Blog Archive

Tuesday, November 25, 2008

பயணங்களில் தருணங்கள்

தாவரவியல் பூங்காவில் விட்டுப் போன முள்ளம்ப்ன்றி.


துபாய் மாலில் ஸ்டிங் ரே மீன்



செயிண்ட் லூயிஸில் சூவனீர் கடை. வாங்க முடியாத விலையில் படங்கள்:)




நம்ம ஊரு மண்பாண்ட சொப்பு, தக்ஷின் சித்ராவில வாங்கினது.





சிகாகோ மிருகக் காட்சி சாலையில் மஞ்சள் மர வரிசைகள்,.








தாவரவியல் பூங்காவின் மேலும் சில விற்பனைக்கான மரப் பொருட்கள்.





இந்தப் பருந்தாரின் படமும் விட்டுப் போச்சு.

இத்தனை கம்பீரத்தையும் இவரை ஓவியமாக்கிய அம்மாவின் முகத்திலும் பார்த்தேன். அவங்க ஒரு நேடிவ் இந்தியன்.








சீகாகோ வீட்டு வாசலில் இலை உதிர்க்கக் காத்திர்ருக்கும் வண்ண மரம்.









துபாய் மால், அக்வெரியத்தில் நீந்தும் சுறாக்கள்.










தங்கம் மற்றும் நாம் யோசிக்க முடியாத ப்ரெஷ்யஸ் கற்கள் விற்கும் அரங்கம். துபாய் மால்.


























Posted by Picasaபசுமை சுற்றி நிற்க சீக்கிரமே குளிர்காலத்துக்குத் தயார் ஆன ஆரஞ்சு மரம்.
---------------------------------------------------------------------------------------------
சிகாகோ மண் வாசம் முடிஞ்சு துபாய் வந்து ரெண்டு வாரமும் ஆச்சுது. முதல்ல அன்னியமாப் பார்த்த பேத்தியும் இப்ப அழகாத் தூக்கிக்கோன்னு கைகளைக் காட்டுகிறாள்.
துபாயில் வீட்டுக்கு எதிர்த்தாப்பில் மெட்ரோ அநேகமாக முடியும் தருவாயில் இருக்கிறது.
.
இரவெல்லாம் வேலை நடக்கிறது.சென்னை நிலவரங்களை அறிய சன் தொலைக்காட்சியும் ஜெயா டிவியும் இருக்கிறார்கள்.
ஏதாவது கண் கொண்டு பார்க்க முடிந்தால் தானே.
எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு.
பிறகு எல்லாம் பழகிவிடும்.:(

இங்கே இந்த ஊரில் ரிசெஷன் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கேட்பார்கள் போலிருக்கிறது.
இன்னும் வாகனங்கள் பெருகிவிட்டன. அதே வேகத்தோடு வண்டி ஓட்டுகிறார்கள்.

வந்திறங்கிய அன்று நமது அண்டைய நாட்டிலிருந்து புத்தம் புதிய ஸ்வெட்டர்,கால் செருப்பு இத்தியாதிகளுடன் 40,50 இளைஞர்கள்
அவர்களது மேஸ்திரியின் காவலில் விமானநிலையத்தின் வாயிலில் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். எல்லோர் கண்களிலும் ஒரு மருட்சி கலந்த அதிசயம் தெரிந்தது.
இவர்கள் எல்லாம் எப்போது வீடு திரும்புவார்களோ என்ற நினைப்பு சூழ்ந்தது என்னை.

அடுத்தடுத்து நிறைய இந்த உழைப்பாளிகளின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினாலும் பி.பி.சியில் நடந்த உரையாடல் ஒன்றில்,
உழைப்பாளர்களின் கேள்விகளுக்கு, அதிகாரி ஒருவரால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. அவர் ஒரு விஷயத்தில் தீர்மானமாக இருந்தார்.
எங்களுக்குத்
தொழிலாளிகள் தேவை. அவர்களுக்குப் பணம் தேவை. அதுவரை இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மாறும்.
பணம்,பணம்,பணம். இதுவே மந்திரம்.

போன வாரம் இங்கே நடந்தேறிய ஒரு திறப்புவிழாவில மூன்று மில்லியன் டிர்ஹம் செலவு செய்து வாண வேடிக்கை காண்பித்தார்கள்.
அது இங்கே திறக்கப்படும் அட்லாந்டிஸ் என்ற ஒரு வியாபாரத்தலத்துக்கான விழா.
அது சிஎனென் என்று எல்லா தொலைக்காட்சி சானல்களிலும் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இங்கு வந்ததற்குப் புதிய பதிவர் அறிமுகம் கிடைத்தது. அவர் பெயர் சுந்தரா.
நெல்லையைச் சேர்ந்தவர். ஒரு நெல்லைச் சங்கம் ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறேன்.
என்னைத் தவிர எனக்குத் தெரிந்து கொத்ஸ்,அம்பி,ராமலக்ஷ்மி,நானானி எல்லோரும் இருக்கிறார்கள். எனக்குத் தெரியாதவர்களும் இன்னு ம் நிறைய இருக்கலாம்:) இருக்கிறார்கள்.

மதுரக்காரங்களுக்கு யூனியன் இருக்கு. மாயவரக்காரங்களுக்கும் இருக்கு. திருவண்ணாமலைலிருந்து ஒரு பெரிய மக்கள் கூட்டமே இருக்கு.
நெல்லைக்கு மட்டும் வேண்டாமா. யோசிச்சு சொல்லுங்கப்பா.
இங்க வந்ததும் பாதி சுதந்திரம் கிடைத்துவிட்டது சிங்கத்துக்கு.
மாலையில் சரவணபவன் காப்பி. ''சார் வந்துட்டார்'' லெவலில் அங்கே எல்லோரிடமும் நட்பு. அப்படியே தமிழ்ச்சந்தையிலிருந்து எனக்கு வேண்டும் என்கிற கு,கு,ஆவி,கல்கி எல்லாம் வரும்.
நம் நிலாரசிகன் கவிதை வந்த விகடனும் பார்த்தாகிவிட்டது.

இன்னும் பத்து நாட்களில் கிளம்பி சென்னை சென்றுவிடலாம்.
குழந்தைகளிடமிருந்து தனிமைப் படுத்தப் பட்ட உணர்வு வரும்.
அதனாலென்ன. ஒரு பட்டன் தட்டு. நேரிலியே பார்த்து உரையாடலாம்.
தாத்தாதான் பேத்திக்கு பெஸ்ட் ஃப்ரண்ட்.
நான் வெளி வராந்தாவில் ஈரமான தலைமுடியை உலர்த்திக் கொண்டிருந்தால்,
அவர் கண்ணாடி வழியே
'அதோ பார்த்தியா புறா. பக்கத்தில பார்த்தியா லேடி அந்நியன்;; என்று கேலி காட்டுகிறார்.
நான் தலைமுடி கட்டாமல் தட்டுவது அவளுக்கு அத்தனை சிரிப்பாக இருக்கிறது.:)

17 comments:

Thamiz Priyan said...

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு!
ஆமா..இன்னும் நிறைய பேர் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்... எல்லாரும் சேர்ந்து ஒரு கூட்டுப் பதிவு ஆரம்பித்து வைக்கலாம். தின்னவேலியைப் பற்றி எழுத..:)
அந்நியன்..:)))

இலவசக்கொத்தனார் said...

இன்னும் 10 நாள்தானா? அப்புறம் இந்தியாவா? அடுத்த ட்ரிப் எப்போ? :)

ஆயில்யன் said...

//இவர்கள் எல்லாம் எப்போது வீடு திரும்புவார்களோ என்ற நினைப்பு சூழ்ந்தது ///

அனுபவிச்சு பார்த்தீங்களா வல்லியம்மா அந்த தருணங்களை!

மருட்சி நிறைந்த பார்வை

எங்கு போகப்போகிறோம் என்ற புரிதல் இல்லாமல் பெரிய விமான தளத்திலும் கூட எல்லாவற்றையும் தொலைத்து அமர்ந்திருப்பது போன்றதொரு பார்வை!

அந்த கணங்களில் எனக்கும் கூட ஏனோ அது போன்ற மனங்கள் விட்டு வந்த வீடுகள் உறவுகள் பாசங்கள் தான் பட்டென்று வந்து மனதை கனத்துச்செய்து போகிறது!

ஆயில்யன் said...

/'அதோ பார்த்தியா புறா. பக்கத்தில பார்த்தியா லேடி அந்நியன்;; என்று கேலி காட்டுகிறார்///



அப்பாவுக்கு செம நக்கல் போல :)))))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா தமிழ் பிரியன்.
உங்களுக்கும் நெல்லையா. தின்ன, வேலி இருக்கவே, நெல்லை விட்டுட்டாங்களோ.:(
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க சார் கொத்ஸ். இந்தத் தடவை புதிர் கொஞ்சம் புரியாத புதிராயிடுச்சு.

இந்தியாக்கு மத்தவங்கள் எல்லாம் வரட்டும். நம்ம சௌகரியப்படி அவங்களைப் பார்த்துக்கலாம்னு சொல்லி இருக்கேன்.

உங்க ஊர்ப் பேரந்தான் 'பாட்டி வா,பாட்டி வான்னு வெப்காம் வழியாக் கூப்பிடறான்:(

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா ஆயில்யன். ஆமாம் அந்த கையால பின்னின குல்லா, கம்பளிச்சட்டை ஒரு 18 வயசு கூடத் தாண்டாத முகம் எல்லாவற்றையும் பார்த்து ஐய்யோடான்னு இருந்தது. அவர்களைக் கொண்டு வந்திருக்கும் ஏஜண்ட் ஆறடிக்கு நின்று கொண்டிருந்தார் கைகளில் பேப்பருடன். நிஜமாக ரொம்பக் கஷ்டமாக இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

ஆயில்யன், அதை ஏன் கேட்கிறீர்கள்! தாத்தாவுக்குப் பேரப்பிள்ளைங்க மூலமா என்னைக் கேலி காட்டுவது ரொம்பப் பிடித்தமான செயல்:)

துளசி கோபால் said...

லேடி அந்நியன்:-)))))))))))

சொன்னது ரெமோவா?


மண்சொப்பு சூப்பரா இருக்கு.

தொழிலாளிகள்......
மனசுக்கு ......பாரமா ஆயிருச்சு.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி. இவர்தான் அந்த ரெமோ.

கொழுப்பு கொஞ்சமாவா இருக்கு.
கு.கோணம் மிராஸ்தார் வாரிசு எப்படிப் பேசும்!! இப்படித்தான்:)
நீங்க இங்க வரசே சொப்பு வாங்கிடலாம். கூட்டாஞ்ச்சோறும் செய்யலாம்:)

அச்சோ பாவம்பா, அந்தப் பசங்க. பையன் நிறுத்தி இருக்காட்டா, டீக் ஹை??ன்னாவது கேட்டு இருக்கலாம்!!!

ambi said...

// பக்கத்தில பார்த்தியா லேடி அந்நியன்;; //

இந்த தஞ்சை காரங்களே இப்படி தான் குசும்பு பண்ணுவாங்க. கண்டுகாதீங்க. :p

ஏதோ சங்கம்...? ஆட்டோ, வீச்சறிவாள் சப்ளை எல்லாம் கொத்ஸ் பாத்துப்பாரு. :))

தமிழ் said...

படங்கள் அருமையாக இருக்கிறது

வல்லிசிம்ஹன் said...

நன்றிப்பா திகழ்மிளிர்.

சப்ஜெக்ட் நல்லா இருந்தா அதோட பிரதியும் நல்லா இரூக்கும் இல்லையா.....

கோபிநாத் said...

\\எங்களுக்குத்
தொழிலாளிகள் தேவை. அவர்களுக்குப் பணம் தேவை\\

இது தான் உலக பொன்மொழி !

\\\பக்கத்தில பார்த்தியா லேடி அந்நியன்\\\\\

ஐய்ய்ய்ய்....எல்லோரும் கூப்பிட்டுட்டாங்க நானும் ஒருமுறை கூப்பிட்டுகிறேன்ம்மா...ஹய் லேடி அந்நியன் ;))

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத், லேடி அன்னியன் பேசறேன்பா:)
அந்த கட்டார் நாட்டார்தான் அப்டிப்பேசினார்.

ராமலக்ஷ்மி said...

//ஒரு நெல்லைச் சங்கம் ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறேன்.//

நல்ல ஐடியாவா இருக்கே:)!

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி ஆரம்பிச்சுடலாமா. இன்னிக்குக் கூட தை பவுர்ணமி !!நல்ல நாள்தான்.