Blog Archive

Tuesday, November 06, 2007

248,ஒரு தூண் பாட்டியானது

நம் எல்லோருக்கும் தீபாவளி நல்ல ஆனந்த்தத்தையும், நிம்மதி,ஆரோக்கியத்தையும் கொடுக்க இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.



நம்பிக்கை வைத்தால் அதுவும் சிறிதும் தளர்வில்லா நம்பிக்கை இறைவனிடம் வைத்த சிறுவன் பிரகலாதன்.,போல் வைக்கவேண்டும்.

ஞானமும் பக்தியும் ஒன்று சேர மாலிடம் சரணம் அடைந்தவன்.



எத்தனை தடவை படித்தாலும் அலுக்காத அவதார மகிமை.

ஹிரண்யன் எப்போது என்ன கேட்பன், பிரகலாதன் அவனுக்கு என்ன பதில் சொல்வான்

என்று தெரிந்து கொள்ள நம் அழகிய சிங்கப் பெருமான் அத்தனை இடத்தில் அணுக் கூட இடைவெளி இல்லாது நிறைந்து இருந்தான்.

அந்தச் சின்னக் குழந்தைக்குப் பங்கம் வராமல் எல்லா இடர்களிலிருந்தும் காப்பாற்றிய நரஹரியே !!உனக்கு வணக்கம்.



ஹிரண்யன் மகனைப் பார்த்துப் பார்த்து வெதும்புகிறான்

அசுரகுலக் கொழுந்து,

இப்படி நாரணன் நாமம் சொல்லி

தன் எண்ணப்படி உய்யாமல், வேறு வழிப்படுகிறானே என்ற வருத்தம் மேலிட, இன்னும் ஒரு முறை முயற்சிக்கிறான்.



நீ சொல்லும் ஹரி எங்கே இருக்கிறான் என்று மகனை விளிக்க,

எங்கும் உளன் என் ஹரி என்று உறுதியுடனும் திண்ணமாகப் பதிலளிக்கிறான் சிறுவன்.



வெகுண்டெழும் அகங்காரத்துடன் பக்கத்திலிருந்த ஒரு தூணை உதைக்க,

தூண் பிளந்து நரசிம்மம் வெளி வருகிறது.



அதென்ன காட்சி!!!

அந்தத் தூணும் மற்ற எல்லா ஸ்தம்பங்களும் ஹிரண்யன் பார்த்துப் பார்த்துத் திட்டமிட்டுக் கட்டியது.

அதனால் கட்டிடம் கட்டிய போதே ஹரி அங்கே ஆவிர்ப்பவித்து விட்டான் என்று சொல்ல முடியாது!!



பன்னெடுங்காலம் காத்திருந்து , தான் அழிக்கப் போகும் அரக்கன்

எங்கே தட்டினலும் வெளிவரத் தயாராக எல்லாத் தூண்களிலும் விஷ்ணு இருந்தானாம்.



உலகைப் படைத்த பிரமன், அவனைத் தன் திரு வயிற்று உந்தியில் தாங்கும் பெருமாள்,

அவனையே ஈன்று புறம் தந்ததால் அந்த தூண் பாட்டியாகி விட்டது,.

நரசிம்ஹ அவதார வைபவத்தால்.
பொன்னிற பிடரி சிலிர்த்து எழ,

செந்நிறத் தாமரைக் கண்கள் சீற்றத்துடன் ஹிரண்யனை நோக்க,
சங்கும் சக்கரமும்
மேலிரு கைகளில் இருக்க
மற்ற இருகைகளில் நகங்களால் அரக்கனை இழுத்து
வீட்டு வாயில் படியில் பகலும் இரவும் சந்திக்கும் அந்திப் பொழுதில்
அமர்கிறான் நரசிம்மன்.
சிங்கத்தின் கர்ஜனை கேட்கிறது.
அடுத்த நிமிடம் அரக்கனின் வயிறு கிழிக்கப்படுகிறது.

அவன் வயிற்றிலும் நெஞ்சிலும் ஹரி துழாவிப் பார்க்கிறானாம். ஒருவேளை நம் நினைவு இவன் இதயத்தில் இருந்தால் அவனை வாழ விடலாம் என்று.

அந்தக் கருணையும் கண்மூடி நாரண ஜபத்தில் இருக்கும் பிள்ளை பிரகலாதனுக்காக!!

ஹிரண்யன் குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொள்ளும் பெருமாள் அதே கரத்தைப் பிரகலாதன் தலையில் வைக்கிறான்.

ஒரு க்ஷணத்துக்கு முன்னால் தீ உமிழ்ந்த கண்கள்
பிரகலாதனை வாஞ்சையோடு பார்க்கின்றன.

இனி உன் சந்ததிக்கு தீங்கு செய்யேன்.
உன் வழி பிறந்த வம்சத்திற்கு என்னால்
அரக்க வதை இனி கிடையாது என்று
வரம் கொடுக்கிறான்.
அந்தப் பிரதிக்ஞையால் தான் மஹா பலிச் சக்கரவர்த்தி,
தாத்தா பிரகலாதன் செய்த புண்ணியத்தால்,
வாமன அவதாரத்தில்,
திருமால் காலடியைத் தலையில் தாங்கி, உயிர் பிழைக்கிறான்.

காருண்யா,லக்ஷ்மிந்ருசிம்ஹா
எங்கும் என்றும் சுபிக்ஷம் நிலவ நீதான் அருள வேண்டும்.

அனைத்து வலை நண்பர்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.




























Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

32 comments:

Baby Pavan said...

பாட்டிக்கு என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்....அன்புடன் பவன்.

மெளலி (மதுரையம்பதி) said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் வல்லியம்மா..

மாலோல நரஸிம்மர் எல்லோரையும் காக்கட்டும்.

இலவசக்கொத்தனார் said...

தூண் பாட்டி ஆன லாஜிக் நல்லாவே இருக்கு. வாழ்த்துக்கள் வல்லிம்மா.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாழ்த்துக்கள் வல்லியம்மா

ராஜ்யலக்ஷ்மி நிவாசாய ராஜத்வேஷ நிவாரினே
மட்டபல்லி நிவாசாய ஸ்ரீ பக்த பிரஹாலாத பராதீன ஸ்ரீலக்ஷ்மிநிருசிம்ஹாய மங்களம்

தி. ரா. ச.(T.R.C.) said...

பாத்திராத்தையும்
இங்கு உம் என்பது இழிவுச்சிறப்பு உம் மை என்பார்கள்
சமையலும் செய்து பரிமாறி மற்றும் பாத்திரத்தையும் தேய்த்து..........
இல்லைய்யா அம்பி

Geetha Sambasivam said...

தீபாவளி வாழ்த்துக்கள் வல்லி,
அது சரி, வல்லி எப்போவுமே "அழகிய சிங்கம்" தான் பிடிக்கும் போலிருக்கு! சிங்கத்துக்குத் தெரியும் இல்லையா? இந்த சிங்கத்துக்கும் அந்தச் சிங்கம் பிடிக்கும் இல்லையா? :))))))))))))))))))))))

Geetha Sambasivam said...

தீபாவளி வாழ்த்துக்கள் வல்லி,
அது சரி, வல்லி எப்போவுமே "அழகிய சிங்கம்" தான் பிடிக்கும் போலிருக்கு! சிங்கத்துக்குத் தெரியும் இல்லையா? இந்த சிங்கத்துக்கும் அந்தச் சிங்கம் பிடிக்கும் இல்லையா? :))))))))))))))))))))))

நாகை சிவா said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் :)

Radha Sriram said...

தீபாவளி வாழ்த்துக்கள் வல்லி.....

துளசி கோபால் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்து(க்)கள்.

(ந்ரு)சிம்ஹனை மறக்க முடியுமா? அதுவும் நீங்க......?:-)

வல்லிசிம்ஹன் said...

நன்றி பவன் பேபி. இந்த தீபாவளியும்
வரப்போகும் எல்லாத் தீபாவளிகளும் நல்லதாகவும் இனிமையாகவும் இருக்க வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மௌலி.


குடும்பம் வளத்தோடு வாழ வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ்,
தீபாவளி நல்வாழ்த்துகள்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ்,
தீபாவளி நல்வாழ்த்துகள்.
நன்றிம்மா.

ambi said...

//உம் என்பது இழிவுச்சிறப்பு உம் மை என்பார்கள்
சமையலும் செய்து பரிமாறி மற்றும் பாத்திரத்தையும் தேய்த்து..........
இல்லைய்யா அம்பி
//

சரியாக சொன்னீர்கள் TRC சார்.

//ஒருவேளை நம் நினைவு இவன் இதயத்தில் இருந்தால் அவனை வாழ விடலாம் என்று.
//
@valli madam, மிக அருமையான விளக்கம். இன்னிக்கு தான் கேள்விபடறேன்.

எனக்கும் நரசிம்மர் இஷ்ட தெய்வம். சுதர்ஸன சக்ரமே அவர் கை நகங்களா வந்தாரே! அத விட்டுடீங்களே! :)

மாமாவுக்கு பர்த்டேயா? வித்யாசமா இருக்கட்டும்னு இப்படி வாழ்த்து சொல்றீங்களா? :p

வல்லிசிம்ஹன் said...

உங்களுக்குமம:))0
நரசிம்ஹன் மாதிரி உண்டா.
இது பெருமாளைப் பத்தி மாத்திரம் அம்பி.!!
அஃப்கோர்ஸ் எங்க சிங்கம் மாதிரி யாருமே கிடையாது:))

தலை தீபாவளி சென்னைக்கு வந்துடுத்தா??
தங்க மணிக்கும் உங்களுக்கும் மனசு நிறைன்ந்த நல்வாழ்த்துகள்.

சுதர்சனம் நகங்களானதை மறந்து விட்டேனே.

இத்தனைக்கு சுதர்சன் நரசிம்ஹ பிரபாவம் எப்பவோ கேட்டாச்சு.

நன்றி நன்றி நன்றி. இளித்தவாயன்னு கூட அவனுக்குப் பெயர்.
சிரித்த சிங்கத்துக்குப் பல்லாண்டுனு ததன் சொல்லணும்.

எத்தனை உம் போடணும்னு தெரியலையே.
வீடும் பெருக்கி, சமையலும் பண்ணி,
பாத்திரமும் தேச்சு,
சாமி!!!!!
யூ ஆர் டூ குட் டு பி ட்ரூ:))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.
சிங்கம் எப்பவுமே பிடிக்கும்.
மதுரை சிம்மக்கல் பிடிக்கும்.
சிவகாமியின் நரசிம்ம பல்லவனையும் பிடிக்கும்.லக்ஷ்மியுடன் சேர்ந்த
நரசிங்கப் பெருமாள் குலதெய்வம்.
அவரையும் பிடிக்கும்.

நீங்க சொல்றவரையும் ரொம்பப் பிடிக்கும்.:)))
உம் என்ற வார்த்தை தொற்றுகிறது எல்லாரையும்:))

வல்லிசிம்ஹன் said...

சிவா புலி,
குடும்பத்துக்கும் உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். வரப்போகும் தீபாவளிகள் துணையோடு (நல்லதொரு தங்கமணி) கொண்டாடும்படி அமைய வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச ரொம்ப நன்றி.
மட்டப்பல்லி நிவாசன் நம் எல்லோர் குடும்பங்களில் ஒளி பெருக்கிச் சந்தோஷம் பொங்க வைக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ராதா.
ரொம்ப நன்றி.
வாழ்த்துக்கள்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிம்மனைப் பற்றிச் சிம்ஹன் சொன்னா சுவைக்குக் கேட்கவும் வேண்டுமா?

தூண் பாட்டி ஆன கதை சூப்பர் வல்லியம்மா!
பொதுவா பிரம்மனைப் பிதாமகர்ன்னு சொல்லுவாங்க! தாத்தாவுக்கு எல்லாம் தாத்தா!
தாத்தாவுக்கு எல்லாம் தாத்தாவிற்கு ஒரு பாட்டின்னா...அடடா!

நரசிம்ம அவதாரத்தில் தான் துஷ்ட நிக்ரகமும் சிஷ்ட பரிபாலனமும் கண் மூடிக் கண் திறப்பதற்குள் நடக்கிறது!
Shortest அவதாரம்-னா இது தான்!
சில மணித்துளிகளே இருக்கிறான் இறைவன்! கடிகை நேரத்தில் அவதாரம் முடிந்து விடுவதால் தான் சோளிங்கபுரம் கூட திருக்கடிகை என்று வழங்கப்படுகிறது!

ஆண்டாள் என்ன தான் அரங்கனை விரும்பினாலும், அவனோடு திருமணம் என்று வரும் போது, அதை நல்லபடியாக நடத்தித் தர நரசிம்மனைத் தான் வேண்டுகிறாள்!
என்ன காரணம் தெரியுமா?

அயோத்தியில் அரங்கனை வேண்டிப் பட்டாபிஷேகக் கோலம் கொண்ட இராமன், கடைசியில் காட்டுக்குச் செல்ல வேண்டி வந்தது!
அதனால் உன்னை வேண்டப் போவதில்லை, போங்கய்யா என்று செல்லமாகச் சிணுங்கிக் கொண்டு பக்த வரப் ப்ரசாதியான நரசிம்மனைத் தஞ்சம் புகுந்தாள்! கனவும் நனவாகியது! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கூடவே அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!

//உம் என்பது இழிவுச்சிறப்பு உம்-மை என்பார்கள்
சமையலும் செய்து
பாத்திரத்தையும் தேய்த்து..........
இல்லைய்யா அம்பி
//

கலக்குறியா அம்பி! :-)
சிறப்பும்மையால் சிரிப்பித்த உம்மைச் சிறப்பித்தால் சாலவும் தகும்! :-))

குமரன் (Kumaran) said...

வல்லியம்மா. 'ஒரு தூண் பாட்டியானது' என்ற தலைப்பைப் பார்த்தவுடனேயே ஆகா அம்மா ப்ரஹ்லாதவரதனின் வைபவத்தைச் சொல்லியிருக்கிறார் என்று ஓடி வந்தேன். ஏமாற்றவில்லை.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தீபாவளி நல்வாழ்த்துகள்.

Jayashree said...
This comment has been removed by a blog administrator.
செல்லி said...

உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரவி.
என்ன அற்புதமான விளக்கம்.
இந்த சொல்லாடல் வர என்ன தவம் செய்தீர்களோ.

முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாசாரியார் ஸ்வாமி சொல்வாரே.
ரங்கநாதன்...லக்ஷ்மிந்ருசிம்ஹன் என்று கலகலனு செய்து பேசுவார்:)))
என்னவோ ஸெஈ சிங்கனைச் சொல்லணும்னு தோணியதால் எழுதினேன்.
ரொம்ப யோசிக்காமல் கையில் வந்ததைஏழுதிட்டேன்.

நிதானமா எழுதி இருக்கலாம்.
எல்லாம் அவன் வேலைதா:))
நன்றிம்மா.
தீபாவளி நல்லா கொண்டாட முடிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

குமரன்!! வரணும்.

நீங்கள் எல்லாம் வந்து சொல்றதே
ரொம்ப ஆனந்தமா இருக்கு.
ப்ரஹ்லாத வரதன் வைபவம் சொல்லி முடிக்கக் கூடிய விஷயமா.
எப்பவும் அவனை நினைக்கிற மனசைக் கொடுக்கட்டும்.
குழந்தைகளுக்கும் மனைவிக்கும் தீபாவளி வாழ்த்துகள் சொல்லுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி செல்லி.

குமரன் (Kumaran) said...

அம்மா. நீங்க என்ன அர்த்தத்துல சொன்னீங்கன்னு தெரியலை.

உங்க எல்லா இடுகைகளையும் படிச்சுக்கிட்டு தான் இருக்கேன் அம்மா. சிலதுக்குத் தான் பின்னூட்டம் போடறேன்.

உங்கள் தோழியுடன் 12 மணி நேரப் பிரிவைப் பற்றி எழுதியிருந்தீங்களே. அது தான் இந்த இடுகைக்கு முன்னாடி படிச்சது. :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வல்லி அக்கா!
இனிய வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமரன்,
வலையில் தமிழ்மாணத்தில்,
நீங்கள், ரவி,தி.ரா.ச,ராகவன்,வி.எஸ்.கேசார்
எல்லோரும் வெகுவாகப் படித்து
நிறைய, அழகான அர்த்தத்தோட எழுதறவங்க.
அதைத்தான் சொன்னேன்.
I really appreciate this .

சரியா:))))

வல்லிசிம்ஹன் said...

நன்றி யோகன்.:)0)