Blog Archive

Wednesday, August 16, 2006

ஸ்ரீ கிருஷ்ணா,வாசுதேவா,கோவிந்தா

Posted by Picasa ஸ்ரீ கண்ணனைப் பற்றிப் பாட ,நினைக்க,ஸேவிக்க,
சரண் அடையப்
பல ஆயிர வருடங்களாய்த் தபசு
செய்யும் முனிவர்களும்,
அவனுக்குக் கோவில் கட்டிப் பூஜிக்கும் புண்ணியம் செய்தவர்களும்,
மதுரா, பிருந்தாவனம்,பத்ரினாத்,த்வாரகா
என்று
பக்தி பிரயாணம் செய்தவர்களும்,
அவனையே எண்ணி
ஏழைகளையும்
வலிவில்லாதவர்களையும்

சேவையினால் மகிழ்விப்பவர்கள் மத்தியில்
வெறும் புஷ்பம் சார்த்தி,
கும்பிடு போடும் என்னால் உனக்கு என்ன
கொடுக்க முடியும் கிருஷ்ணா?
வார்த்தைகள் மட்டுமே ,

வெளிவருவதால், பேச்சு கொடுத்ததற்கும்,
எழுத கையில் ,விரலில் பலம் கொடுத்த்தற்கும்,
உன்னை நினைக்க
புத்தி கொடுத்ததற்கும்,
பாகவதம் படிக்க கண்கள் தந்ததற்கும்,

உன்னைப் பாடக் குரல் கொடுத்தற்குமேதான் ,,
உன் சரண் அடைய வேண்டும். .

காப்பாற்ற நீ இருக்கிறாய்,.
இந்த எண்ணம் எப்போதும்
நெஞ்சை விட்டு நீங்காமல் ,,

இருக்க, அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
கண்ணா, காத்திடு.

12 comments:

ENNAR said...

வள்ளி நல்ல பதிவு நன்றாக உள்ளது கண்ணன் காப்பான் எல்லோரையும்

VSK said...

உணர்ச்சி பூர்வமான, உள்ளார்ந்த வேண்டுதல் அனவருக்கும் கிட்ட வேண்டுகிறேன்!

துளசி கோபால் said...

வல்லி,

இப்பத்தான் ப்ளொக் வந்துருச்சே. இனிமே எதுக்கும் பதிவுதான். நான் நேத்து நைவேத்யத்துலே
நம்ம பதிவையும் சேர்த்துட்டேன்:-))))

FAIRY said...

இது நீங்களே எழுதியதா? நல்ல prayer. ஒன்றும் செய்ய முடியாதவர்கள் வார்த்தையால் மட்டும் தானே கும்பிட முடியும்.

வல்லிசிம்ஹன் said...

ennar,நன்றி.
வாங்க.
காத்து இருப்பான் கமலக் கண்ணன்.

நினைக்கத் தான் மனசு வேண்டும்..அதான் அலை பாய்கிறதே.:-)

வல்லிசிம்ஹன் said...

sk,
vaNakkam.
இன்னொரு சரண ஸ்லோகம் எழுதி இருக்கணும்.
மறந்து விட்டேன்.
நன்றி.
கட்டாயம் காப்பான். சாட்சி கோபால் இல்லயா அவன்.

வல்லிசிம்ஹன் said...

துளசி அற்புதமான வேலை. ஆமாம் !
அவனையும் நம்மையும் ஏன் பிரித்துப் பார்க்கணும்/

நாம செய்யறது எல்லாம் அவன்தானே.
நல்லதுப்பா.

தி. ரா. ச.(T.R.C.) said...

பக்தி எண்ணமே இல்லாத அஜாமிளன் தன் பையனை "நாறாயணா" என்று கூப்பிட்டதற்கே அவனுக்கு விஷ்ணு பதத்தை அளித்த கருணை வள்ளல் அவன்
ஆதிமூலமே என்று ஒருமுறை அழைத்த கஜெந்திரனுக்கு விரைந்து சென்று மோக்ஷம்குடுத்தவன்.
குழந்தை பிரகலாதன் கூப்பிட்ட உடனே தான் தாமதம் செய்யாமல் வரவேண்டும் என்பதற்க்ககவே அண்டசராமெங்கும் அங்கு இங்கு என்று எனாதபடி எல்லா இடத்திலும் நீக்கமற நிரைந்து அந்தத்தூணிலும் நின்று அருள் புரிந்தவன்
என்னை பூஜிக்க ஆடம்பரம் வேண்டாம் பழம், இலை,தீர்த்தம் மட்டுமே போறும் என்று சொன்னவன்.
விதுரன் வீட்டில் பழத்தை விட்டு அவன் கொடுத்த தோலை மட்டும் தின்றவன்
அப்படிபட்டவன் நமக்கு கருணை காட்டாமலா இருப்பான். அவன் பிறந்தநாளில் அவனை நினைத்த உங்களையும் அதனால் என்னையும் அவனைப்பற்றி சிறிது எழுதத்தூண்டிய உங்களையும் நம்மையும் காப்பதை விட என்ன பெரிய வேலை.

வல்லிசிம்ஹன் said...

TRC,
வரவேண்டும். நன்றி.

நம்ம எல்லோருக்கும் இந்தக் கதைகளைச் சொல்லி நம் நம்பிக்கையை வளர்த்த பெற்றோருக்கும் நன்றி.
பொருனைகரையில் நீங்க போட்ட பின்னூட்டத்துக்குப் பதில் போட முடியவில்லை.
சரி செய்யப் பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

Fairy,

ஆமாம். நான் தினம் சொல்லும் ப்ரேயரில் இது ஒரு பகுதி.
சாமிகிட்ட தானே உண்மை பேசணும்,
முடியும்?
thanks.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வல்லி
கண்ணனை நினைக்காத நாளில்லையே!
அவன் மலரடி போற்றுவோம்;
யோகன் பாரிஸ்

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு யோகன் - பாரிஸ்.

ஒருமையுடன் நினது திருவடி மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்
என்று பாடல் உண்டல்லவா.
கண்ணனை நினைத்ததும்

அவன் நண்பர்கள் வந்துவிட்டார்கள்.
நன்றி.