டிடுவார்.
அம்மாவோட அறுபதாவது கல்யாணத்துக்கு இப்பவே ரெடி செய்துக்கோங்கொ:)

ஸ்ரீராம். said...

மிக சுவாரஸ்யமான பதிவு. இந்தக் காலத்திலும் இப்படியெல்லாம் எடுக்கறாங்களா? ஆனால் இப்போ அந்த இரண்டு பக்க டிச்குக்காகளையும் வாங்கி எடிட் செய்து புதிய ஒன்று தயார் செய்து விடலாமே...

Deepa said...

ரொம்ப சுவாரசியமா எழுதி இருக்கீங்க.
//தானிக்கு தீனி// அப்ப‌டின்னா‌?
:))

ஹுஸைனம்மா said...

இப்பல்லாம், இரண்டு பக்கமும் தனித்தனி வீடியோ ஏற்பாடு செஞ்சுக்கறதுனால, பிரச்னை இல்லை!

//என் nephew கல்யாணம் direct telecast Birmingham லேந்து போன மாசம்!!//

:-))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் தீபா.
பண்ட மாற்றமா இருக்குமோ. இதுக்கு அது. அதுக்கு இது சரியாப் போச்சுன்னு
அர்த்தம்னு நான் நினைக்கிறேன்.:)

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம்

இந்த யோசனை எங்களுக்குப் பத்து வருஷம் முன்னாடி தெரியாமப் போச்சு. இப்ப அந்தப் பசங்க முனைஞ்சு செய்தா சரிவரும்.
ரொம்ப இண்டரஸ்டிங்கா இருக்கும்:)

திவாண்ணா said...

அப்பாடா ஒரு வழியா எல்லாம் கேட்ச் அப் பண்ணிட்டேன்!

திவாண்ணா said...

:-))

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா, உங்க பின்னூட்டத்தை ப் பார்க்காம இருந்ததற்கு மாப்பு கொடுக்கணும். வரிசையா எல்லாவற்றையும் இப்பத்தான் பார்த்துக் கொண்டு வருகிறேன் பா. ரொம்ப நன்றிம்மா

வல்லிசிம்ஹன் said...

Thank you Ramji.

வல்லிசிம்ஹன் said...

அன்புத் தம்பி வாசுதேவனைப் பார்த்து எத்தனை நாளாச்சு!!
இத்தனை வேலைகளைக்கு நடுவில வந்து படிச்சதுக்கு ரொம்ப தான்க்ஸ் மா.