Blog Archive

Tuesday, February 05, 2008

துளசிதளம்


துளசி இலைகளின் பெருமைகளை உறவினர் எடுத்துச் சொல்ல கேள்விப்பட்ட விஷயங்கள்.
தினம் இரண்டு இலை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகுமாம்.
குழந்தைகளின் நுரையீரல் சுத்திகரிக்க,கபம் கட்டினால் அதைப்
போக்க,
வாய்,பற்கள் சுத்தத்திற்கு என்று பலவிதமாகச் சொல்லிக் கொண்டே போனார்.
அவர் துளசியைப்பற்றி இவ்வளவு விவரம் சொன்னது எனக்கு அதிசயமாக இருந்தது.
அதுவும் இன்று போன் செய்து எங்களுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு, 'துளசி வீட்டில இருக்கோ?' என்றும் கேட்டார்.
நானும் அம்மா பாட்டி காலம் தொட்டு துளசி மாடம் வைக்கிறதும் கோலம் போடுவது விளக்கேற்றுவதும்
வழக்கம்தான் என்று சொன்னேன்.
அவருக்குத் தெரியுமா நம்ம வீட்டில பல வகைத் துளசிச் செடி சேகரிப்போம் என்று:))
இப்பவும் திருப்பதி திருமலை போய் வரும் போதும் கிருஷ்ணதுளசிச் செடி வாங்கி வந்தோம்... அதெல்லாம் அவரிடம் சொல்லவில்லை.
புத்திமதி சொல்ல வருபவரிடம்,பெருமை பீற்றிக் கொள்ள முடியுமா:)
இல்லை, இந்த அம்மா துளசி,கிருஷ்ண துளசி போலவே கோபால் துளசி ஒருத்தரை எங்களுக்குத் தெரியும்னோ,
சொல்லலை.
இங்கே இப்போது சொல்கிறேன்
அவரும் இன்று இந்த ஃபெப்ருவரி ஐந்தாம் தேதி பிறந்து....இத்தனை வருடங்களாகத் தமிழில் ,நல்ல தமிழில் நல்ல விஷயங்களை இணையத்தில் சொல்பவர்.
நகைச்சுவை நாயகி,
பின்னூட்ட அரசி நம்ம துளசிக்கு இன்னிக்குப் பிறந்தநாள்.
அவரும், அவரது மறுபாதியும் ,மகளும் ஜிகேயும் அவரது நண்பர்களான நாமும் நீண்ட நெடுங்காலம் நல்வாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஹேப்பி பர்த்டே துளசி.
பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.

14 comments:

அபி அப்பா said...

teacher innikku enna virunthu? saappita varroom!! vaazththukkaL!!!

Anonymous said...

துளசி டீச்சருக்கு என்னோட பிறந்த நாள் வாழ்த்துக்கள்

siva gnanamji(#18100882083107547329) said...

வாழ்த்து கூறுவதில்
நானும் சேர்ந்துகொள்கிறேன்

வல்லிசிம்ஹன் said...

அபி அப்பா,
சாயந்திரம்தாம் விருந்தாம்.

நம்மளையெல்லாம் கூப்பிட்டு இருக்காங்க:))
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகளுக்கு அவங்க சார்பில அவங்க அக்கா நன்றி சொல்கிறேன்.:))

இலவசக்கொத்தனார் said...

ரீச்சருக்கு வாழ்த்து(க்)கள்!! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Happy Birthday துளசி டீச்சர்!

//கிருஷ்ண துளசி போலவே கோபால் துளசி ஒருத்தரை எங்களுக்குத் தெரியும்னோ, சொல்லலை//

:-)))
இந்தத் துளசிக்கும் மருத்துவ குணங்கள் எல்லாம் இருக்கு! நல்லா அன்பாப் பேசிச் சிரிக்க வைப்பாங்க!
தினமும் ரெண்டு துளசி இலை கிள்ளிக்கிறா மாதிரி, ரெண்டு துளசி தளம் பதிவு படிச்சிருங்க! :-)


//இப்பவும் திருப்பதி திருமலை போய் வரும் போதும் கிருஷ்ணதுளசிச் செடி வாங்கி வந்தோம்...//

எங்கே வாங்கனீங்க? எந்தக் கவுன்ட்டரில் வாங்கனீங்க? விருட்சப் பிரசாதம்-னு விக்கறாங்களே TTD-இல்! அதுவா வல்லியம்மா?

மெளலி (மதுரையம்பதி) said...

துளசி அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

இ.கொ, வாழ்த்து(க்)களுக்கு நன்றி.


@ரவி,
புனர்தர்சனப் ப்ராப்திரஸ்து னு போர்ட் வருமே அங்க இருக்கிற நந்தவனத்தில,
வாங்கினோம்.

பாச மலர் / Paasa Malar said...

துளசி மேடம்ம் அவர்களுக்கு வாழ்த்துகள்..நேற்றைய பதிவில் நீங்கள் குறிப்பிடும் போதே யூகித்தேன்..

ambi said...

துளசி டீச்சருக்கு என்னோட பிறந்த நாள் வாழ்த்துக்கள்! என வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்! :))


பி.கு: இதே வாழ்த்தை நைசாக கீதா பாட்டியும் காப்பி பேஷ்ட் செய்து விட வேண்டாம். :p

//எங்கே வாங்கனீங்க? எந்தக் கவுன்ட்டரில் வாங்கனீங்க? விருட்சப் பிரசாதம்-னு விக்கறாங்களே TTD-இல்!//

@ரவி அண்ணா! திருப்பதிய கொஞ்சம் விட்டு வைங்க. :p

கோபிநாத் said...

டீச்சருக்கு இங்கையும் ஒரு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வல்லியக்கா!
துளசியும்;துளசியக்காவும் நல்லா இருக்கவேண்டும்.
இரண்டுமே எல்லோருக்கும் நல்லதே செய்வது.

வல்லிசிம்ஹன் said...

யோகன் இன்றுதான் உங்களை நினைத்தேன்

வாழ்த்துகளுக்கு நன்றிம்மா.