Blog Archive

Tuesday, May 22, 2007

ஒரு மருத்துவமனை விசிட்



எப்பொழுதும் யாருக்குமே

பிடிக்காத விஷயங்கள் எத்தனையோ இருக்கும்.

அதில் பள்ளிக்கூடத்துக்குப் போவதிலிருந்து,

பல் வைத்தியர் காது,மூக்கு,தொண்டை என்று லிஸ்ட் நீளும்.

நானும் அந்த வகையைச் சேர்ந்தவள்தான்.

எத்தனை நாட்கள் வேதனை தாங்க முடியுமோ அத்தனை நாள் பொறுத்துக் கொண்டு இனி நம்மால் முடியாது என்று வைத்தியரை அணுகுவது என் வழக்கம்.

எத்தனை நாளாக இந்தத் தொல்லை என்று அவர் கேட்டால் பொய் சொல்லவும் தெரியும்.

இதோ நேத்திலேருந்துதான் இப்படி இருக்கு என்றதும்

அவர் ஒரு மாதிரி தான் பார்ப்பார்.

என்ன மருந்து எடுத்தீர்கள் என்று கேட்டல் இருப்பதிலியே சாதாரண மாத்திரைகள் பெயர் சொல்லிப்

போக்கு காட்டுவதும் உண்டு.

அதே மாதிரி மெடிக்ளைம் இன்ஷுரன்ஸ் எடுக்கப் போனபோதுதான் எத்தனை இனிப்பான

நபர் நான் என்று தெரிந்தது.

மற்றவர்கள் நினைப்பு இத்தனை நாட்கள் ெப்படி வராமல் இருந்தது? இவள்தான் நாற்காலியில் இருந்து எழுவது

மூன்று வேளை தான்.

சாப்பிட,சாமிகும்பிட,தூங்க.

ரொம்ப நாளா இருந்து இருக்கும்.

இப்பதான் தெரிய வந்தது.

இப்போ நமக்கு வரும் ஞானம் எதிர்காலத்தைப் பற்றி.

முதல் கண்டிஷன் ரெகுலர் டைபெடிக் க்ளினிக் விசிட் .

அப்படி நேற்றும் எனக்குக் கட்டாய (:-)) பரிசோதனை

ஒன்று இருந்தது.

அப்படி வழக்கமாகப் போவது போல க்ளினிக்கிற்கு

சென்றேன்.

போனதும் கண்ணில் படுவது இரண்டு வகை மனிதர்கள்,

ரொம்ப குண்டாக இருப்பவர்கள்.ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள்.

எனக்கு ஏனென்று புரியவில்லை.

அப்புறம் இந்த டைபெடிக்கிலும் ரெண்டு ஜாதியாம்.

ஊசி போட்டுக்கிற ரகம் ஒல்லியா இருக்குமாம். மாத்திரை

(நான்) மட்டும் எடுத்துக் கொள்ளும் ரகம் (கொஞ்சம்)

ஓவெர் வெயிட்டாக இருக்குமாம்

இதல்ல நான் சொல்ல வந்தது.

நேற்று நான் போய் உட்கார்ந்ததும் என் கண்களில் பட்டவர்கள் என்னை ஆச்சரியப் பட வைத்தனர்.

ஒரே கலப்படமாக ஜோடிகள்.அம்மா பெண், கணவன்பெண்டாட்டியும், மாமியார் மருமகள்.

வயசான முன்பு பிரபலமாக இருந்த டாக்டர்,

ஒரு கர்னாடக இசைப் பாடகி

என்று.

அதில் ஒரு அம்மா தனியாகத் தெரிந்தார்,.

நாற்காலி பூராவும் அவர் நிறைந்து இருந்ததால்

அவருக்கு நம்ம 'சுகரினம்' என்று நினைத்தேன்.

அவர் கணவர் அவரைவிட சோகமாக தன்னுடைய முறைக்காகக் காத்து இருந்தார்,.

அவர் அந்த அம்மாவை என்ன , எல்லாம் ரெடியா வச்சு இருக்கியா, மருந்து டப்பா சரியா இருக்கா எல்லாத்தையும் கவனம் பண்ணிக்கோனு சொல்லிக் கொண்டே இருந்தார்.

அவங்களும் தலையை ஆட்டி சரி சரின்னு பதில் சொன்னாங்க.

அவர்கள் முறை வந்தது ,இருவரும் மருத்துவர் அறையில் போனார்கள்.

பத்து நிமிடத்தில் வெளியில் வந்ததும் கணவர் உட்கார்ந்து கொண்டார்,.

அந்த அம்மா அங்கிருந்த உதவியாளரிடம், பக்கம் போய் நின்று விவரம் கேட்டுக் கொள்ள ஆரம்பித்தார்.

அவர்களுக்குள் எதிர்பாராமல் வார்த்தைகள் சூடாக வந்தன.

அந்த அம்மா திடீரென ஆங்கிலத்தில் பேசஆரம்பித்தார்.

நாங்க வெளியூரிலிருந்து வருகிறோம்.

ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டுமென்றால் எங்களுக்கு முதலில் நீங்கள் சொல்ல வேண்டும்.//

"you shd have thought of informimg us before hand.

It is not easy to commute from chengalpat

and be told we have to stay here for three more days!!"

அப்படியே எல்லாரும் திகைப்புடன் பார்க்கும்

போது, எனக்குப் புரிந்தது யார் நோயாளி, யார் கூட வந்தவர் என்று,.

இந்த அம்மா நடக்கும் வேகத்துக்கும் அவர் உடலுக்கும்

சம்பந்தமில்லை.

அவர் தோற்றத்திற்கும் அவர் அறிவுக்கும்

சம்பந்தமில்லை.

அதே போல, வெள்ளையும் சள்ளையுமாய் இருந்த அவர் கணவருக்கும் அவர் உடல் நலக்குறைவுக்கும் சம்பந்தமில்லை.

அந்த அம்மாவுக்கும் அதிகாரம் செய்யும் அவர் கணவருக்கும் மட்டும் ஏதோ பொருத்தம் இருந்தது.

வெறும் சந்தர்ப்பங்களையும், உடை,தோற்றங்களையும் வைத்துமனிதர்களை அறிய முடியாது,

என்ற உண்மை மீண்டும் என் அறிவில் உரைத்தது.

என்ன பொருத்தம் உலகில் இந்தப் பொருத்தம்?

14 comments:

துளசி கோபால் said...

உருவத்தைப் பார்த்து எதையும் 'எடை' போட முடியாதுதான்.

பதிவு எழுத ஆரம்பிச்சதும் எங்கே போனாலும் நடக்குற விஷயங்களை மனசு அப்படியே புடிச்சு வச்சுக்குத்து:-))))))))

வல்லிசிம்ஹன் said...

அது என்னவோ நிஜம்தான் துளசி.
இதை பார்த்ததும் உடனே எழுதணும்ன் தோணித்து.

வந்தாச்சா ஊருக்கு.
துளசிமணம் இல்லாமல் தமிழ்மணம்

காலியா இருக்கு.:-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வல்லியம்மா

//எத்தனை நாட்கள் வேதனை தாங்க முடியுமோ அத்தனை நாள் பொறுத்துக் கொண்டு இனி நம்மால் முடியாது என்று வைத்தியரை அணுகுவது என் வழக்கம்//

இது ரொம்ப தப்பாச்சே! நாங்க எல்லாம் இப்படி செய்தா, நீங்க சும்மா இருப்பீங்களா? உடனே டாக்டரிடம் கிளம்புன்னு சொல்வீங்களே? ஸோ அதே ரூல்ஸ் தான் உங்களுக்கும். உடல் நலனைப் பத்திரமா பாத்துக்குங்க - இப்படிக்கு பெரிய மனுஷன் :-)))

//வெறும் சந்தர்ப்பங்களையும், உடை,தோற்றங்களையும் வைத்துமனிதர்களை அறிய முடியாது
என்ற உண்மை மீண்டும் என் அறிவில் உரைத்தது//

'உருவு கண்டு எள்ளாமை வேண்டும்' ன்னு சொன்னார் வள்ளுவர்
இப்ப எல்லாம் உருவு கண்டு எடை போடாமையும் வேண்டும்' போல!

வல்லிசிம்ஹன் said...

அடியேன்.பெரியமனுஷர் சொல்றதைக் கேட்கிறேன்.
அதானப்பா பண்ணறோம், எப்பவும்.
அப்பா அம்மா,மாமனார்,மாமியார்
பேச்சைக் கேட்டாச்சு.
இப்ப போனில்,கம்ப்யூட்டரில், நேரடி சாட்டில் அறிவுரை வெள்ளம் தான்.
அம்மா செக் செய்தியா.அம்மா நடந்தியா.
ம்ஹூம் ,, நீங்களெல்லாம் குமாரசாமிங்க.
நன்றி கண்ணபிரான்.
அருமையான பின்னூட்டம்.

ஆமாம் அந்த அம்மாவைப் பார்த்த அதிர்ச்சி எனக்கு இன்னும் போகவில்லை.
ஃபண்டாஸ்டிக் லேடி.

வல்லிசிம்ஹன் said...

எனக்குப் பூரியறது டெல்ஃபின்.
இனிமே ஜாக்கிரதையா இருந்துப்பேன்.

இல்லைன்னா கஷ்டப்படப் போறது நாமளும் சுத்தி இருக்கிறவங்களும்.

I am very regular in my diets and exerrcises.
thank u for the concern.

வல்லிசிம்ஹன் said...

yyes THulasi shd be back this week end.
u are absolutely right abt her absence.

it seems very empty.

துளசி கோபால் said...

ஆஹா..........என்னை(யும்) மிஸ் பண்ணும்
மனங்கள் இங்கே இருக்கே!!!!!

இதோ நாளைக்குக் கிளம்பிருவேன்.

பைபை ஆஸி.

ஹை ஹை நியூஸி:-)))

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க .இத்தனை நேரம் வந்திருப்பீங்க.

என்ன செய்யறது வயசான
காலத்தில சினேகிதிகளைப் பாக்கலைன்னா சங்கடமாப் போயிடுது...*****

இலவசக்கொத்தனார் said...

எல்லாரும் சொல்லறதை சொல்லிட்டாங்க. நான் வந்து டாக்டரைப் பார்க்கப் போறதில் உங்களை மாதிரிதான். தங்கமணி நேரெதிர் அப்படின்னு சொல்லவும் வேணுமா? :))

ஆளைப் பார்த்து ஏமாறாதேன்னு சொல்லிட்டாங்களே. இப்போ கூட நம்ம பதிவுலகத்தில் தலைப்பை பார்த்து பதிவை எடை போடாதேன்னு சொல்லறது இல்லையா?!

அப்புறம் டீச்சருக்கு ஐஸ் வெச்சா எல்லாம் கிளாஸில் பாஸ் ஆக முடியாது. (எனக்கும் வைக்கணுமான்னு எல்லாம் ஓப்பனா கேட்ககூடாது.) :))

வல்லிசிம்ஹன் said...

well isn.t that nice.thank u delphine.
only prob. I have crossed one too many twenties.

ofcourse this is my second inninings. so I am a little baby:-))))))))))))))))))

வல்லிசிம்ஹன் said...

வாங்க இ.கொ.
உங்க பதவியை யாராவது பறிக்க முடியுமா.
உங்களை மாதிரி வகுப்பைக் கண்ட்ரோல் பண்ணரவங்கதான் யாரு.
எப்பவுமே நீங்கதான்.
ஐயனே,முதல் மாணாக்கரே.வாழ்க வளர்க.

வல்லிசிம்ஹன் said...

அடடா தங்கமணி உங்களை அழைச்சுட்டுப் போயிடலாமே.

இந்தக் குணமெல்லாம்தான் நம்மளை ஒரே இடத்தில கட்டிப்போடறது..<<..>>>>>>>
தலைப்பப் பார்த்து யாரு ஏமாறராங்க.
சேச்சே.நாமெல்லாம் புத்திசாலிங்கப்பா.

?

Boston Bala said...

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ;)

வல்லிசிம்ஹன் said...

வாங்க பாலா.
உங்க ஊருக்கு வந்ததில் என் முகம் பளபளா.
அகமும் அதனால அப்படியேனு நினைக்கிறேன்:-)))))