Blog Archive

Friday, July 25, 2008

சுவிட்சர்லாந்து வந்தோம்தோம்.2008






பசுமை,பசுமை,பசுமை. சூரிக் விமான நிலையத்தில் இறங்கினதும் மனதுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது,. அந்த அழகும் நேர்த்தியும் அமைதியான

வரவேற்பும் எப்போதும் போல இதமாக இருந்தது.



மகன் சொன்னபடி இமிக்ரேஷனில் வாயடிக்காமல் வெளியில் வந்தேன். அங்கேயிருந்த பெண்தான், இப்பத்தானே போனீங்க அதுக்குள்ள இன்னோரு பயணமான்னு கேட்டாள்.
என்னம்மா செய்யறது அழைத்த குரலுக்கு ஓட நினைக்கிறோம். முடிந்த வரை
செய்வோம்னு சிரித்தேன்.
எனக்கும் இப்படிப் பெற்றொர் கிடைத்தால் தேவலை என்றாள்.


மகனிடம் சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறான். அவங்க எல்லாம் பேச மாட்டேங்களே. சும்மா சொல்றியாம்மான்னு கேக்கறான்.:)
நமக்குத்தான் கண்காது மூக்கு வைக்கும் பேர்வழின்னு பட்டம் கட்டி இருக்காங்களே:)
நிசத்தைச் சொன்னாக்கூட நம்ப மாட்டேங்கறாங்க.


வழக்கம்போல்(சதங்காவைச் சொல்லலைப்பா)
பாசல் வண்டியைப் பிடித்துப் பொட்டிகளை ஏற்றி வந்த காப்பியையும் ருசித்து, நலம் விசாரித்து முடிப்பதற்குள் வீடும் வந்துவிட்டது.
மழை உண்டாடாப்பான்னு கேட்டுக் கொண்டேன். ஏன்ன்னா இவங்க ஊரில மணிக்கு மணி அறிவிப்பு இருக்கும். தூறல்னா தூறல். இடின்னா இடி. வெறும் மேக மூட்டம்னா அதே.
நம்ம கவலை நமக்கு:))

. அவனும் போன வாரம் உலகைக் கலக்கிற இடி இடிச்சதும்மா. இந்த வாரம் அவ்வளவு இல்லை. வருவதற்கு முன்னால் நீங்க கிளம்பிடுவீங்க என்றான்.
அவன் வீட்டில் ஏற்கனவே விருந்தாளிங்க வந்திருந்தார்கள். எல்லாருமா இட நெருக்கடியோடு இருக்க வேண்டாம்னு வேற ஒரு மலையடிவாரக் கிராமத்தில் ஒரு விடுதியில் சமைத்துச் சாப்பிடுகிற வசதியோடு
இடம் ரிசர்வ் செய்திருந்தான்.


அடுத்த நாள் அங்கே போகலாம்னு முடிவு. அதுக்கு முன்னால் உனக்கு ஏதாவது வாங்கணும்னா டவுனுக்குப் போகலாம்னு சொன்னதும் ஆஹா அதுக்கென்ன போலாமேன்னு கிளம்பிட்டேன்.
மனசுக்குத்தான் வயசாகலை. உடம்பு அப்படியில்லையே:)
அதைத் தெரிஞ்சு கொண்டால் பிரச்சினையே வராது!!!

கொஞ்ச நேரம் பேத்தியோடு கொஞ்சிவிட்டு , ஒரு குட்டித் தூக்கம். ஒரு நல்ல காப்பி ,டவுனுக்குப் புறப்பட்டோம். சும்மா காலாற நடந்துவிட்டு வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்த ரைன் நதியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு, பேருக்கு இரண்டு கம்பளி சாக்ஸ் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப எட்டாம் நம்பர் டிராமில் ஏறினோம். வார நாளாக இருந்ததால் நிறைய கூட்டம் இல்லை.
இருந்தும் வெய்யில் அடிக்காத பக்கமாகப் பார்த்து நாங்கள் மூவரும் இடம்
பிடித்து உட்காரப் போன போது:)
டிராம் ப்ரேக் போட்டது.


ஒரே ஒரு குலுக்கல் அடுத்த நிமிடம் நான் எதிர் சிட்டில் இருந்த ஒரு (ஏதோ ஊர்காரர்) ஆளின் தலையைப் பிடித்துவிட்டேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அவர் அலறவில்லை. அப்படியே பிரமித்துப் போய் விட்டார்.
கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு நின்ற போது யதேச்சையாகத் திரும்பினால் மகன் முகம் சிவந்து போயிருப்பது தெரிந்தது.
ஒன்றும் யூகிக்க முடியாமல் நான் விழ இருந்த ஆளின் தலையைத் தட்டி வெரி வெரி சாரி என்று இரண்டு மூன்று தரம் சொன்னாலும் ஒரே விரைப்பாப் பார்த்தார்.

அப்படியே பத்ரமாக உட்கார்ந்து மீண்டும்மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.
ம்ஹூம் அவருக்கு கோபம் தணியவே இல்லை.
இதென்னடா கஷ்டகாலம் என்று அவர் பக்கம் இருந்த அம்மாவைப் பார்த்தால் அதுக்கு மேல் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது அவள் முகத்தில்!!
அடுத்த நிறுத்தம் வருவதற்குள் இருவரும் எழுந்து அதே விரைப்போடு
மார்ச் செய்தபடி     இறங்கி விட்டார்கள்.
அவர்களுக்குப் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த இன்னோரு அம்மா,
என்னை இன்னும் விரோதமாகப் பார்த்தவுடன் எங்கிருந்தோ வந்த சிரிப்பு என்னைப் பிடித்துக் கொண்டது.
என் மகனுக்கும் அது தொற்றிக்கொண்டது.

ஏம்மா விழப் பார்த்தால் அவர் தலையை ஏம்மா பிடிக்கறே.
தே டூ நாட் லைக் எனி ஒன் டச்சிங் தெம் என்றானே பார்க்கலாம்.
அதுக்கு மேல குழந்தையைத் தட்டற மாதிரி அவர் தலையை வேற தட்டறே.
மோசம்பா இந்த அம்மா.
பெரிய வைத்தியம் செய்யற நினைப்பு.'' என்று முகத்தைப் பிடித்துக்கொண்டு
சிரிக்கிறான்.
தீர்ந்தது.கதை கந்தல்.நம்மளை இன்னிக்கு நல்ல போஸ்ட் மார்ட்டம் செய்யப் போறாங்க வீட்டுக்குப் போனதும் இன்னும் மருமகள்,பேத்தி, சம்பந்திகள் எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கும் வரை இவங்களுக்கு அவல் கிடைத்ததே என்று என் தலை எழுத்தை நொந்து கொண்டே இறங்கி வந்தேன்:))
இன்னும் பேத்தி ஒண்ணுதான் பாக்கி. ''பாட்டி என் கையைப் பிடிச்சுண்டு வான்னு '' சொல்லப் போகிறா. ஹூம்.........

33 comments:

ஆயில்யன் said...

வாங்க அம்மா!

வாங்க !

:)))))))))

ஆயில்யன் said...

//சும்மா சொல்றியாம்மான்னு கேக்கறான்.:)
நமக்குத்தான் கண்காது மூக்கு வைக்கும் பேர்வழின்னு பட்டம் கட்டி இருக்காங்களே:)//


:)))))))))))))))

ஆயில்யன் said...

//வீட்டுக்குப் போனதும் இன்னும் மருமகள்,பேத்தி, சம்பந்திகள் எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கும் வரை இவங்களுக்கு அவல் கிடைத்ததே என்று என் தலை எழுத்தை நொந்து கொண்டே இறங்கி வந்தேன்:))//

ஒவர் சவுண்டா வுட்டாஙக்ன்னா சொல்லுங்க!
ஒரு வார்த்தை சொல்லுங்க நம்ம பிளாக்கர்ஸ் டீமோட அங்க வந்து குதிச்சிடறோம்! :)))))))))))

வல்லிசிம்ஹன் said...

வரோம் வரோம் வரோம். எதுக்குக் கேக்கறீங்கனு தெரியும். நான் வர நேரம் ஊரை விட்டு ஓடலாம்னு தானே:)

வல்லிசிம்ஹன் said...

அட ராமா, உண்மையாவே என் பசங்க நான் சொல்றதை வித் அ பின்ச் ஆஃப் சால்ட்னு சொல்லுவாங்க இல்லை,,,அந்த மாதிரித் தான் எடுத்துப்பாங்க. சின்ன வயசில ரொம்பக் கதைகள் சொன்னதோட எஃபெக்ட்:)நன்றி ஆயில்யன்.

வல்லிசிம்ஹன் said...

ஆயில்யன்,

ஏற்கனவே கண்ணை வச்சிச் சாத்தி இருக்காங்க. எப்பப் பார்த்தாலும் நெட் நெட்டுனுட்டு.:)

இதைக் கண்டிப்பாச் சொல்றேன். ஆனா எல்லாரும் சிரிச்சு முடிச்சுட்டாங்க:)

திவாண்ணா said...

அட, துபாய்லேந்து இந்தியா வரீங்கன்னு நினைச்சேனே! அதுக்குள்ள ஸ்விஸ்? சரி சரி!

பினாத்தல் சுரேஷ் said...

படமெல்லாம் நல்லா இருந்தது,

என்சாய்ங்கோ.. சுடும் வெயில்லே இருந்து பசுங்குளிரா!

வல்லிசிம்ஹன் said...

வரணும் திவா.

இப்ப இங்க சிகாகோ வந்தாச்சு.;)

வல்லிசிம்ஹன் said...

படமேதான் நிறைய வரப்போகிறது சுரேஷ்.

சுடும் வெயிலும் நல்லாத்தான் இருந்தது, உள்ளே இருக்கும் வரை. பசுங்குளிரும் அழகு வெளியே இருக்கும் போது:)
அதாவது இந்த ஜூலை மாதம்.

நானானி said...

முட்டு...முட்டு...மு.ட்.டுன்னுமுட்டினீங்களா? நல்ல சமாளிஃபிகேஷன்!
ஊரின் அழகையெல்லாம் கே.பொட்டியில் அள்ளிட்டு வாங்க.

இலவசக்கொத்தனார் said...

//நமக்குத்தான் கண்காது மூக்கு வைக்கும் பேர்வழின்னு பட்டம் கட்டி இருக்காங்களே:)//

பையன் கிட்ட சொல்லுங்க - " உனக்குக் கண் காது மூக்குன்னு குடுத்ததுனாலதாண்டா நான் அம்மா!!" அப்படின்னு!! :)))))

வல்லிசிம்ஹன் said...

சமாளிக்கறதாவது நானானி. கொஞ்சம் கூட ஹ்யூமரே இல்லாத ஆசாமி அந்த ஆளு. என்னடா இந்த டன் கணக்கான அம்மா நம்மமேல விழாமச் சுதாரிச்சுக்கிட்டாங்களேன்னு நன்னியோட போ வேணாம்?? :0)
எப்பப் பார்த்தாலும் இவங்களுக்கு ஒட்டிப்பாங்களோனு பயம்.

நிறையப் பிடிச்சிருக்கேன்.. போட்டுடலாம். என்ன நடுவில கற்பனையா அழகா ரெண்டு வார்த்தை வேற எழுதணும்ம்ம்ம்ம்ம்ம்ம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கொத்ஸ்.
அவங்க அனுபவம் அப்படிப் பேச வைக்கிறதோ என்னவோ.:))

கட்டாயம் சொல்றேன். சமீபத்தில இன்னோரு அம்மா கூட சொன்னாங்க. உன்னை ஒம்பது மாசம் சுமந்து பெத்தேன் தெரியுமான்னு அப்பத்தான் பொறந்த பாப்பா கிட்ட.
அடடா, இந்த லைனெல்லாம் நமக்கு அப்பத் தெரியாமப் போச்சேனு நினைச்சுக் கொண்டேன்:)

NewBee said...

//ஒவர் சவுண்டா வுட்டாஙக்ன்னா சொல்லுங்க!
ஒரு வார்த்தை சொல்லுங்க நம்ம பிளாக்கர்ஸ் டீமோட அங்க வந்து குதிச்சிடறோம்! :)))))))))))
//

சொல்லேய்! சொல்லேய்! மறுக்கா சொல்லேய்! :)

Anonymous said...

மேற்கத்தியவர்கள் பொதுவா இப்படி மத்தவங்க மேல படறதை விரும்பறதில்லை. பஸ்சில பாக்கணும் ஆளுக்கு ரெண்டடி தள்ளி நிக்கறதை. நமக்குத்தோணும் இன்னும் நெருங்கி நின்னா இன்னும் நாலு பேர் பஸ்ல ஏறலாமேன்னு. நானும் சிரிச்சேன் கொஞ்சம். :)

வல்லிசிம்ஹன் said...

ஓஓஓஓஓ:)
ரிபீட்டேய் இப்படி மாறிப் போச்சா. புதுவண்டே வருக வருக.
நாளைக்குக் கதை உண்டல்லோ:)))

வல்லிசிம்ஹன் said...

அம்மிணி,இப்பவும் எங்க வீட்டில இவர் நினச்சு நினச்சு சிரிக்கிறார். அதெப்படி அவர் தலையைப் போய்த் தட்டினேன்னு.

தெரியும் அவங்க குணம். காட்'ஸ் ஓண் கிஃப்ட் டு மேன்கைண்ட்!!!!!
பொதுவா மகன் இருக்கிற ஊரில எல்லோரும் அப்படியில்லை. சிலது இப்படி இருக்கு.:)

ராமலக்ஷ்மி said...

நிகழ்வை விவரித்த விதம் அருமை, படிப்பவர் கண் முன் நடந்தாற் போல. எங்களுக்கே சிரிப்பை அடக்க முடியவில்லை. கூட இருந்து பார்த்தவர்களுக்கு..:))!

//(ஏதோ ஊர்காரர்)//

நம்ம நாட்டை விட்டு வெளியே போயாச்சுன்னா ஜப்பான் காரனும் சரி ஏதோ ஊர்காரனும் சரி எல்லாரும் ஒரே ரகம்தான் இல்லையா வல்லிம்மா:)?

வல்லிசிம்ஹன் said...

அதே அதே ராமலக்ஷ்மி:)

ஒரு வேளை என்மேல் அவங்க யாராவது விழறது மாதிரி இருந்தா என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சே. அப்பவும் ஐய்யோ பாவமேனு சொல்லி இருப்பேஎன். கொஞ்சம் காச்மூச்சுனு சத்தம் போட்டு இருப்பேன். இப்படி ஃப்ரோசனா இருந்திருக்க மாட்டேனு நினைக்கிறேன்:)

ஆமாப்பா,நம்ம ஊரு எல்லையைத் தாண்டினா அன்னியங்கதான்:)

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா,

வழக்கம் போல :)) மீண்டும் அருமையான விவரிப்பு. அதுல நம்மையும் நினைவு கூர்ந்தது வியப்பு :))

//இப்படி ஃப்ரோசனா இருந்திருக்க மாட்டேனு நினைக்கிறேன்:)//

சிந்திக்க வேண்டிய விசயம். ஒரே வார்த்தையில் இப்படி ஃப்ரோசனா இருப்பவர்களைச் சொல்லணும் என்றால் 'ஜடம்' எனச் சொல்லலாமா ?

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் சதங்கா. பின்ன !!
பேரே புதிசா இருக்கு. நினைவில நிக்கிற மாதிரி:)
ஜடம் இல்லைம்மா.

செல்ஃப் இன்ஃப்ளிக்டட் டிஜிப்ளின்:)

ரிஜிட்.
நம்மளை மாதிரி இயற்கையாச் சிரிக்கச் சிலரே இங்கல்லாம் உண்டு.

வல்லிசிம்ஹன் said...

இந்தப் புன்னகை என்ன விலைனு பாடல் எல்லாம் இங்க செல்லாது:)

Unknown said...

//நம்ம பிளாக்கர்ஸ் டீமோட அங்க வந்து குதிச்சிடறோம்! :)))))))))))// அதானே!

//பசுங்குளிரும் அழகு வெளியே இருக்கும் போது:) அதாவது இந்த ஜூலை மாதம்.// கரீட்டு. நான் முதல் முறை இந்தியா விட்டு வெளிநாடு போனது ஐரோப்பிய நாடுகள், பணி நிமித்தமாக. அப்போ பஸ்ஸில் நின்று கொண்டே பயணிக்கும் போது ஐரோப்பியர்கள் (பொதுவாக வெள்ளையர்கள்) தள்ளிப் போவார்கள், கவனித்திருக்கிறேன். ஒரே ஒருமுறை வேறு இடம் இல்லாமல், ஒரு வெள்ளைப் பாட்டி பக்கத்தில் அமர்ந்தேன். அவர் எழுந்து போய் வேறு இடத்தில் நின்று கொண்டார்:-( நல்ல பாடம் எனக்கு.

"வந்து கனகாலமாச்சோ?" என்று தோழமையுடன் கதைக்கும் ஈழத்துத் தமிழர்களையும் கண்டிருக்கிறேன். (ஆனால் இங்கே அப்படியில்லை:-(

வல்லிசிம்ஹன் said...

வரணும்ம் கெ.பிக்குணி.
அந்த ஊரில் ஈழத்தவர்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.

பொதுவாக எல்லோரும் இப்படி இருப்பதில்லை.சிலரே வருத்தம் கொள்ளும் அளவு நடக்கிறார்கள்.
நல்ல அன்போடு பழக்கும் பாட்டி தாத்தாக்களும் பார்த்தேன்.

துளசி கோபால் said...

என்னப்பா.....இப்படிச் சிரிக்கவைக்கிறீங்க?

வயித்துவலிக்கு மருந்து உடனே அனுப்பிவையுங்க:-))))

Anonymous said...

அய்யோ அய்யோ வல்லிம்மா சிரி சிரின்னு சிரிச்சு வயிறே வலிக்குது. [கோச்சுக்காதீங்க!!! :) ] சூப்பரா எழுதிருக்கீங்க - நேருல பாத்த மாதிரி இருக்கு எழுத்து! இத்தனூண்டு நேரத்தில இவ்வளவு கலக்கலா! :)

[நான் ஒரு முறை மறதில ஃப்லைட்டுல சீட் மாறி உக்காந்து, அப்புறம் டென்ஷன்ல முன்னாடி போகாம பின்னாடி சீட் போகி, அதுவும் தப்புன்னு ஆகுறதுக்குள்ள, பக்கத்தில இருந்தவங்க நான் டெரரிஸ்டுன்னு நினைச்சு ... கூப்பாடு போட்டு, கதி கலங்குன அனுபவம் உண்டு நியூ யார்க்குல ... இப்ப நினைச்சா பயங்கர சிரிப்பு வருது ... பி.எச்.டி படிக்கிற ஸ்டூடண்டுக்கு பனிரெண்டுக்கு முன்னாடி தான் பதினொண்ணு பின்னாடி இல்லன்னு எப்படி தெரியாம போச்சு ஏமாத்திறான்னு அந்த அம்மா நியாயமா கதறுனப்போ எம்மூஞ்சி என்ன ஆச்சுன்னு கேக்காதீங்க! மனசுக்குள்ள பாவம் அந்த அம்மாவோட பையன் கட்டாயபடுதப்பட்டு ஈராக் அனுப்பப்பட்டிருக்கலாம், ஏதாவது ஆகியிருக்கலாம்னு ஆயிரம் ஆறுதல் சொல்லி, தனியா அனுபவிச்சேன் அந்த கொடுமைய - அமைதியா இருந்தது ஆச்சர்யம்தான் - இப்பல்லாம் நினைச்சா செம சிரிப்பு வரும் ]

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசி. உங்களுக்கே சிரிப்ப வந்ததா. அப்பாடி.:)))))
என்ன மருந்து வேணும் இஞ்சி சுக்குக் கஷாயம் அனுப்பலாமா:)

வல்லிசிம்ஹன் said...

மதுரா !!

அதானே நம்ம ஸ்பெஷாலிடி.
அணு.....மாதிரி டம் டமால்,டங்கு
இது இங்க இருக்கிற குட்டிப் பேரன் (19 மாசம்)தான் விழப்போவதற்கு முன்னால உபயோகிக்கிற மழலை.

ஆஹா குடும்ப மந்திரத்தையே எடுத்துக் கிட்டானேன்னு நினைச்சேன்:)
சீட் மாறினதுக்கா கத்தினாங்க!!
அப்போ அந்த சமயத்ட்தில வருத்தமா இருந்திருக்குமே. பாவம்பா.நீங்க.

இவங்க எல்லோருக்கும் யாரைக் கண்டாலும் பயம்.

மாற்று யோசனை செய்து அமைதியாக இருந்தது மனசின் நிதானத்தைக் காண்பிக்கிறது.
நல்லதுப்பா மதுரா.

ambi said...

ஹஹா! இப்படி ஒரு பதிவு வந்து எவ்ளோ நாளாச்சு? துபாய் கடவீதி பதிவுக்கு அப்புறம் இன்னுமொரு சிரிப்பு பதிவு. :)))

ஒரு வேளை அந்த வெள்ளகாரங்க குளிச்சு மடியா கோவிலுக்கு போறாங்களோ என்னவோ? :))

வல்லிசிம்ஹன் said...

அம்பி,

நீங்க சொல்றது உண்மையோ உண்மை. நாமெல்லாம் அன் டச்சபிள்ஸ்:)
மடியோ மடி!!!
எல்லாரும் இல்லம்மா சிலபேர். இத்தனைக்கும் அவர்களும் ஏதாவது பக்கத்து நாட்டிலிருந்து வந்தவங்களா இருப்பாங்க்க.போனாப் போறது. நமக்குக் காலில வலு இல்லைன்னா அவங்களைச் சொல்லி என்ன பிரயோசனம்!

Geetha Sambasivam said...

//மனசுக்குத்தான் வயசாகலை. உடம்பு அப்படியில்லையே:)
அதைத் தெரிஞ்சு கொண்டால் பிரச்சினையே வராது!!!//

அட, பொன்மொழிகளா வல்லி, இப்படிக் கொஞ்ச நாள் படுத்து எழுந்திருக்கிறதுக்குள்ளே நாலு பதிவு போட்டிருக்கீங்க போலிருக்கு, சிரிக்க முடியலை, போங்க, அந்த ஆள் தலையை நீங்க பிடிச்சதும், அவங்க மூஞ்சி எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சு, யோசிச்சு, வயிறு வலி தாங்கலை போங்க!! ரொம்ப நாளாச்சு, இப்படிச் சிரிச்சு! :)))))))))

வல்லிசிம்ஹன் said...

ஏம்பா படுத்து எழுந்தேன் சொல்றீங்களே. இப்ப உடம்பு தேவலையா.
பொன்மொழிகள் இந்த வயசில கூட சொல்லலைன்னா எப்படி.
உண்மையாவே
நல்ல சிரிப்பு. எனக்கு இருந்த களைப்பெல்லாம் போயிடுத்து.
நன்றிம்மா. உடம்பைப் பார்த்துக்கோங்க.